வியாழன், 31 மார்ச், 2011

யாருக்கு அதிக வியர்வை?



     வெயில் காலத்தில் அனைவருக்கும் தான் வியர்க்கிறது. எனினும் யாருக்கு அதிகமாக வியர்க்கிறது என்பது குறித்து, ஜப்பானில் ஒசாகா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து உள்ளனர்.இந்த ஆய்வில் பெண்களை விட, ஆண்களுக்கு தான் அதிக வியர்வை ஏற்படுவதாக தெரிய வந்து உள்ளது. ஒரே மாதிரியான வெப்ப நிலை உள்ள இடத்தில், ஒரே மாதிரியான வேலையைத் தந்து இந்த ஆய்வை நடத்தினர்.






     ஆண்களின் உடலில், பெண்களின் உடலை விட அதிகளவு நீர்ச்சத்து இருப்பதால், ஆண்களுக்கு எளிதில் வியர்த்து விடுகிறது.ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையேயான ஹார்மோன் வேறுபாடு காரணமாகவும் வியர்வை சிந்துகின்ற அளவு மாறுபடுகிறது. இதனால் தான் பெண்கள் கடுமையாக வேலை செய்தாலும், அவர் களுக்கு எளிதில் வியர்ப்பதில்லை. இதனால் தான் "வியர்வை சிந்த உழைக்கிறோம்' என்ற வாசகம், பெரும்பாலும் ஆண்களை மையம் கொண்டே உள்ளது.

சனி, 26 மார்ச், 2011

இலவசம். இலவசம்..இலவசம்..

            சிலருக்கு சில பொருட்கள் இலவசம் என்ற நிலையிலிருந்து, இப்போது, பலருக்கு பல பொருட்கள் இலவசம் என்றபடி அரசியல்வாதிகளின் தேர்தல் பொருளாதாரம் வளர்ந் திருக்கிறது. இதை, இனி எதுவரை நீட்டிக்க முடியும்? எல்லாருக்கும் தினமும் பஸ்சில், ரயிலில், விமானத்தில் இலவச பயணம். எந்த ஜவுளி கடைக்கும் போய், ஜவுளிகள் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம். மளிகைக் கடைகளில் செருப்பு உட்பட எல்லா பொருட்களும் இலவசம். யாரும், எதற்கும் பணம் கொடுக்க வேண்டாம். மின்சாரம், பால் எல்லாமே இலவசம். 

             எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுத்தால், மக்கள் சோம்பேறிகளாகி விடுவார்களே... அவர்கள் தங்கள் பிள்ளைகளை பொறுப் பற்றவர்களாக வளர்ப்பார்களே, அது ஒரு சமுதாய அவலமாயிற்றே என்று சிந்திக்கத் தெரியாதவர்களா நம் அரசியல்வாதிகள்... எல்லாம் தெரிந்தவர்கள் தான். ஆனால், சமுதாயத்தின் பொருளா தாரத்தை இலவசங்கள், சலுகைகள், மானியங்கள் மூலம் குலைத்தால் தான் சுரண்ட முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். எந்த முதல்வர், தான் உழைத்து சம்பாதித்த பணத்திலிருந்து அதைக் கொடுக்கப் போகிறார்... எல்லாம் வரி கொடுப் பவர்களின் பணம் தானே. ஆனால், இலவசங்கள், மக்கள் தரும் வரிப் பணத்திலிருந்து வருவதாக எந்தப் புண்ணிய வான் அரசியல்வாதியும் சொன்னதாகத் தெரியவில்லை. தங்கள் படத்தை, பெயரையும் போட்டுக் கொண்டு, இதையெல்லாம் தாங்களே தருவதாக பசப்புகின்றனர்.

             அண்ணாதுரை தன் நிதிநிலைக் கொள்கை, Tap the rich; put the poor என்று சொன்னதாகச் சொல்வர். அவரது பெயரை அனுதினமும் சொல்லிக் கொள்ளும் திராவிட இயக்க அரசியல்வாதிகள், "ஏழை மக்களே! உங்களுக்கு உதவுவது, வசதியான உங்கள் சகோதரர்களே' என்று ஏன் எடுத்துச் சொல்வதில்லை? பணக்காரர்களுக்கு, பெரிய தொழிலதிபர்களுக்கு சலுகைகள் செய்யும் வழியில், தம் சொந்த கஜானாவை அரசியல்வாதிகள் வளப்படுத்திக் கொள்கின்றனர். நலத்திட்டங்கள் என்ற பெயரில் அரசு கஜானாவிலிருந்து வெளியேறும் பணமும் வெவ்வேறு சதவீதங்களில் அரசியல்வாதிகளையும், அதிகாரி களையும் திருப்திபடுத்தி விட்டே செல்கிறது. இதைவிட பெரிய தேசியத் திருட்டு வேறு எதுவும் இல்லை. இந்தத் திருட்டை செய்து கொண்டு ஆட்சியில் இருப்பவர்களுக்கு, ஒரு பிக்பாக்கெட்காரனை போலீஸ் மூலம் பிடித்து கோர்ட் மூலம் தண்டனை தரச் செய்வதற்கு எந்த தார்மிக உரிமையும் இல்லை.

              அரசாங்கத்தின் பணம், ஆள்பவர்களின் பணம். திருட்டுத்தனமாக சேர்த்ததில் ஏதோ ஒரு சொற்ப சதவீதம், மக்களுக்கு, மறைமுகமாக ஓட்டுக்குப் பணம் என்ற பெயரில் தரப்படுகிறது. ஆட்சிக்கு வந்தவுடன், அரசாங்க செலவில் அடுத்த தேர்தல் வரை விசுவாசத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக அரசாங்க செலவில் சலுகைகள், மானியங்கள் தரப்படுகின்றன. இவை, அடித்தட்டு மக்களை சோம்பேறிகளாக ஆக்குகின்றன. நாட்டின் பொருளாதாரத்தை முடமாக்கி விடுகின்றன. "ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும்' என்ற வாசகத்தின் பொருள், ஏழைகள், ஏழைகளாகவே இருந்தால் தான் எங்கள் இலவசங்களைப் பெற்று, எங்களுக்கே ஓட்டளிப்பர் என்பது தான். சுயமரியாதை, இனமானம் என்றெல்லாம் பசப்பு வார்த்தைகளில் பேசுபவர்களே, அடித்தட்டு மக்களை ஏழை களாகவும், சோம்பேறிகளாகவும் வைத்திருக்க விரும்புகின்றனர். இது, மக்களுக்கு தெரிந்திருக் கிறது; புரிந்திருக்கிறதா என தெரியவில்லை. "அறியாமை ஆனந்தம்' என்பது ஒரு ஆங்கிலப் பழமொழி. பாமரர்களின் அறியாமை, அரசியல்வாதிகளின் ஆனந்தம். வரி செலுத்துபவர்களுக்கு வருவதில்லை ஆனந்தம்.


         வீணடித்தால் அபராதம்: சலுகை விலை அரிசி போய், இலவச அரிசி வந்திருக்கிறது. அதை எல்லாரும் பயன்படுத்துவதில்லை. விற்றுவிடுகின்றனர். ஆனால், மட்டமான அரிசி விளைவதில்லை. நம் பராமரிப்பு அவலமானது. அரிசியை மட்டுமல்லாமல் பிற தானியங்களையும் வீணாக்குகிறோம். பொருளாதாரம் நமக்குப் புரிவதில்லை. 

இதோ ஒரு நிகழ்ச்சி:

      ஐந்தாறு இந்திய இளைஞர்கள், ஒரு ஜெர்மானிய உணவகத்தில் நுழைந்தனர். மேஜைகளில் உட்கார்ந்திருந்த ஜெர்மானியர், பண்டங்களை வீணாக்காமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். நம் இளைஞர்கள், ஒரே நேரத்தில் பல பண்டங்களை வரவழைத்தனர். மூன்றில் ஒரு பகுதியை வீணடித்தனர். "பில்' கொடுத்துவிட்டு எழுந்து போகும்போது, பக்கத்து மேஜையில் இருந்த ஒரு பெண்மணி, "ஏன் இப்படி உணவுப் பண்டங்களை வீணடிக்கிறீர்கள்' என்று கேட்க, அவர்களுக்குள் வாக்குவாதம் வந்தது. இந்திய இளைஞர்கள் சொன்னார்கள், "அதனால் உனக்கென்ன நஷ்டம்? நாங்கள் மொத்தத்திற்கு பணம் கொடுத்துவிட்டோமே...' உடனே அந்தப் பெண்மணி, மொபைல் போனில் யாரிடமோ பேச, அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்த ஜெர்மானிய போலீஸ்காரர், "ஐம்பது மார்க் அபராதம் விதிக்கிறேன். உங்களிடம் பணம் இருக்கலாம். ஆனால், இங்கே வீணாகியிருப்பது ஜெர்மானியர்களின் உழைப்பு. உணவுக்கு தவிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்' என்றார். அபராதத்தைக் கட்டிய இந்திய இளைஞர், அதன் பிரதியை நண்பர்களிடம் கொடுக்க, அதை அவர்கள் தங்கள் வீட்டுச் சுவர்களில் ஒட்டிவைத்திருக்கின்றனர். சிக்கனத்தை நினைவுபடுத்த! இதேபோல், நம் பணத்தை வீணடிக்கும் அரசியல்வாதிகளுக்கு, அபராதம் விதிக்கலாமா? தாராளமாக. எவ்வளவு வேண்டுமானாலும் அபராதம் விதிக்கலாம். அவர்களும் அதைக் கட்டிவிடுவர், நம் பணத்திலிருந்து!

ஆர்.நடராஜன், கட்டுரையாளர், அமெரிக்க தூதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்

இந்தியா - பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டி


மொகாலி: உலக கோப்பை கிரிக்கெட் தற்போது கடும் உச்சக்கட்டத்தை தொட்டிருக்கிறது. பல கட்டமாக முடிந்து அரை இறுதியை தொட்டிருக்கும் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் இந்தியாவின் வெற்றி அதிக தொலைவில் இல்லை என்ற அபார நம்பிக்கையை வளர்த்துள்ளது. இந்த முறை இந்தியா உலககோப்பையை நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவிடம் இருந்து தட்டிப்பறிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைவிட இந்தியா- பாகிஸ்தான் மோதும் ஆட்டம் என்றால் ஆர்வத்திற்கு சொல்லவே வேண்டாம். இரு தரப்பு ஆட்டம் யுத்தம் நடக்கும் போது யாருக்கு வெற்றி கிட்டும் என்ற முடிவை எதிர்நோக்கியிருப்பது போல் ரசிகர்கள் வரும் 30ம் தேதிக்காக ஆர்வமாக காத்திருக்கின்றனர். 

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் புதன்கிழமை நடக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் மோதுகிறது. இதற்கான டிக்கெட் வாங்கிட கடும் போட்டி நிலவுகிகிறது. பலர் டிக்கெட் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். இரு நாட்டு தரப்பிலும் இருந்து ரசிகர்கள் வரவுள்ளதால் டிக்கெட்டுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஆயிரம் ரூபாய் டிக்கெட் ஏழாயிரம் வரை பிளாக்கில் விற்கப்பட்டு வருகிறது. 

இந்த போட்டியை காண இந்திய பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசியல் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, பிரதமர் கிலானிக்கும் ஆட்டத்தை காண வருமாறு பிரதமர் தரப்பில் இருந்து வரவேற்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இருவரும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜெட் விமானம் நிறுத்த இடம் கிடைக்காமல் தவிப்பு:இங்குள்ள நட்சத்திர ஓட்டல்கள், லாட்ஜ்கள் இப்போதே ஹவுஸ்புல்லாகி விட்டன. இந்தியாவில் உள்ள பெரும் தொழிலதிபர்கள், இங்கு குவிய தயாராகி வருகின்றனர். இவர்கள் செல்லும் தங்களுடைய ஜெட் விமானத்தை நிறுத்திக்கொள்ள இடம் ஒதுக்குமாறு அரசு அதிகாரிகளிடம்மும், விமானதுறையினருடமும் கேட்டு வருகின்றனர்.பல விமானங்களை சண்டிகாரிலோ அல்லது அருகிலோ நிறுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வரும் புதன்கிழமை மதியம் முதல் இரவு வரை மொகாலி ஆர்வ மின்னொளியில் ஜொலிக்க தயாராகிறது.

புதன், 23 மார்ச், 2011

ரஜினிக்கு ஜப்பான் பிரதமர் அழைப்பு!


                பூகம்பம்-சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பான் நாட்டுக்கு வருகைத் தரும்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, அந்த நாட்டின் பிரதமர் அழைப்பு விடுத்திருக்கிறார். சுனாமி பாதித்த ஜப்பான் மக்களுக்காக சென்னையில் நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் இந்த தகவலை ரஜினி வெளியிட்டார். ஜப்பானில் பூகம்பத்தாலும், சுனாமியாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் இந்தோ-ஜப்பான் சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு அந்த அமைப்பின் தலைவர் வீரமணி தலைமை தாங்கினார்.

  அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டு ரஜினி பேசியதாவது:
ஜப்பானிய மக்கள் எவ்வளவு பெரிய துன்பங்கள் வந்தாலும் அதிலிருந்து மீண்டு, உடனே திரும்ப எழுந்துவிடுவார்கள். கடினமாக உழைக்கிற மக்கள் அவர்கள். அந்த மக்களுக்கு இயற்கை தொடர்ந்து இன்னல்களைக் கொடுத்து வருகிறது. எவ்வளவு இன்னல்கள் வந்தாலும், தியானம்-பிரார்த்தனை மூலம் அவர்கள் மீண்டும் சகஜ நிலையை அடைந்துவிடுவார்கள்.

   அவர்களுக்காக இறைவனிடம் நான் பிரார்த்தனை செய்கிறேன். ஜப்பானிய மக்கள் மிகவும் கட்டுக்கோப்பானவர்கள். கடமை தவறாதவர்கள். அங்கு சுனாமி வந்தபோது, ஒரு ரெயிலில் டிக்கெட் பரிசோதகர் சோதனை செய்துகொண்டிருந்தார். அப்போது அவர், பயணிகளிடம் நம் நாட்டை சுனாமி தாக்கியிருக்கிறது. என்றாலும் நான் கடமையில் இருந்து தவறமாட்டேன் என்று கூறி, தொடர்ந்து தனது கடமையை செய்திருக்கிறார்.
இன்னொரு இடத்தில் மக்கள் வரிசையாக நின்று பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள். சுனாமி தாக்கியதும் அவர்கள் சிதறிப் போனார்கள். சுனாமி அடங்கியபின் மீண்டும் அவர்கள் அதே வரிசையில் நின்று பொருட்களை வாங்கியிருக்கிறார்கள். இதுபோன்ற கட்டுக்கோப்பும், கடமை உணர்வும்தான் ஜப்பானியர்களின் மிகச் சிறந்த குணம். ஜப்பானுக்கு வரும்படி என்னை, அந்த நாட்டின் பிரதமரும், சில முக்கியஸ்தர்களும் அழைத்திருக்கிறார்கள்.
  
  இப்படி இருக்க... நமது நாட்டில் ரயில்வே விபத்து       பஸ் விபத்து மற்றும் பூகம்ப சமயங்களில்  சில சமூக விரோதிகளால் பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்து சென்றனர் என்ற செய்தியை  கேள்வி பட்டிருகின்றோம் , ஆனால் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு அங்கு பசி பட்டினிக்காக, ஒரு கொலை, கொள்ளை சம்பவங்கள் கூட நடைபெறவில்லை என்ற செய்தி நம்மை  வியக்க வைக்கின்றது...

வியாழன், 17 மார்ச், 2011

கொசுக்கள் பற்றிய கொசுறு செய்திகள்.

  • பெண் கொசுக்கள்தான் கடிக்கின்றன, ஆண் கொசுக்கள் சுத்த சைவம் , அவை பூவிலிருந்து தேனை மட்டும் குடிக்கின்றன ..பெண் கொசுக்களுக்குதான் முட்டை இடுவதற்காக இரத்தம் அருந்த வேண்டியிருக்கின்றது.,
  • கன்னிகொசுக்களை விட இனபெருக்கதிற்கு தயாராகும் பெண் கொசுக்களே அதிகம் மனிதனை கடிக்கின்றது .
  • உலகில் 2700  வகையான கொசு இனங்கள் உள்ளன. 
  • கொசு , காற்றில் அப்படியே அசையாமல் நிற்கவும், வட்டம் இடவும், தலைகீழாக பறக்கவும் , பக்கவாட்டில் மற்றும் பின்புறமாகவும் கூட பறக்கும் திறன் பெற்றாவை. 
  • சில கொசுக்கள் மழை பெய்துகொண்டிருக்கும்போது கூட, சிறு நீர்த்துளிகளில் சிக்காமல் வளைந்து பறந்து உடல் நனையாமல் பார்த்துகொள்ளகூடியவைகள்.    
  • நொடிக்கு 250 முதல் 600 தடவைகள் வரை கொசுவின் சிறகுகள் சிறகடித்துகொள்வதால்  அதன் சப்தம் நமக்கு ரீங்காரமாய் கேட்கிறது.  
  • கொசு நம்மை கடிக்கும் முன் நமது  உடலின் தட்ப வெப்ப நிலை, ரத்த ஓட்டம் ஆகியவற்றை அறிந்துகொண்டு சரியான இடத்தில அமர்ந்து ரத்தம் குடிக்கின்றது...
  • கொசுவின் வாயில் இரண்டு ரம்பங்கள் இருக்கின்றன . இவற்றினால் தொலை மென்மையாக துளைத்து ஊசியை உள்ளே நுழைத்து ரத்தத்தை உறிஞ்ச முடிகிறது .இந்த கருவிகள் , யானைத்தோல் போன்ற கழிவு தோள்களிலும் துளை போடும் அளவிற்கு சக்தி வாய்ந்ததாகும்.
  • இவைகள்  நம் உடலை குத்தும்போது லாடிக் அமிலத்தை வெளியேற்றுகின்றன , இந்த திரவம் நம் தொலை லேசாக மரத்து விடுவதால், சட்டென்று நமக்கு வலி உறைப்பதில்லை . 
  • வலி உரத்து கொசுவை நாம் அடிக்க கை ஓங்கும்போது நம் உடலில் ஏற்படும் அதிர்வை அவைகள் உணர்ந்து நாம் அடிக்கும் முன் சட்டென்று பறந்து போய்விடுகின்றது.

  • கொசுவுன் கண்கள் நூற்றுகணக்கான சிறு லென்சுகளால் ஆனவை. இருந்தாலும் சில அங்குலத்திற்கு மேல் அதனால் பார்க்க முடியாது.
  • ஒரு சொட்டு ரத்தத்தை கொண்டு 40 முதல் 50  கொசுக்கள் தங்கள் வயிற்ரை நிரப்பிக்கொள்ளும் , இதை உறிஞ்ச ஒரு நிமிடம் கூட ஆகாது.   
 

திங்கள், 14 மார்ச், 2011

BRAND - வளர்ந்த வரலாறு ..

BRAND - வளர்ந்த வரலாறு ..
      பிராண்டிங் - இந்த BRAND என்ற ஒரு வார்த்தை வளர்ந்து சில ஆண்டுகளே ஆகியிருக்கும் என்று நாம்  நினைத்து  கொண்டிருகின்றோம் .ஆனால் உண்மை என்னவென்றால் தற்போது உள்ள தொழில்துறையானது கடந்த நூற்றாண்டுகளில்தான் மிகப்பெரிய வளர்ச்சி கண்டிருக்கிறது .. ஆனால் இந்த BRAND என்ற வார்த்தையின் வரலாறு மிக பழமையானது. 
          
 கி மு ., 3000  முதல் கி மு 2250 வரையிலான காலகட்டத்தில் சிந்து சமவெளி நாகரிகத்தை சேர்ந்த மக்கள், தங்கள் மண்பாண்டங்கள், உலோக பொருட்கள், அணிகலன்கள், ஆகியவற்றில் தங்களுடைய தனி அடையாள முத்திரையை பதித்து வைத்து , பிராண்டிங் செய்து வந்தது அகழ்வாராய்ச்சியில் தெரியவந்தது .அவர்கள் விலங்கு உருவங்கள் , சில வகையான் குறியீடுகளை அடையாளமாய் பயன்படுத்தி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
         கி மு 1000  முதல் 250 வரையிலான காலகட்டத்தில் கிரேக்கர்களும் , ரோமானியர்களும்  அவர்களுடைய வீட்டு உபயோக பொருட்களிலும், ஆயுதம் மற்றும் வீடு கட்டும் கற்கள் போன்றவற்றிலும் தங்கள் முத்திரைகளை பதித்து வந்தனர். எகிப்து பாபிலோன் போன்ற பகுதிகளிலும் இந்த முறை காணப்பட்டது .கால மாற்றத்தால் அவை அனைத்தும் புதைந்து விட்டன..  
         ஆனால் அந்த காலதிலேயே பிராண்டிங் செய்துகொண்டது அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த காலத்தில் உபயோகபடுதப்பட்ட வொயின்  மற்றும் மதுபான ஜாடிகளில் குறிப்பிட முத்திரைகள் பதிக்கபட்டிருப்பதே  இதற்கு ஒரு அடையாளம் .  
           18 ஆம் நூற்றாண்டில்  இங்கிலாந்தை சேர்ந்த மதுபான கம்பெனி "பாஸ் அண்ட் கோ " நிறுவனம் தனது பொருட்களுக்கு சிவப்பு முக்கோணத்தை பிராண்டு லோகோ வாக பயன்படுத்தி வந்தது. அதன் பின்னர் குளிர்பானங்கள் , சோப்புகள் ,ஓட்ஸ்  என அணைத்து பொருட்களுக்கும் பிராண்டிங் உக்தி பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டது. 
         கி பி 1600  முதல்  1800  ஆம்  ஆண்டுகள் வரை குற்றவாளிகளுக்கு அவர்கள் முகம் அல்லது முதுகுபுறத்தில் சுடுகொளால் முத்திரை குத்துவது வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. இந்த முத்திரையை வைத்தே அவர்கள் என்ன வகையை சேர்ந்தவர்கள் என முடிவு செய்யப்பட்டது .


          1925 இற்கு பின்னரே அமெரிக்க மற்றும் ஐரோப்பா கண்டங்களில் உள்ள நாடுகளில் செயல்பட்டு வந்த வணிக நிறுவனங்கள் தங்களுடைய பொருட்களுக்கு பிராண்ட் NAME  வைத்து மிகப்பெரிய ப்ராண்டுகளாக மாற்ற ஆரம்பித்தன. அன்றைய FORD முதல் இன்றைய ஆப்பிள்  வரை அனைத்து நிறுவனங்களும் இந்த பிராண்டு விஷயத்தில் கவனமாக இருக்கின்றன, காரணம் இன்றைய  தேதியில் பிராண்டு என்பது ஒரு பொருளின் தரத்தை வெளிபடுத்துவதாக  மக்கள்  நினைக்கின்றனர் .   
           நிறுவனங்கள் தங்கள் பொருட்களை மக்களிடம் விற்பனை செய்வதற்காக   விளம்பரங்களுக்கு பல கோடிகளை செலவு செய்ய தயாராக உள்ளனர். 

உலகில் தற்போது உள்ள பிரபலமான பிராண்டு களின் மார்க்கெட்  மதிப்பை கணக்கிட்டால் நாம் தலை சுத்தி விழவேண்டியதுதான். 
2010  ஆம் ஆண்டு அறிக்கையின்படி பிராண்டுகளின் மதிப்பு (கோடிகளில்).

  • கோ கோ கோலா                                              - 3,17,104
  • ஐ பி எம்                                                                  -2,914,316
  • மைக்ரோசாப்ட்                                                  -2,74,088
  • கூகிள்                                                                     -1,96,050
  • ஜெனரல் எலெக்ட்ரிக்                                      -1,92,678
  • மேக்  டொனல்ட்                                                -1,51,134
  • இன்டெல்                                                              -1,44,099
  • நோக்கிய                                                               -1,32,756
  • டிஸ்னி                                                                    -1,29,318
  • ஹெச் பி                                                                -1,20,928
  • டொயோட்ட                                                         -1,17,890
  • மெர்செடெஸ் பென்ஸ்                                    -1,13,330
  • ஜில்லெட்                                                              -1,04,864
  • சிஸ்கோ                                                                -1,04,508
  • பி எம் டபுள் யு                                                      -1,00,471
  • ஆப்பிள்                                                                   -95,164
  • சாம்சங்                                                                    -87,728
  • ஹோண்டா                                                          -83,295
  • பெப்சி                                                                       -63,288
  • அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பேங்க்              -62,761
  • நைக்                                                                          -61,690
பிரபல நிறுவனங்களின்  லோகோ க்கள் ஒவ்வொரு முறையும் மாற்றப்பட்ட வரலாறு. .கீழே 


  
ஆப்பிள் கம்பெனி இன்   லோகோ மாற்றம்.





பிரபல கார் கம்பெனி வோல்ஷ்வோகனின் லோகோ மாற்றம்.
 




XEROX  . தயாரிப்பான போட்டோ காப்பியர் நிறுவனத்தின் லோகோ மாற்றம் 





1900  இல் ஷெல் என்ற  நிறுவனம் இதுவரை பத்து முறை லோகோ  வை மாற்றம் செய்துள்ளது .



குளிர்பான நிறுவனமான பெப்சியின் லோகோ மாற்றம் .





பழமையான கார் கம்பெனி போர்ட் இன்  லோகோ மாற்றம் 





1971 ஆம் ஆண்டு வெறும் 31 டலேரில்   ஆரம்பிக்கப்பட்ட கம்பனிதான் NIKE . அதன் மாற்றம். 



மேர்சிடெஸ் பென்ஸ் கார் கம்பனின் லோகோ மாற்றங்கள்  


உலகின் மெகா கோடீஸ்வரர்.


Carlos Slim Helú.jpg
charlos slim.                                          lakshmi mittal...



இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானி, உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளதாக, அமெரிக்காவின், "போர்ப்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இவரின் சொத்து மதிப்பு, 1.39 லட்சம் கோடி ரூபாய். அமெரிக்க பத்திரிகையான, "போர்ப்ஸ்' உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.


"போர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளவர், மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த கார்லோஸ் ஸ்லிம். இவரின் சொத்து மதிப்பு, 2.56 லட்சம் கோடி ரூபாய். அமெரிக்காவைச் சேர்ந்த பில்கேட்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு, 2.54 லட்சம் கோடி ரூபாய். அமெரிக்காவைச் சேர்ந்த வாரன் பபெ என்பவர், 2.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துடன் மூன்றாவது இடத்திலும், இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி, 1.39 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துடன் நான்காவது இடத்திலும் உள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த லட்சுமி மிட்டல், உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், ஐந்தாவது இடத்தில் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு, 1.37 லட்சம் கோடி ரூபாய்.


உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், பிரேசில் நாட்டைச் சேர்ந்த எய்க் பட்டிஸ்டன் எட்டாவது இடத்திலும், அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் ப்ளூம்பெர்க் 23வது இடத்திலும் உள்ளனர். முகேஷ் அம்பானியின் சகோதரரான, அனில் அம்பானி, 65 ஆயிரத்து 760 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், இப்பட்டியலில் 36வது இடத்தில் உள்ளார். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்துள்ளவர்களில் இரண்டு பேர் மட்டுமே இந்தியர்கள். கடந்த 2008ம் ஆண்டு, உலகில், 1,125 கோடீஸ்வரர்கள் இருந்தனர். கடந்தாண்டு உலகளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை காரணமாக, கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 793 ஆக குறைந்தது. தற்போது உலகில் 1,011 கோடீஸ்வரர்கள் உள்ளனர். "போர்ப்ஸ்' பத்திரிகையின் தலைமை நிர்வாகி ஸ்டீவ் போர்ப்ஸ் கூறுகையில், " உலகப் பொருளாதார மந்த நிலை சீரடைந்து வருவது, இந்த பட்டியலில் எதிரொலித்துள்ளது' என்றார்.


இந்திய பெண்கள் இருவர்: 
           உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த பெண்கள் இரண்டு பேர் இடம் பெற்றுள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த "போர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த சாவித்ரி ஜிண்டால் மற்றும் இந்து ஜெயின் ஆகிய இரண்டு பெண்கள் இடம் பெறுள்ளனர். இவர்களில், சாவித்ரி ஜிண்டால், 58 ஆயிரத்து 560 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துடன், உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 44வது இடத்தில் உள்ளார். "பென்னட் கோல்மன் அண்ட் கோ' நிறுவனத்தின் தலைவர் இந்து ஜெயின் 13 ஆயிரத்து 440 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துடன் இப்பட்டியலில் 354வது இடத்தில் உள்ளார்.




சனி, 12 மார்ச், 2011

ஜப்பானில் வரலாறு காணாத அளவிற்கு பூகம்பம் ..




               உழைப்பிற்கு பெயர் பெற்ற நாடு ஜப்பான், கடந்த காலங்களில் அந்த நாடு  பூகம்பம் மற்றும் அணுகுண்டு தாக்குதல் போன்ற பேரிடர்களில் இருந்து எளிதில் மீண்டது குறிப்பிடத்தக்கது, அனால் தற்போது நூறு வருங்களில் இல்லாத அளவிற்கு பெரிய அழிவு ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்ததக்கது, தற்போது  ஜப்பானில் பலியான மக்களுக்கு நம்மால் உதவி செய்ய முடியாவிட்டாலும் , அவர்களுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்வோமாக..           

 அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் ஜப்பானில் உள்ள டோக்கியோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கட்டிடங்கள் தீப்பற்றி எரிந்தன. 40 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பு மற்றும் தொலை தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

 
  மேலும் பாதிப்புகள் வரக்கூடும் என்பதால், அந்நாட்டின் கடலோர பகுதிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில் தூதரக அதிகாரிகள் உள்பட டோக்கியோ உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 25 ஆயிரம் இந்தியர்களும் பத்திரமாக உள்ளதாக மத்திய வெறியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
           
                 சுனாமி ஏற்பட்டு சேதத்தில் சிக்கி தவிப்போரை மீட்கள் ஆயிரக்கணக்கான மீட்பு படையினர் ஈடுபட்டுள்னர். விமானம், கப்பல் , மற்றும் வாகனங்களில் சென்று ஆங்காங்கே உயிருக்கு போராடி வருவோரை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆயிரத்து 300 பேர் இறந்திருக்கலாம் என்று ஜப்பானில் வெளியாககும் ஒரு இணையதளம் கூறியிருக்கிறது. இன்றும் காலையில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் செய்வதறியாது திகைத்து போய் உள்ளனர்.
                      .