திங்கள், 28 பிப்ரவரி, 2011

புற்று நோய்க்கு மனிதனின் நவீனமே காரணம் : ஆய்வு..

புற்று நோய் ஏதோ இனம்புரியாத இயற்கை விளைவுகளால் ஏற்படுவதல்ல மாறாக மனிதன் தனக்காக உருவாக்கிக் கொண்ட அதிநவீன வாழ்வுதான் காரணம் என்று மான்செஸ்டர் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மனிதனின் உற்பத்தி நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள உடல்ரீதியான மாற்றங்களே சமீப புற்று நோய்க் கட்டிகளுக்குக் காரணம் என்று இவர்கள் கூறுகின்றனர்.

இதனை உறுதி செய்ய அவர்கள் எகிப்திய மம்மிக்களை தங்களது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். நூற்றுக்கணக்கான மம்மிக்களை ஆய்வு செய்ததில் ஒரேயொரு மம்மியில் மட்டும் புற்று நோய் இருந்தது உறுதியானது. பண்டைய எகிப்திய பிரதிகளில் காணப்படும் புற்று நோய்ப் போன்ற நோய்க்கான குறிப்புகள் அனைத்தும் குஷ்ட ரோகத்தினால் ஏற்படும் உடல் ரீதியான அறிகுறிகளை புற்று நோய் என்பதாக அது கூறியுள்ளது என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த ஆய்வின் தலைவரான மைக்கேல் ஸிம்மர்மேன் மாம்மிக்களில் கட்டிகள் இருந்ததற்கான அடையாளம் இல்லை என்பதால் புற்று நோய் அந்தக் காலக்கட்டத்தில் இல்லை என்று கூறமுடியும் என்று கூறுகிறார்.

"இதனால் புற்ற்நோய் அல்லது புற்று நோய் உருவாக்கக் காரணிகள் தொழிற்புரட்சிக்குப் பிந்தைய வாழ்வு முறையே என்று நாம் கருத இடமுண்டு" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

"சுற்றுசூழலில் இயற்கையாக உள்ள எந்த ஒரு கூறும் புற்று நோய்க்கு காரணமாக இருக்கவில்லை. இதனால் இது மனிதனால் ஏற்பட்டுள்ள சீரழிந்த, மாசாகிப்போன சூழ்நிலைகளால் உருவானதே" என்று நாம் கூற முடியும்." என்று சக ஆய்வாளரும் பேராசிரியருமான ரொசாலி டேவிட் கூறுகிறார்.

அதாவது எய்ட்ஸ், புற்று நோய் என்பதெல்லாம் ஆதிகாலம் தொட்டே இருந்து வருபவை என்ற பொய்யை மருத்துவ ஆய்வும் கார்ப்பரேட் ஆய்வும் கூறிவரும் இந்த நிலையில் புற்று நோய்க்கு ஒரு வரலாற்றுப் பார்வையை அளிக்க இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்வேறு காலத்தின் உடல்களை ஆய்வு செய்ததில் நவீன சமூகங்களுக்கு கிடைத்த செய்தி என்னவெனில் "புற்று நோய் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டதே" என்பதுதான் என்று இந்த ஆய்வாளர்கள் அடித்து‌க் கூறுகின்றனர். 

ரெண்டே வருஷத்தில்.. பயங்கர சூரிய சூறாவளி பூமியை தாக்கலாம்.....

கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் முன்பு தென்அமெரிக்காவில் வாழ்ந்ததாக கூறப்படும் இனம் மயன் இனம். கி.மு. 3113&ல் ஆரம்பித்து மிகத் தெளிவாக அந்த காலத்திலேயே காலண்டர் தயாரித்திருக்கின்றனர். அந்த காலண்டர் 2012&ம் ஆண்டுடன் முடிகிறது. ‘மயன் மக்களே சொல்லிட்டாங்க.. 2012&ல் உலகம் அழியப்போகுது’ என்று ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. 

புரளிகள் ஒரு பக்கம்.. ‘ஒருவேளை அழிஞ்சிடுமோ’ என்று சீரியசாய் ஆராய்ச்சிகள் ஒரு பக்கம்.‘அழிகிறதோ, இல்லையோ.. 2012&ம் ஆண்டு டிசம்பர் 21&ம் தேதி படுபயங்கர பாதிப்புகள் ஏற்படப்போவது நிச்சயம்’ என்கின்றனர் கொடைக்கானல் இந்திய வான்ஆராய்ச்சிக் கழக வல்லுனர்கள்.

‘‘2012 டிசம்பர் 12&ம் தேதி இயல்புக்கு மாறாக பயங்கர சூரியப் புயல் ஏற்பட உள்ளது. இதை தடுக்க உடனடியாக உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டும், தவறினால் உலகம் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். அதிக உஷ்ணக் கதிர்கள் மற்றும் மின்காந்த அலைகளைத் தாங்கி உருவாகி வரப்போகும் சூரியப் புயல் பூமியை நெருங்கும் போது பயங்கரமான பாதிப்புகள் ஏற்படும். சூரியனில் இருந்து வெளியேறும் உஷ்ணக் காற்று பூமியை தகிக்கும். உலகம் முழுவதும் மின்சாரம், விண்கலங்கள், செயற்கைக்கோள், தொலைதொடர்பு, செல்போன் ஆகியவை அனைத்தும் ஸ்தம்பிக்கும்’’ என்று அந்த நிறுவனத்தின் விஞ்ஞானி சுந்தரராமன் கூறினார்.

கனடாவின் க்யூபெக் மாகாணத்தை இதேபோன்ற பயங்கர சூரியப் புயல் 1989&ம் ஆண்டு தாக்கியது. தொடர்ச்சியாக 9 நாட்கள் கனடாவே ஸ்தம்பித்துவிட்டது. 2012&ல் வரப்போகும் சூரியப் புயல் மொத்த பூமியையும் தாக்கப்போகிறது என்றும் கூறியுள்ளார். இதை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் பணிபுரியும் ஆராய்ச்சியாளர் மவுஸ்மி திக்பதியும் உறுதிப்படுத்தி உள்ளார்.

ஸ்டெதஸ்கோப் வேணாம்.. ஐபோன் மட்டுமே போதும்......

லண்டன்: டாக்டருக்கான பிரதான அடையாளம் வெள்ளை கோட் மற்றும் கழுத்தில் தொங்கும் ஸ்டெதஸ்கோப். இந்த 2-வது அடையாளம் மாறப்போகிறது. அதற்கு பதிலாக ஐபோனும் கையுமாக இனி டாக்டர்களை பார்க்கலாம். இன்டர்நெட், இ&மெயில், பேக்ஸ் அனுப்பும் வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போன்களுக்கு தற்போது அதிக வரவேற்பு உள்ளது. இத்தகைய போன்களை மருத்துவ துறையில் பயன்படுத்துவது தொடர்பாக லண்டன் பல்கலைக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் பீட்டர் பென்ட்லி தலைமையில் ஆய்வு நடத்தி அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். 

ஸ்டெதஸ்கோப்பாக பயன்படும் ஐபோனுக்கு ‘ஐ&ஸ்டெதஸ்கோப்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஐபோன், பல்வேறு வகைகளில் பயன்படுவதால் அதில் அதிக சக்தி வாய்ந்த கேமரா, சென்சார்கள், மைக் போன்ற கருவிகள் உள்ளன. இவற்றை பயன்படுத்தியே நோயாளியின் இதயத் துடிப்பை துல்லியமாக கண்டறிய முடியும்.

ஐபோனை ஸ்டெதஸ்கோப்பாக பயன்படுத்துவதற்கான ‘டிரயல்’ சாப்ட்வேரை ஆப்பிள் நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து இதுவரை 30 லட்சம் டாக்டர்கள் டவுன்லோடு செய்துள்ளனர். சாதாரண மக்களும் செல்போனை பயன்படுத்தியே இதயத்துடிப்பு பற்றி தெரிந்துகொள்வதற்கு ஏற்ப விரைவில் மாற்றங்கள் செய்யப்படும் என்கிறது ஆப்பிள் நிறுவனம். மருத்துவம் தொடர்பாக 6 ஆயிரம் பயன்பாடுகளுக்கு ஸ்மார்ட்போன்கள் இப்போது பயன்படுகின்றன. மருத்துவ சேவைகளுக்காக மூன்றில் ஒரு பங்கு டாக்டர்கள் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர் என்றும் தகவல் கூறுகின்றனர்.

3டி படத்தை இனி தொட்டும் பார்க்கலாம்...

டோக்கியோ: 3டி தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. ஹாலிவுட்டில் பல சினிமாக்கள் 3டி-யில் வருகின்றன. வீட்டு நிகழ்ச்சிகளை 3டி-யில் படம் பிடிக்கும் கேமராக்கள் வந்துவிட்டன. 3டி ஒளிபரப்பு அனுமதிக்கு டிஸ்கவரி உள்ளிட்ட சேனல்கள் விண்ணப்பித்துள்ளன. 3டி காட்சிகளை பார்த்து ரசிக்கும் டிவியை எல்ஜி, சோனி, பானாசோனிக் நிறுவனங்கள் அறிமுகப்படுத்துகின்றன.

இந்நிலையில், திரையில் தெரியும் 3டி காட்சிகளை தொட்டு, தடவிப் பார்க்கும் வசதியை ஜப்பான் தேசிய அறிவியல், தொழில்நுட்ப நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. திரையில் ஒரு பலூன் வருகிறது என வைத்துக்கொள்வோம். அதை எடுப்பதுபோல கையை கொண்டு சென்றால், நம் கையில் பலூன் தவழ்வதுபோல காட்சி மாறும். பலூனின் பிம்பம் நமது கையிலேயே விழும். பலூனை தத்ரூபமாக நம் கையிலேயே பார்க்கலாம். 

குத்துவது போல விரலை கொண்டு சென்றால், பலூன் பிம்பம் மாறுதல் அடைந்து குழி உருவானது போல காட்சியளிக்கும். பிரத்யேக கேமராக்களின் உதவியுடன் நமது கைகளின் இயக்கம் தொடர்ந்து படம் பிடிக்கப்பட்டது அதற்கேற்ப காட்சிகள் மாறுகின்றன. சுகுபா நகரில் நேற்று நடந்த அறிமுக நிகழ்ச்சியின்போது இதை அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் செய்துகாட்ட, பார்த்தவர்கள் மிரண்டே போய்விட்டனர். முக்கியமான ஆபரேஷன்கள், வீடியோகேம் ஆகியவற்றில் இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளனர்.

மூளை வளர என்ன சாப்பிடலாம்......

ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா? எதிலும் அதிக கவனத்துடன் ஈடு பட முடியவில்லையா? மூளை சரியாக செயல் படவும் நன்றாக வளரவும் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம். காரட்,தக்காளி,திராட்சை.ஆரஞ்சு,செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள்,மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன. ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம்.சைவ உணவுக்கரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

மனித உடலிலே மூளை தான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை. மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும். அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும். மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடா முயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்துவிடுகின்றன. மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை. ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன. எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.

பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செய்ல் பாடும் உடையவர்களாக இருந்தனர்.ஆனால் அவர்களில்பி6 பி12 ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர். ‘பி’ வைட்டமினைச் சேர்ந்த இநத மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது. மதிய உணவில் தயிர் சாதமும் கீரையும் இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும். மூளையும் அற்புதமாக இயங்கும்.

6 மாதங்கள் வரை விண்வெளிக்கு போய் வந்தால் 80 வயது பலவீனம் ஏற்படும்

விண்வெளியில் 6 மாதங்கள் வரை தங்கி விட்டு வரும் வீரர்கள், தரையை தொட்டதும் 80 வயது முதியவரின் பலவீனத்தை உணர்வதாக அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது.


விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகளின் உடல்நலன் குறித்து பீதி கிளப்பியுள்ள இந்த ஆய்வை புளோரிடாவை சேர்ந்த மார்கெட் பல்கலை க்கழகம் நடத்தியது.


இதுபற்றி அதன் பேராசிரியர் ராபர்ட் பிட்ஸ் கூறியதாவது:


சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் 6 மாதங்கள் வரை தங்கி விட்டு பூமிக்கு திரும்பும் விண்வெளி ஆராய்ச்சியாளர்களிடம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.


விண்வெளிக்கு செல்வதற்கு முன்பும், பூமியை தொட்ட உடனேயும் பயாப்சி முறையில் அவர்களது ஆடுசதை (முழங்கால் பின் சதை) பரிசோதிக்கப்பட்டது. விண்வெளியில் 6 மாதம் தங்கிவிட்டு பூமிக்கு திரும்பும் வீரர்களின் ஆடுசதையி ன் தசை நார்களில் 40 சதவீத சக்தி குறைந்திரு க்கிறது.

இது பழைய நிலைக்கு திரும்ப ஓரிரு மாதங்கள் ஆகிறது. மனிதனின் பாலன்ஸ், உடல் தோரணை (பாஸ்ச்சர்) ஆகியவற்றை இந்த தசைதான் தீர்மானிக்கிறது.


எனவே, வீரர்கள் பூமிக்கு திரும்பியதும் 80 வயது முதியவரின் உடல் திறன், தோரணையுடன்தான் இருக்கின்றனர். இது தற்காலிகம்தான் என்றாலும் விஞ்ஞானிகள் உடல் நிலை குறித்து கவலை அளிப்பதாகும் என்றார்.

சனி, 26 பிப்ரவரி, 2011

கலியுகம் பற்றிய தகவல்கள்...

கிருகயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்ற 4 யுகங்கள் பற்றியும் பண்டைய ஜோதிட நூல்களில் விளக்கப்பட்டுள்ளன




இதில் கிருகயுகம் 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள் என்றும், திரேதாயுகத்திற்கு 12 லட்சத்து 96 ஆயிரம் ஆண்டுகள் என்றும், துவாபரயுகத்திற்கு 8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகள், தற்போது நடந்து வரும் கலியுகத்திற்கு 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள் எனறும் கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது கலியுகத்தில் 5,110 ஆண்டுகளே முடிந்துள்ளது\.


மேற்கூறிய 4 யுகங்களிலும் கலியுகம் மிகச் சக்தி வாய்ந்தது. கலி என்றால் சனி. கலியுகம் என்றால் சனியுகம் என்றும் நம்பப்படுகிறது. அந்த வகையில், தற்போது நடந்து வரும் அசம்பாவிதங்களின் சதவீதம் நாளுக்கு நாள் அதிகரிக்கும். பூமிப்பகுதியை கடல் ஆக்கிரமிக்கும் நிலை ஏற்படும். அடுத்தடுத்து சுனாமி வரும். கலியுகத்தில் மக்களின் மனநிலை எப்படியெல்லாம் மாறும், மனசாட்சிக்கு இல்லாமல் ஒருவரை ஒருவர் அழித்து வாழ்வது என்பது பற்றி சில வேதங்களிலும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழை தேர்வு செய்ததால் வங்கி கடன் மறுப்பு: படிப்பிற்கு முழுக்கு போட இன்ஜி., மாணவர் முடிவு


ராமநாதபுரம் : "தமிழைத் தேர்வு செய்த இன்ஜினியரிங் மாணவருக்கு, வங்கிக் கடன் வழங்க முடியாது' என, அதிகாரிகள் கைவிரித்து விட்டதால், படிப்புக்கு முழுக்கு போடும் நிலையில் மாணவர் உள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே பி.கீரந்தையைச் சேர்ந்தவர் பாலமுருகன்(18). தந்தை கைவிட்ட நிலையில், தாய், தம்பியுடன் வசித்து வருகிறார். பிளஸ் 2 தேர்வில் 819 மதிப்பெண் எடுத்து, கவுன்சிலிங் முறையில் பட்டுக்கோட்டை ராஜா மடம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.இ., மெக்கானிக்கல் பயின்று வந்தார். இதற்கு தமிழ் மொழியை தேர்வு செய்தார். படிப்பு செலவுக்காக, முதுகுளத்தூரில் உள்ள வங்கி ஒன்றில் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்தார். வங்கியில் முறையான தகவல் இல்லை. காலம் கடந்த நிலையில், பண நெருக்கடி ஏற்பட்டதால், உதவி கேட்டு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்தார்.அங்கு நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், முன்னோடி வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டார். "தமிழைத் தேர்வு செய்ததால் கண்டிப்பாக வேலை கிடைக்கப் போவதில்லை. இதற்கு எப்படி கடன் தர முடியும்?' என, அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.

விரக்தி அடைந்த பாலமுருகன் கூறியதாவது:தமிழ் செம்மொழி மாநாடு நடத்திய தமிழகத்தில், தமிழைத் தேர்வு செய்ததற்காக கடன் உதவி தர மறுக்கின்றனர்; வேலை கிடைக்காது என பேசுகின்றனர். அதிகாரிகளே இப்படி இருந்தால் எப்படி முறையிட முடியும்? எனக்கு பணம் கிடைக்காத பட்சத்தில், படிப்பை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.இவ்வாறு பாலமுருகன் கூறினார்.

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

ஏப்ரல் 13, 2036 இல் பூமிக்கு அழிவா?: விஞ்ஞானிகள் எச்சரிக்கை.....




'அப்போஃபிஸ்' என்ற சிறிய கோளானது பூமிக்கு பாரிய அச்சுறுத்தல் எனவும் இக் கோளானது எதிர்வரும் 2036 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி பூமியுடன் மோதலாம் எனவும் ரஸ்ய விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
சென் பீட்டர்ஸ் பேர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனை எதிர்வு கூறியுள்ளார்கள்.

இக் கோளானது 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி சுமார் 37, 000 முதல் 38, 000 கிலோ மீற்றர் தொலைவில் பூமியை நெருங்கும் எனவும் 2036 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி பூமியை மோதும் எனவும் பேராசிரியர் லியொனிட் சொலோகொவ் தெரிவிக்கின்றார்.
சிலவேளை மத்திய கிழக்கு,தென் அமெரிக்கா அல்லது ஆபிரிக்காவின் மேற்கு கரையோரப்பகுதியில் மோதலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது பூமியோடு மோதினால் இதன் சக்தி வெளிப்பாடு சுமார் 100 அணுகுண்டுகளுக்குச் சமனாகவிருக்குமென நாசா தெரிவித்துள்ளது.

எனினும் இது 2036 ஆம் ஆண்டு மோதுவதற்கான வாய்ப்பு 45,000 இற்கு 1 என்ற நிகழ்தகவு எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனாலும் நாம் எத்தகையதொரு சந்தர்ப்பத்திற்கும் முகங்கொடுக்க தயாராக இருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அக் கோள் பூமியுடன் மோதுவதனை தவிர்ப்பதற்கான முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மனித மூளையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கார்........


ஜேர்மனியைச் சேர்ந்த அடானமஸ் லேப் மனித மூளையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இக்கருவி மூலம் மனித மூளையின் விருப்பபடி வாகனங்களை இயக்கலாம்.
 
வாகன ஓட்டி சென்சார் கேப் ஒன்றை அணிந்து கொள்வதன் மூலம் மூளையின் எலக்ட்ரோ மேக்னடிக் மின் காந்த அலைகளை வைத்து தங்கள் மூளையின் செயல்பாட்டை கம்ப்யூட்டர் அறிந்து கொள்ள முடியும். மூளையின் வலது இடது வழி முறைகளை, மூளையின் கட்டுப்பாட்டோடு இணைந்து கணணியின் மென்பொருள் செயல்படும்.
 
இது தவிர வேகப்படுத்தல், வேகத்தைக் குறைத்தல், போன்றவற்றை அடையாளம் கண்டுகொள்ளவும் பயிற்சி கொடுக்க ஆராய்ச்சியாளர்கள் வழிகளை கண்டுபிடித்துள்ளனர். வாகன ஓட்டிகள் இந்த சென்சார் கேப்பை தலையில் பொருத்தியவுடன் வாகனத்திற்கு உத்தரவிடத் தொடங்கும்.
 
அந்த வாகனமும் 360 கோணத்தில் தன்னைச் சுற்றியுள்ளவற்றை அறியும் விதமாக வீடியோ காமிராக்கள் ராடார்கள் லேசர் சென்சார்களைக் கொண்டிருக்கும். ஒரு புற மற்றும் இரு புற சந்திப்பு வரும் இடத்தில் கார் தன்னைத் தானே செலுத்திக் கொல்லும். பின்னர் வடது, இடது பக்கம் வாகன ஓட்டியின் உத்தரவுப்படி திரும்பும்.
 

டவர் இல்லாமலேயே செயல்படும் செல்போன்கள்.............




செல்போன் டவர்கள் மூலமாக சமிக்ஞைகளை பெற்று தான் தற்போது செல்போன்கள் இயங்கி வருகின்றன. டவர்கள் இல்லாவிட்டால் செல்போன்கள் இயங்காது.


ஆனால் அமெரிக்க விஞ்ஞானிகள் டவர்கள் இல்லாமலேயே செல்போன்கள் இயங்கச் செய்யக் கூடிய செல்போன் தொழில் நுட்பத்தை அவர்கள் உருவாக்கி உள்ளனர். பிளைண்டர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் செயல்படும் சர்வதேச குழு சாப்ட்வேர் ஒன்றை உருவாக்கி உள்ளது.

இந்த சாப்ட்வேர் அழைப்புகளை ஒரு செல்போனில் இருந்து இன்னொரு செல்போனுக்கு ரிலே செய்ய உதவும். இதன் மூலம் டவர்கள் இல்லாமலேயே செல்போன்கள் இயங்கும். ஒரே ஒரு ஆபரேடிவ் டவர் மட்டும் இருக்கும்.

அதோடு எல்லா செல்போன்களும் இணைக்கப்பட்டு இருக்கும். செயல்படும் (ஆபரேடிவ்) டவரில் இருந்து சமிக்ஞைகள் பெறப்பட்டு அவை சமிக்ஞைகள் இல்லாத பகுதிகளுக்கு செல்போன்கள் மூலமாகவே அஞ்சல் செய்ய இநத நவீன சாப்ட்வேர் உதவும்.
 

புதன், 9 பிப்ரவரி, 2011

.நீருக்கு மேல் நீரால் பாலாமா??



நீருக்கு மேல் நீரால் பாலாமா?? நம்ப மறுக்கிறது இதயம். நம்பித்தான் ஆகவேண்டும். இது தான் தொழில் நுட்ப புரட்சி என்பார்களோ தெரியாது.  நீர்பாலம் என்றழைக்கப்படும் இப்பாலமானது Germanyல் அமைந்துள்ளது.
ஆறு வருட உழைப்பு 500மில்லியல் யுரோக்கள் செலவில் இப்பாலம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. 918 மீற்றர் நீளமாக காணப்படும் இந்தப் பாலமானது மேற்கு Germanyல் Berlin நகருக்கு அருகாமையில் ...Magdeburg என்ற நகரத்தில் அமைந்துள்ளது
மீண்டும் ஒருமுறை germany விஞ்ஞானிகள் சிறந்தவர்கள் என்று நிரூபித்துள்ளார்கள் ..

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

9400 ஆண்டுகளுக்கு முன்பே மனிதனுடன் வாழ்ந்த நாய்கள்

போர்ட்லேண்ட் (மெய்னி): வீட்டில் பாதுகாப்புக்காக வளர்க்கப்படும் விலங்கு நாய். இவற்றுக்கு மோப்ப சக்தியும் நன்றி உணர்வும் அதிகம். சுமார் 9,400 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் நாயை வளர்த்து வந்துள்ளனர் என்பதும் பண்டைய கால மனிதன் நாயை உணவுக்காக பயன்படுத்தியதற்கான ஆதாரங்களும் தற்போது தெரியவந்துள்ளது. 

மெய்னி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், 1000 முதல் 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித உணவுமுறை குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டனர். இக்குழுவில் சாமுவேல் பெல்க்நேப் என்ற அறிவியல் ஆராய்ச்சி மாணவரும் இடம் பெற்றிருந்தார். 1970 ம் ஆண்டு டெக்சாசின் தென்கிழக்கு பகுதியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை கொண்டு இந்த ஆராய்ச்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், அங்கிருந்து எடுக்கப்பட்ட சிறிய வித்தியாசமான எலும்பு, ஆராய்ச்சியின் இலக்கையே மாற்றி உள்ளது. இந்த எலும்பு விரிவான ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டதில் பல தகவல் கிட்டியுள்ளதாக பெல்க்நாப் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியது: ஆராய்ச்சிக்காக சேகரிக்கப்பட்ட எலும்புகளில் ஒன்று வித்தியாசமாக இருந்ததால் இலக்கை விட்டு மாறுபட்ட ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. 

இதுவரை இந்த எலும்பு ஓநாய் அல்லது நரியின் எலும்பாக இருக்கலாம் என்றே நம்பப்பட்டு வந்தது. தற்போது இதை கார்பன் டாட்டிங் மற்றும் டிஎன்ஏ பரிசோதனைகளுக்கு உட்படுத்தியதன் மூலம் சுமார் 9,400 ஆண்டுகளுக்கு முந்தைய நாயின் கால் பகுதியை சேர்ந்த எலும்பு என்பது தெளிவாகி உள்ளது. 

இது மனித செரிமான பாதையை கடந்து வந்ததற்கான ஆதாரங்களும் உறுதியாகி உள்ளது. எலும்புக்குரிய நாய் சுமார் 25 முதல் 30 பவுன்ட் எடை கொண்டதாக இருந்திருக்க வேண்டும். இதன் மூலம் நாய்கள் 9,400 ஆண்டுகளுக்கு முன்பே மனிதனுடன் வாழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது. சிலர் அதை உணவுக்காகவும் பயன்படுத்தி உள்ளனர். இவ்வாறு பெல்க்நாப் கூறினார். முந்தைய ஆய்வுகளில் நாய்கள் சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவையாக கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நாள் ஆகஆக மனுஷன் முட்டாள் ஆகிறானா?

 ‘‘எங்க அப்பாவைவிட நான் புத்திசாலி. என்னைவிட என் மகன் புத்திசாலியா இருக்கான். டிவி, செல்போன், வீடியோகேம்ஸ் எல்லாம் இப்பவே அத்துபடி’’  இப்படி பேசாதவர்கள் அரிது. ஆண்டுகள் போகப் போக மனிதனின் அறிவு, புத்திக்கூர்மை அதிகரிக்கிறது என்பது இவர்களது கொள்கை, நம்பிக்கை. இதை தகர்க்கிறது சமீபத்திய ஆராய்ச்சி.

மனிதனின் மூளை பற்றி அமெரிக்காவின் விஸ்கோன்சின் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் தெரியவந்த தகவல்கள்: 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை, மனிதனின் மூளை படிப்படியாக வளர்ச்சி அடைந்து வந்திருக்கிறது. கடந்த 20 ஆயிரம் ஆண்டுகளாக மூளையின் சைஸ் படிப்படியாக குறைந்துவிட்டது. 1,500 கன செ.மீ. பரப்பு இருந்த மூளை தற்போது 1,350 கன செ.மீ.தான் இருக்கிறது. 

ஏறக்குறைய கிரிக்கெட் பந்து சைஸ் அளவு காலியாகியிருக்கிறது என்கிறது அந்த ஆராய்ச்சி. அளவுதான் சுருங்கியதே தவிர, திறமையும் கற்பனைத் திறனும் புத்திக் கூர்மையும் அதிகரித்திருக்கிறது என்று ஒரு தரப்பு விஞ்ஞானிகள் சொல்கின்றனர். ‘‘சேச்சே.. நாளுக்கு நாள் மனுஷன் முட்டாளா ஆகிட்டு வர்றான்’’ என்றும் சிலர் சொல்கின்றனர்.

பூமிக்கு அருகில் சுற்றும் 134 விண்கற்களால் ஆபத்தா???

நாசா: பூமிக்கு அருகில் 134 விண்கற்கள் இருப்பதை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) கண்டுபிடித்துள்ளது. இதுவரை கண்டறியாத 20 வால் நட்சத்திரங்கள், 33 ஆயிரம் சிறிய கிரகங்கள் மற்றும் விண்கற்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதன், சுக்கிரன், பூமி, செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களை சுற்றி சூரிய குடும்ப ஏரியாவில் சுற்றிவரும் விண்கற்கள், சிறிய கிரகங்கள், வால் நட்சத்திரங்கள் ஆகியவை பற்றி ஆராய்ச்சி செய்யும் நோக்கில் ‘நியோவைஸ்’ என்ற ஆய்வுத் திட்டத்தை நாசா 2009 ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. 

கடந்த ஓராண்டு சாதனை பற்றி நாசா அதிகாரி லிண்ட்லே ஜான்சன் கூறியதாவது: நியோவைஸ் ஆய்வு மூலம் 20 வால் நட்சத்திரங்கள், 33 ஆயிரம் விண்கற்கள், சிறிய கிரகங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இவை இதுவரை கண்டறியப்படாதவை. இவை செவ்வாய் - வியாழன் இடைப்பட்ட பகுதியில் உள்ளன.

மேலும், சூரியனை பூமி சுற்றி வரும் பாதையில் இருந்து 4.5 கோடி கி.மீ. தொலைவுக்குள் 134 விண்கற்கள், சிறிய கிரகங்கள், வால் நட்சத்திரங்கள் சுற்றுகின்றன. குறைந்த தூரம் என்றாலும் இவற்றால் பூமிக்கு ஆபத்து இல்லை. இவற்றின் அடர்த்தி, அளவு ஆகியவற்றை கண்டுபிடிக்கும் ஆய்வுகள் தொடர்ந்து நடக்கின்றன. இவ்வாறு ஜான்சன் கூறினார்.