திங்கள், 28 பிப்ரவரி, 2011

6 மாதங்கள் வரை விண்வெளிக்கு போய் வந்தால் 80 வயது பலவீனம் ஏற்படும்

விண்வெளியில் 6 மாதங்கள் வரை தங்கி விட்டு வரும் வீரர்கள், தரையை தொட்டதும் 80 வயது முதியவரின் பலவீனத்தை உணர்வதாக அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது.


விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகளின் உடல்நலன் குறித்து பீதி கிளப்பியுள்ள இந்த ஆய்வை புளோரிடாவை சேர்ந்த மார்கெட் பல்கலை க்கழகம் நடத்தியது.


இதுபற்றி அதன் பேராசிரியர் ராபர்ட் பிட்ஸ் கூறியதாவது:


சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் 6 மாதங்கள் வரை தங்கி விட்டு பூமிக்கு திரும்பும் விண்வெளி ஆராய்ச்சியாளர்களிடம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.


விண்வெளிக்கு செல்வதற்கு முன்பும், பூமியை தொட்ட உடனேயும் பயாப்சி முறையில் அவர்களது ஆடுசதை (முழங்கால் பின் சதை) பரிசோதிக்கப்பட்டது. விண்வெளியில் 6 மாதம் தங்கிவிட்டு பூமிக்கு திரும்பும் வீரர்களின் ஆடுசதையி ன் தசை நார்களில் 40 சதவீத சக்தி குறைந்திரு க்கிறது.

இது பழைய நிலைக்கு திரும்ப ஓரிரு மாதங்கள் ஆகிறது. மனிதனின் பாலன்ஸ், உடல் தோரணை (பாஸ்ச்சர்) ஆகியவற்றை இந்த தசைதான் தீர்மானிக்கிறது.


எனவே, வீரர்கள் பூமிக்கு திரும்பியதும் 80 வயது முதியவரின் உடல் திறன், தோரணையுடன்தான் இருக்கின்றனர். இது தற்காலிகம்தான் என்றாலும் விஞ்ஞானிகள் உடல் நிலை குறித்து கவலை அளிப்பதாகும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

PLASE COMMEND IT.