அசென்ஜெர் (accenture)
ஆண்டெர்சன் கன்சல்டிங் என்ற நிறுவனம் தனது பெயரை மாற்ற நினைத்தபோது , அது குறித்து தனது நிறுவன ஊழியர்களிடமே கேட்டது. நார்வே நாட்டை சேர்ந்த ஊழியர் ஒருவர் "accent on the future " என்று அவர் சொல்ல, அதையே கொஞ்சம் சுருக்கி " accenture " என்று மாற்றினார்கள்.
அடிடாஸ் (adidas)
1924 ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஆரம்பிக்கப்பட்ட
இந்த நிறுவனத்தின் உரிமையாளரான அடோல்ப் டோஸ்ளர் (adolf dossler )
என்பவர் தனது பெயரின் முதல் இருபாதியை வைத்து உருவாக்கியதுதான் இந்த பெயர்.
சிஸ்கோ (cisco )
அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ (san francisco ) நாகருடைய பெயரின் இறுதி பகுதியில் இருந்து உருவானதுதான் சிஸ்கோ.
கோல்கேட் பால்மொளிவ் ( colgate palmolive )
கோல் கேட் அண்ட் கம்பெனி , பால்மொளிவ் அங்கிர இரு நிறுவனங்கள் இணைந்து உருவானதுதான் "கோல் கேட் பால்மொளிவ் " கோல் கேட் நிறுவனத்தை உருவாக்கிய வில்லியம் கோல் கேட் தனது குடும்ப பெயரான கோல் கேட் என்ற பெயரையே தனது நிறுவனத்திற்கு வைத்துவிட்டார்.
பால்மொளிவ் என்பது சோப்பு தயாரிக்க பயன்படும் இரண்டு எண்ணெய் களான
பாம் மற்றும் ஆலிவ் ஆகிய இரண்டையும் சேர்த்து உருவானது..
இன்போசிஸ்
information systems இதை சுருக்கிதான் உலக ஐ .டி துறையில் முன்னணியில் இருக்கும் இந்திய நிறுவனமான இன்போசிஸ் க்கு பெயர் வைத்தார்கள் .
(maggi )
நூடுல்ஸ் என்றாலே மேகி என்றால்தான் குழந்தைகளுக்கு தெரியும். அந்த அளவுக்கு இந்த பெயர் பிரபலம் .
1947 ஆம் ஆண்டு நெஸ்லே (nestle ) நிறுவனம் ஜூலியஸ் மேகி என்பவர் ஆரம்பித்த நிறுவனம். . அவருடைய பெயரின் கடைசி பாதியை தனது நிறுவன பொருட்களின் ஒன்றான நூடுல்ஸ் க்கு மேகி என்று பெயர் வைத்துக்கொண்டார்.
(vodafone )
வாய்ஸ் டேட்டா டெலிபோன் என்பதன் சுருக்கமே இந்த பெயர். தனது முதல் மொபைல் அழைப்பை இங்கிலாந்து நாட்டில் 1985 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் ஆரம்பித்தது.....
(wipro )
வெஸ்டேர்ன் இந்தியன் பாம் ரீபைன்ட்டு ஆயில் லிமிடெட்
(WESTERN INDIA PALM REFINED OIL LTD)
என்பதன் சுருக்கமே WIPRO , இந்நிறுவனம் தொடங்கப்பட்டது 1980 இல் . ஆரம்பத்தில் இந்நிறுவனம் தயார் செய்த பொருள் வனஸ்பதி. ஆனால் இன்றோ சாப்ட்வேர் (SOFTWARE )உலகில் முன்னணி நிறுவனம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
PLASE COMMEND IT.