சனி, 2 ஏப்ரல், 2011

கிரிக்கெட் ராஜதந்திரம் : பால் தாக்கரே கேள்வி..


          
     பாகிஸ்தான் பிரதமரை மொஹாலி போட்டிக்காக அழைத்த இந்தியா, இலங்கையில் வாழும் தமிழரின் நலனுக்காக, அந்நாட்டுடன் 'கிரிக்கெட் ராஜதந்திரத்தை' செயல்படுத்தாது ஏன் என்று சிவசேனை தலைவர் பால் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து சாம்னாவில் அவர் எழுதியுள்ள செய்தியில் , கிரிக்கெட் ராஜதந்திர முறையை முட்டாள்தனமானது என்று வருணித்துள்ளார்.
.


             "இந்தியாவில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியைக் காண இலங்கை அதிபர் ராஜபக்ஷே வருவதாக அறிந்தோம். அவர் அதிகாரப்பூர்மாக அழைக்கப்பட்டாரா என்பதை அறிய விரும்புகிறோம்.
அரசின் அதிகாரப்பூர்வ அழைப்பின் பேரில் அவர் வராத பட்சத்தில், கிரிக்கெட் ராஜதந்திரம் என்பது பாகிஸ்தானுக்கான சிறப்புச் சலுகை என்றே கருத வேண்டியதாகிறது.

இலங்கையில் வாழும் தமிழரின் நலனை மேற்கோள் காட்டி, அந்நாட்டுடன் கிரிக்கெட் ராஜதந்திரத்தை ஏன் கையாளக் கூடாது?" என்று பால் தாக்கரே கூறியுள்ளார்.


             மேலும், "இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களின் கவனத்தை (இஸ்லாமியர்களின் வாக்கு)  ஈர்க்கவே பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.(ஆனால் நேரடியாக ராஜபக்ஷேவை இந்தியா விற்கு அழைத்தால் தமிழ் மக்களின் மதிப்பை காங்கிரஸ் இழக்க நேரிடும்,) கிரிக்கெட்டை பயன்படுத்தி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எத்தனைப் பிரச்னைகள் தீர்க்கப்பட்டன என்பது தெரியவில்லை.
மொஹாலி ஆட்டத்தில் நல்லவேளையாக பாகிஸ்தான் அணி தோற்கடிப்பட்டது. இதனால், அந்த அணி மகாராஷ்டிர மாநிலத்துக்கு வருவது தடுக்கப்பட்டது," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

PLASE COMMEND IT.