ஞாயிறு, 31 ஜூலை, 2011

அணுசக்தியின் நிறம் பச்சையல்ல; இரத்தச்சிவப்பு!

ஜப்பானில் ஏற்பட்ட மிகப்பெரும் பூகம்பம் அணுமின் சக்தி பற்றிய விவாதத்தை மீண்டும் தொடக்கியுள்ளது. அணுசக்தியின் நிறம் நமக்கு காட்டப்பட்டிருப்பதைப் போல பச்சையல்ல; இரத்தச்சிவப்பு.

அணுமின் நிலையம் நிச்சயமாக வெடிக்கக்கூடிய டைம்பாம். தற்போதுள்ளவை ஹிரோஷிமா நாகசாகியில் வெடித்தவைகளைவிட பல லட்சம் படங்கு அழிவை ஏற்படுத்தக் கூடியவை. இயங்கு நிலையில் இருக்கும் (வெடிக்காமல்) ஒரு அணுமின் நிலையத்தின் ஏற்றுக் கொள்ளக்கூடிய கதிரியக்க அளவு என்பதே மிக அபாயகரமான அளவே.

இதுவரை வெடிக்கப்பட்டுள்ள இரண்டு அணுகுண்டுகளினால் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை விட அமெரிக்காவில் மட்டும் அணுமின் உலைகளினாலும் சோதனைகளினாலும் கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது அதிர்ச்சி தரும் செய்தி.

அனல்மின் / நிலவாயு மின் நிலையங்கள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை விட அல்லது போபால் யூனியன் கார்பைட் தொழிற்சாலை வெளியிட்டதை விட மிக அதிக சுற்றுச்சூழல் அபாயத்தை அணுமின் நிலையங்கள் ஏற்படுத்துகின்றன. அணுமின் நிலையங்கள் மீது ஒரு பூகம்பம் அல்லது தீவிரவாத தாக்குதல் போதும்; மனித குலத்தின் மிகப்பெரும் பகுதியை, மிருகங்கள் மற்றும் பசுமை உலகத்தை ஒரே வீச்சில் அழித்து முடிக்க.

இதற்கு ஒரே தீர்வு இனியொரு அணுமின் உலைகளை கட்டமைக்காமல் இருப்பதும், இருக்கும் உலைகளை உடனடியாக செயலற்று போகச்செய்வதும்தான். "நாம் இயற்கையுடன் வாழ கற்றுக் கொள்ளவேண்டும்; இயற்க்கையைத் திண்று அல்ல" என்ற காந்தியின் வார்த்தை இங்கு பொருத்தமாக இருக்கும்.
நமக்கு உண்மையிலேயே தேவைப்படும் அளவு வாழ்க்கை சாதனங்கள், சக்தி மற்றும் வசதிகளை மட்டுமே கொண்டு வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

நுகர்வு கலாச்சார மோகத்தினால் உந்தப்பட்டு அணுசக்தி மட்டுமல்ல சுற்றுச்சூழல் மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பயன்பாடு, உடல் திசுக்களை கொல்லும் செல்போன் பயன்பாடு போன்ற அனைத்தும் மனிதகுல நலனுக்கெதிராக நாமே குழி தோண்டிக்கொண்டுள்ளோம் என்பதையே காட்டுகிறது.

அமெரிக்காவை விட அதிகளவு இருப்பு வைத்துள்ள ஆப்பிள் நிறுவனம்.


அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளிடம் உள்ள ரொக்க இருப்பு அமெரிக்க அரசின் ரொக்க இருப்பை விட அதிகம் என செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்பிள் நிறுவனத்திடம் 75.87 பில்லியன்(ஒரு பில்லியன்=100 கோடி) டொலர் ரொக்க இருப்பு உள்ளது. ஆனால் அமெரிக்க அரசின் கருவூலத்தில் 73.76 பில்லியன் டொலர் மட்டுமே ரொக்க இருப்பு உள்ளது. அமெரிக்க அரசு தனது கடன் உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்று குடியரசு, ஜனநாயக கட்சிகள் கோரிவருவதற்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்காவின் கருவூலம் அளித்த பதிலில் இருந்து இந்த விவரம் பெறப்பட்டுள்ளது.

 

அமெரிக்க அரசிடம் உள்ள ரொக்க இருப்பு இந்த அளவிற்குத்தான் என்பதால் கடன் உச்ச வரம்பை உயர்த்த முடியாது என்று பதிலளித்துள்ளது. அமெரிக்க அரசிற்கு தற்போது 14.3 டிரில்லியன்(ஒரு டிரில்லியன்=1000 பில்லியன்) டொலர் உள்ளது. இதற்கு மேலும் கடன் வாங்கினால் அது அமெரிக்காவின் பொருளாதாரத்தை பாதித்துவிடும் என்று அமெரிக்க கருவூலம் கூறியுள்ளது.
 
சந்தை மூலதனமாக 363.25 பில்லியன் கொண்டுள்ள ஆப்பிள் அமெரிக்காவின் மிகப் பெரும் எண்ணெய் நிறுவனமான எக்ஸான் மொபில் நிறுவனத்திற்கு அடுத்தப்படியாக மிகப் பெரிய நிறுவனமாகத் திகழ்கிறது. 3ஜி அலைபேசி வர்த்தகத்தில் அடியெடுத்து வைத்த பிறகு அதன் வளர்ச்சி அபரீதமான அளவிற்குச் சென்றுள்ளது.
 

வியாழன், 14 ஜூலை, 2011

பாரதம்:மறைக்கப்பட்ட பெருமைமிகு வரலாறு

எழுதப்படாத வரலாற்றுக்கு முன்பிருந்தே,நமது பாரதநாடு செல்வச் செழிப்பின் உச்சத்தில் இருந்தது.அதற்கு அடையாளமாக,நமது நாட்டிற்கு வந்த வெளிநாட்டுப்பயணிகளான மார்க்கோபோலோ,யுவான் சுவாங் போன்றவர்களின் டைரிக்குறிப்பை எடுத்துப்படித்தாலே புரியும்.



இவர்களில் ஒருவர் ஒரு கிராமத்திற்கு சென்றார்.அங்கிருக்கும் ஒரு வீட்டின் வாசலில் நின்று கொண்டு குடிக்க தண்ணீர் கேட்கிறார்.அந்த வீட்டின் இல்லத்தரசி குடிக்க பானாக்கரம்(இனிப்பு கலந்த பானம்) கொண்டு வந்து தருகிறார்.இவரோ,தண்ணீர்தான் வேண்டும் என அடம்பிடிக்கிறார்.அந்த இல்லத்தரசியோ,வீட்டினுள் சென்று மோர் கொண்டு வந்து தருகிறார்.இவர் மீண்டும் தண்ணீர்தான் வேண்டும் என்கிறார்.அதற்கு அந்த இல்லத்தரசி, “ஆற்றில் ஓடுகிறதே,அங்கே போய் அருந்திக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு வீட்டினுள் சென்றுவிட்டார்.


பாரத தேசம் முழுவதும் அவர் சில ஆண்டுகள் சுற்றிப்பார்த்ததில்,எங்குமே வறுமை இல்லை;பிச்சைக்காரர்கள் இல்லை;பிச்சையெடுப்பவர்கள் சாதுக்கள்,துறவிகள் மட்டுமே.(தானம் தரும் எண்ணம் மறையக்கூடாது என்ற நோக்கத்திற்காக அவர்கள் பிச்சையெடுக்கின்றனர்).எந்த வீட்டிற்கும் கதவு கிடையாது.எனதனது பயண நூலில் எழுதியிருக்கிறார்.



போர்க்கலைப்படி,ஒரு படைவீரன் இன்னொரு படைவீரனிடம் மட்டுமே சண்டையிடவேண்டும்.ஒரு தளபதி இன்னொரு தளபதியிடம் மட்டுமே சண்டையிட வேண்டும்.எதிராளியிடம் எந்த ஆயுதமும் இல்லாவிட்டால்,அவனிடம் போரிடக்கூடாது.காலை சூரிய உதயத்திலிருந்து மாலை சூரிய உதயம் வரை மட்டுமே போரிட வேண்டும்.மதியம் சுமார் இரண்டு மணி நேரம் போர் இடைவேளை.போர் நடக்கும்போது,போரில் காயம் பட்டு வீழ்பவர்களை இரண்டு நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த முதலுதவி அணியினர் தூக்கிச் செல்லலாம்.யாரும் அவர்களை தாக்கக் கூடாது.(இந்த விதிகளை இன்றைய நாகரீக அரசாங்கங்கள் ஒன்றே ஒன்று மட்டும் பின்பற்றுகின்றனவா?)

ஒரு குழந்தையின் ஐந்து வயது முதல் 21 வயது வரையிலும் குருகுலத்தில் தங்கிப்படிக்க வேண்டும்.இந்த காலத்தில் ஒரு ஆண்டுக்கு இரண்டு மாதங்கள் மட்டும் தனது பெற்றோரின் வீட்டுக்குச் செல்லலாம்.ஒவ்வொரு ஆண் மற்றும் பெண் குழந்தைக்கும் வாள்பயிற்சி,பிராணயாமம்,சரக்கலை எனப்படும் மூச்சுக்கலை,ஜோதிடக்கலை,அர்த்த சாஸ்திரம் எனப்படும் அரசியல் கலை,ஆய கலைகள் 64,வேதங்களில் அதர்வண வேதம் தவிர்த்த அனைத்தும்,சாமுத்ரிகா லட்சணம்,16 வட்டார(இந்திய)மொழிகள்,சிலம்பம்,களரி முதலியன கற்பிக்கப்படும்(கி.பி.1900 வரையிலும் நமது தாத்தாவின் தாத்தா காலம் வரையிலும் நமது முன்னோர்கள் ஒவ்வொருவருமே 16 பாரத மொழிகளில் சரளமாகப் பேசத் தெரிந்திருந்தனர்.).கிபி1000 வாக்கிலிருந்து இந்த நிலை மாறத்துவங்கியது.ஆம்!





இஸ்லாமியப் படையெடுப்பு அப்போதுதான் துவங்கியது.அதன்பிறகுதான் ஜாதி வேற்றுமைகள் இஸ்லாமிய அரசுகளால் கட்டாயமாக திணிக்கப்பட்டன.காரணம் அவர்களின் மத நூலான குர் ஆன் சொல்லும் புனிதக்கடமைகளில் இந்த உலகம் முழுவதையுமே இஸ்லாமாக மாற்ற வேண்டும்.இன்று இந்தியாவில் வாழும் அனைத்து இஸ்லாமிய ஜாதிகளும் இந்துஜாதிகளே.அவற்றில் பெரும்பாலும் வால்முனையில் இஸ்லாமுக்கு மதம் மாற்றப்பட்டவர்களே!






இதற்கான ஆதாரங்களை வந்தார்கள்,வென்றார்கள் என்ற நூலும் (எழுதியவர் ஆனந்த விகடனின் கார்டூனிஸ்ட் மதன்) மேலும் ஏராளமான ஆங்கில நூல்களும் விவரிக்கின்றன.




The Rising and Falling of Great Power என்ற நூலிலும் இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.இதை யேல் பல்கலைக்கழக பொருளாதாரப்பேராசிரியர் உலகம் முழுவதும் பயணித்து,பல நாடுகளின் ரகசிய மற்றும் பொது ஆவணங்களை ஆராய்ந்து தொகுத்து எழுதியிருக்கிறார்.கி.பி.1800 வரை முடிந்த இருபது நூற்றாண்டுகள் வரையிலும் (2000 ஆண்டுகள் வரையிலும்) பாரதமும்,சீனாவும் மாறி மாறி உலக வல்லரசு நாடுகளாக இருந்தன.இவற்றின் உலக பொருளாதாரப் பங்களிப்பு தலா 25% முதல் 35% வரை மாறிமாறி இருந்தன.


அமெரிக்கா வல்லரசாக மாறியதை பா.ராகவன் என்பவர் டாலர் தேசம் என்ற பெயரில் குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக எழுதினார்.அது தற்போது புத்தகமாகவே வெளிவந்துவிட்டது.உலகில் ஏதாவது இரண்டு நாடுகளிடையே போரினைத் தூண்டி,இரண்டு நாடுகளுக்கும் ஆயுதங்களை விற்றே வல்லரசு நிலையை அடைந்தது.அப்படி வல்லரசு நிலையை எட்டிட 400 ஆண்டுகள் ஆனது.முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களின் காலத்தில் போரில் ஈடுபட்ட நாடுகளுக்குத் தேவையான ஆயுதங்களை உற்பத்தி செய்யும் ஆயுதத் தொழிற்சாலையாகவே அமெரிக்கா மாறியது.கொரியாப்போர்,வியட்நாம் போர்,வளைகுடா போர்,ஆப்கானிஸ்தான் போர் என வரலாற்றை கடந்த நூறு வருடமாக படித்துப்பார்த்தாலே உலக சகோதரிகளின் தாலிகளை அறுத்தே அமெரிக்காவின் கழுகுக்கொடி பட்டொளிவீசி ரத்த வாடை வீசுமளவுக்கு பறந்து வருகிறது.இதில்,பல ஹாலிவுட் படங்கள் அமெரிக்காவின் பெருமையை தூதூதூக்க்க்க்கி நிறுத்தும் விதமாக வெளியிடப்பட்டு வருகின்றன.இனி,இந்த பம்மாத்து வேலை எடுபடாது.




உலகின் மிகப்பெரிய அலுவலகம் எது தெரியுமா? அமெரிக்காவின் ராணுவத்தலைமையகம் பெண்டகன் தான்.அங்குதான் 26,000 பேர்கள் பணிபுரிகிறார்கள்..பெண்டகனையே ஒரு விமானம் தாக்கினால்!!!


அமெரிக்காவுக்கு எப்போதுமே மத வெறி உண்டு.உலகில் கத்தோலிக்க கிறிஸ்தவம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது அதன் கனவு.அதற்காக இஸ்லாமிய மதத்தை அழிக்க என்ன செய்யலாம் என்றெல்லாம் ஏகப்பட்ட திட்டங்கள் போட்டுக்கொண்டே வந்தது.இவ்வளவு இருந்தும் இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவிடம் நல்ல நட்பு நாடாகவும் இருக்கிறது.என்ன ஒரு ஒற்றுமை!!!



நாம்,இங்கிலாந்திடம் அடிமைப்பட்டதிலிருந்தே நமது பெருமைகளை மறக்கடிக்க கத்தோலிக்க இங்கிலாந்து திட்டமிட்டது.இந்தியாவில் இங்கிலாந்து அழிவு வேலை பார்த்தது போல்,வேறு எந்த நாட்டிலும் வேலை பார்த்ததில்லை;இங்கிலாந்திலிருந்து குடியேறிவர்களால் உருவானதே அமெரிக்கா! அதனால்தான்,உலக அரங்கில்,ஐ,நா.சபையின் முக்கிய வாக்கெடுப்புக்களில் அமெரிக்கா என்ன செய்தாலும்,இங்கிலாந்து மறுப்பேயில்லாமல் ஏற்றுக்கொள்ளும்.இன்றைய நாள் படி (28.12.2010) ஒரு டாலருக்கு நிகரான நிஜமான ரூபாய் மதிப்பு ரூ.8/-மட்டுமே.இருந்தும் ஏன் ரூ.40 முதல் ரூ.50 வரையிலும் ஒரு டாலரின் நிலை நிலைத்து நிற்கிறது.இந்தியாவில் அமெரிக்காவின் ஏவலாளர்கள் இந்திய நிதித்துறை,பங்குச்சந்தை,ஆட்சிபீடம்,எதிர்க்கட்சிகளின் முக்கியபதவிகளில் நிரம்பியிருக்கிறார்கள்.




இந்துதர்மத்தின் பெருமைகளை கி.பி.1940கள் வரையிலும் அறிந்து பிரமித்த இங்கிலாந்து ஆளும் வர்க்கம் நம்மிடையே வெறுப்பை,ஜாதி வேறுபாட்டை,பகைமையை,நிரந்தரப்பிரிவினையை உருவாக்கியது.அதில் ஒன்றுதான் நம்ம கருணாநிதி தாத்தா அடிக்கடி சொல்லும் ஆரியர் திராவிடர் என்ற பிரிவினை வார்த்தைகள்.சுதந்திரம் பற்றிய வரலாற்றை ஊன்றி நாம் படிக்கவே நமக்கு ஒரு வருடம் ஆகும்.அதை படித்துவிட்டாலே புரிந்துவிடும் இந்திய தேசிய காங்கிரஸ் இந்தியாவின் வளர்ச்சிக்கு முதல் எதிரி என்று!!!

ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத் தடை!

உயிர்க் கொல்லியான கொடிய புற்று நோயை தோற்றுவிக்கக் கூடிய இரசாயனக் கலவை சேர்க்கப் பட்டிருப்பதை கண்டுபிடித்ததைத் தொடர்ந்து ஹெட் & ஷோல்டர் நிறுவனத்தின் இரண்டு உற்பத்தி பொருட்களுக்கு கத்தார் அரசாங்கம் தடைவிதித் துள்ளது. அத்துடன் இந்த தடை தற்காலிகமானதல்ல, அது நீடிக்கும் என்றும் கத்தார் சுற்றுச் சூழல் அமைச்சக ஆய்வுக் கூட பிரிவின் தலைமை அதிகாரி டாக்டர். ஸைஃப் அல் குவைரி தெளிவுபட கூறியுள்ளார். 

ப்ராக்டர் அண்டு கேம்பிள் நிறுவன தயாரிப்பான இருவகை ஹெட் & ஷோல்டர் ஷாம்பூக்களில் புற்று நோயை உண்டு பண்ணக் கூடிய “டயோக்சைடு” எனும் இரசாயனப் பொருள் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் தான் கத்தார் நாட்டு அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண் டுள்ளது.



அழகு சாதனங்களின் மீதான மக்களின் மோகத்தை மூலதன மாக்கி நுகர்வோரை ஈர்க்கும் நோக்கில், சகல விதமான தார்மீக நெறிமுறைகளையும் மீறி & அபாய கரமான பின்விளைவுகளை பற்றிக் கூட கிஞ்சிற்றும் கவலைப் படாமல்தான் பெரும்பாலான இத்தகைய உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை கவர்ச் சிகரமான விளம்பரங்களுடன் சந்தைப்படுத்தி வருகின்றன.


விளக்கை நோக்கி பாய்ந்து வீழ் ந்து மடியும் விட்டில்களைப் போல, மக்கள் அழகு மோகத்தால் இயற்கை அழகையும் ஆரோக்கியத்தையும் கெடுத்து பாழ்படுத்திக் கொள்வதுடன் கொடிய நோய்களுக்கும் ஆட்பட்டு வருகின்றனர்.


மக்கள் நலனில் அக்கறை காட்டாத அரசாங்கங்களும், அதிகாரிகளும் யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்கிற போக்கில் தங்களின் வருவாயில் மட்டுமே குறியாக உள்ளனர்.


எதிர்பாராத வகையில் ஏதேனும் திடீர் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் ஒழிய இத்தகைய மென்விஷப் பொருட்களின் உற்பத்தி & வினியோகம் & பயன்பாடு பற்றியெல்லாம் எவரும் கவலைப்படுவதில்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயமாகும்.


எனவே, சமூக நலனில் அக்கறை உள்ளவர்கள் இதுபோன்ற விஷயங்களிலும் கவனம் செலுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்ட வேண்டும், மக்களும் விழிப்படைய வேண்டும். 

அமெரிக்கா எப்படி திவாலாகும் ....?


அமெரிக்க மக்களின் சேமிப்பு சதவீதம் கீழே தரப்பட்டுள்ளது:
1970 ஆம் ஆண்டில் 9.4%
1975 ஆம் ஆண்டில் 10.6%
1980 ஆம் ஆண்டில் 10.0%
1985 ஆம் ஆண்டில் 9.0%
1990 ஆம் ஆண்டில் 7.0%
1995 ஆம் ஆண்டில் 4.6%
2000 ஆம் ஆண்டில் 2.3%
2005 ஆம் ஆண்டில் -0.04%
2006 ஆம் ஆண்டில் -1.00%
2008 ஆம் ஆண்டில் -116.00%

அதாகப்பட்டது 30 கோடி அமெரிக்கர்களிடம் 120 கோடி கடன் அட்டைகள்(க்ரடிட் கார்டுகள்) புழக்கத்தில் இருக்கின்றன.சராசரியாக ஒரு அமெரிக்கனுக்கு 4 கடன் அட்டைகள் வைத்திருக்கிறான்.இந்த கடன் அட்டைகள் மூலமாக கி.பி.2011 முதல் கி.பி 2012 வரையிலான நிதி ஆண்டில் ஒரு அமெரிக்கன் எவ்வளவு சம்பாதிப்பானோ, அவ்வளவையும் இந்த 2010 ஆம் ஆண்டிலேயே செலவழித்து விட்டான்.இது அமெரிக்க சமுதாயத்தின் வண்டவாளம்.

அமெரிக்க அரசாங்கம் எப்படி செயல்படுகிறது? தினமும் 10,000 கோடி டாலர்கள் உலக நாடுகளிடம் கடன் வாங்கி ஒபாமா அரசாங்கம் செயல்பட்டுவருகிறது.இவ்வளவு பெருமை வாய்ந்த அமெரிக்கா நம்மை(இந்தியாவை)யும், நமது சேமிக்கும் பழக்கத்தையும் எப்படி புகழ்ந்தார்கள் தெரியுமா?

இந்தியர்கள் தலைவிதியில் நம்பிக்கை உள்ளவர்கள்.எனவே,அவர்களுக்கு சுயச்சார்பு,எதிர்காலம் இவற்றில் நம்பிக்கை கிடையாது.தன்னம்பிக்கையோடு செயல்படுவது கிடையாது.தலைமைப்பண்பு(லீடர்ஷிப்)அதனால் அவர்கள் சேமிக்கிறார்கள்.
ஆனால்,இன்று அமெரிக்காவின் பள்ளிகளில் சேமிப்பைப்பற்றி பாடத்திட்டமாக வைக்க கொள்கையளவில் முடிவெடுத்துள்ளனர்.ஆதாரம்:டிசம்பர் 2009 தினமலர்.

அமெரிக்க வங்கிகள் திவாலானது எப்படி? இதே பாணிதான்!
ஒரு வங்கியின் ரொக்க இருப்பு ரூ.1000 கோடிகள் என வைத்துக்கொள்வோம்.அந்த வங்கி வேறு வங்கி அல்லது தனிமனிதன் அல்லது அமெரிக்க அரசிடம் வாங்கும் கடன் ரூ.10,000 கோடிகள்தான்.ரூ.11,000 கோடிகளை வைத்து கடன்களைக் கொடுத்துக்கொண்டே இருந்தது.வராக்கடன் ரூ.7000 கோடிகள்.



இப்போது அந்த வங்கியை நமது ப.சிதம்பரத்தாலோ,மான் டேக்சிங் அலுவாலியாவாலேயோ,மன்மோகன்சிங்காலேயே காப்பாற்ற முடியுமா?
இந்தியாவின் சேமிப்பு சதவீதத்தைப் பார்ப்போம்:

கி.பி.1975 ஆம் ஆண்டில் 13.8%

கி.பி.1998 ஆம் ஆண்டில் 22.8%

கி.பி.2009 ஆம் ஆண்டில் 38.0%

அமெரிக்கா நினைத்தது;இந்தியாவில் தகவல் தொழில் நுட்பத்தை பரவச்செய்தால், இந்திய மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். பிளஸ் டூ அல்லது பட்டம் முடித்த இந்திய ஆண்,பெண்கள் கால் சென் டர்,பி.பீ.ஓ.,சாப்ட்வேர் நிறுவனங்களில் மாதம் ரூ10,000/-, மாதம் ரூ50,000/-, மாதம் ரூ.1,00,000/- வாங்கினால், நம்மைப்போலவே (அமெரிக்கர்களைப் போலவே) அவர்களும் வெட்டியாகச் செலவழிப்பார்கள்.நம்மைப்போலவே, இந்தியாவும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் என கற்பனை செய்தது.



இதில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வேலை பார்த்தால் அது பெரிய கவுரவம் என்ற பில்ட் அப் வேறு.ஏ யப்ப்ப்பா!
அமெரிக்காவிற்கு பறப்பது பெரிய்ய கவுரவம் என பி.ஈ., எம்.சி.ஏ., படிப்பவர்கள் கலர் கலராக கனவு கண்டுகொண்டு இருக்கிறார்கள்.


அமெரிக்காவின் இந்த சரிவை முன்கூட்டியே உணர்ந்துதான், இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி சொன்னார்:தற்போது இருப்பது போல, எதிர்காலத்தில் தகவல் தொழில் நுட்பத்துறையில் அபரித சம்பளம் கிடைப்பது சந்தேகமே!
அவர் சொன்னதன் உள்ளார்த்தம் இதுதான்.

வெள்ளி, 8 ஜூலை, 2011

எந்தவொரு உயிரினமும் வாழ முடியாத பூமியின் ஆழத்திற்குள் புதியவகைப் புழுக்கள் !

எந்தவொரு உயிரினமும் வாழ முடியாது எனக் கருதப்படும் பூமியின் ஆழமான பகுதியில் சில வகைப் புழுக்கள் உயிர்வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது. பூமியின் மேற்பரப்பிலிருந்து உட்பகுதியை நோக்கிச் செல்லச் செல்ல வெப்பநிலை அதிகரித்துச் செல்கிறது.இதனால் அங்கு நுண்ணங்கிகள் உள்ளிட்ட எந்தவொரு உயிரினமும் வாழ முடியாது. ஆனால் தென்னாபிரிக்காவின் இரு தங்கச் சுரங்கங்களில் 1.3 கிலோமீற்றர் ஆழத்தில் 48 பாகை செல்சியஸ் வெப்பநிலை நீரில் (118 F ) இரு வகையான புழுக்கள் உயிர்வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
விஞ்ஞான ஆய்வுகளின்படி இவ்வளவு ஆழமான பகுதியில் இதுவரை எந்தவொரு ஒரு கல பக்ரீரியா கூட உயிர்வாழ்ந்ததை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கவில்லை. இந்நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இருவகைப் புழுக்கள் தொடர்பில் அவர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். குறித்த சுரங்கங்களினுள் கண்டுபிடிக்கப்பட்ட இரு வகைப் புழுக்களில் ஒன்று புதிய வகை இனமாகும். விஞ்ஞானிகள் அதற்கு ஹலிசெவலோபஸ் மெபிஸ்ரோ எனப் பெயரிட்டுள்ளனர்.
 
மற்றையது முன்பே அறியப்பட்ட வட்டப் புழு இனமான பிலேக்ரஸ் அகுவாரிலிஸ் ஆகும். தென்னாபிரிக்காவிலுள்ள பீற்றிக்ஸ் மற்றும் ட்றீபொன்ரெய்ன் தங்கச் சுரங்கங்களினுள் காணப்பட்ட குழிகளினுள் காணப்பட்ட நீரிலேயே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொதுவாக இத்தகைய நீரில் பக்ரீரியாக்கள் காணப்படுகின்றபோதிலும் புழுக்கள் காணப்பட்டமையானது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன் இப்புழுக்கள் குறைந்தளவிலான ஒட்சிசனுடன் வாழக்கூடிய ஆற்றலைக் கொண்டவை என ஒன்ஸ்ரொட் என்ற விஞ்ஞானி விளக்கமளித்துள்ளார்.
 
மேலும் நீரில் வாழக்கூடிய இப்புழுக்கள் 3000 முதல் 10,000 வருடங்கள் வரை வாழக்கூடியவை. இப்புழுக்கள் புராண காலத்தில் புவிமேற்பரப்பிலேயே காணப்பட்டிருந்தன எனவும் பின்னர் மழை நீருடன் வெடிப்புகள் மூலமாக புவியின் ஆழப்பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்டு தற்போது அவை அங்கேயே நிரந்தரமாக வாழ்ந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

சிறுகோள்கள் பூமியில் மோதினால் பேரழிவிற்கு உண்டாகும் நாடுகளின் பட்டியல் வெளியீடு

இங்கிலாந்தில் சவுத்ஹெம்டன் பல்கலைக்கழக நிபுணர்களே இப்பட்டியலை வெளியிட்டுள்ளனர். இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள் பாரிய அழிவுகளைச் சந்திக்கலாமெனவும் அதன் மூலம் அந்நாடுகள் மீளமுடியாமல் போகுமெனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனா, அமெரிக்கா, இந்தோனேசியா, இந்தியா,ஜப்பான் ஆகிய நாடுகள் இத்தகைய சிறு கோள்களின் தாக்குதலுக்குள்ளானால் அங்கு பாரிய உயிரிழப்புக்கள் நிலவும் சாத்தியம் நிலவுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
 
மேலும் இத்தாக்குதலின் போது நாடுகளின் பொதுக்கீழ் கட்டுமான வசதிகளும் பாரிய அழிவிற்கு உள்ளாகுமெனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 12 மைல்கள் விட்டமுடைய சிறுகோளொன்று பூமியில் மோதுண்டால் இங்குள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் அனைத்தும் முற்றாக அழிவடையுமென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
இத்தகைய ஒரு தாக்குதல் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்ததாகவும் இதன் போதே டைனோசர்கள் முற்றுமாக அழிந்தாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
 
நாடுகளின் பட்டியல் பின்வருமாறு:
1. சீனா.
2.இந்தோனேசியா.
3. ஜப்பான்.
4. இந்தியா.
5. பிலிப்பைன்ஸ்.
6. இத்தாலி.
7. பிரித்தானியா.
8. பிரேசில்.
9. நைஜீரியா.
10. அமெரிக்கா.

823 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அதிசயம் இம் மாதத்தில் !



2011 ம் ஆண்டில் ஜூலை மாதத்தில் ஒரு அதிசயம் இருக்கிறது. அதாவது இந்த ஜூலை மாதத்தில் 3ம் திகதி, 10ம் திகதி ,17ம் திகதி, 24ம் தேதி  மற்றும் 31ம் தேதி  ஆகிய தினங்கள் ஞாயிற்றுக் கிழமைகளாகும். அதாவது ஒரு மாதத்தில் 4 ஞாயிற்றுக்கிழமைகள் வருவதற்கு பதிலாக 5 ஞாயிற்றுக்கிழமைகள் வருகின்றன. அதுமட்டுமா ? சனிக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் கூட இம் மாதத்தில் 5 தரம் வருகின்றது ஒரு பெரும் அதிசயமாகும். வழமையாக சிலவேளைகளில் கிழமைகளில் 1 நாள் கூடிக்குறையலாம். ஆனால் வெள்ளி, சனி , ஞாயிறு ஆகிய தினங்கள் இம் மாதத்தில் 5 தரம் ஒருமித்து வருகிறது.
 
இது 823 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் வரும் என்கிறார்கள் எண் கணித வல்லுனர்கள். சனி ஞாயிறு ஆகிய கிழமைகளில் வேலைசெய்தால் சம்பளம் ஒன்றரை மடங்காக வழங்கப்படும் கம்பெனிகளில் வேலைசெய்வோருக்கு இம் மாதம் குரு உச்சம்தான், ஆனால் சனி ஞாயிறு தினங்களில் ஓய்வு எடுப்போர் இம் முறை கொஞ்சம் நீண்ட நாட்கள் எடுப்பர். எப்படிப் பார்த்தாலும் இம் மாதம் ஒருவகையில் யோகம் தான் !

திங்கள், 4 ஜூலை, 2011

செவ்வாய்கிரகம் அழிந்தது அணு ஆயுத யுத்தத்தினால் தான்: புதிய சர்ச்சை


         
           நம்புவதற்கே சற்று கடினமாக இருக்கும். ஆனால் உண்மையிலேயே வியக்க வைக்கும் தகவல்களை கொண்டது தான் இந்த கட்டுரை. இதிலே கூறப்பட்டு இருக்கும் தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் வெகு வேகமாக நமது பூமியும், செவ்வாய்க் கிரகம் போலே ஆகிவிடும் போல் தெரிகிறது. பிறந்து பதினைந்தே நாட்கள் ஆன குழந்தையின் தலை நிற்குமா? நான்கு மாதத்திலேயே தாயை "அம்மா" என்றழைக்குமா? ஒன்றரை வயதிலேயே செய்தித்தாள் தலைப்புச் செய்திகளைப் படிக்குமா? இரண்டு மூன்று வயதிலேயே விண்வெளியைப் பற்றி விளக்கிக் கூறும் அறிவு கிட்டுமா?
 
வழக்கமாக நம் மூளையில் பதியப்பட்ட தகவல்களின்படி "இல்லை" என்பதே நம் பதிலாக இருக்கும். ஆனால் இதெல்லாம் நடந்தது உண்மை தான் என்று சொல்கிறார்கள் போரிஸ்காவின் பெற்றோர். சிலருக்கு பூர்வ ஜென்ம ஞாபகம் வரும். அந்த மாதிரி இந்த பையனுக்கு பூர்வ ஜென்ம வாசனை வந்து, நான் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்த பையன் என்று கூறி அதன் பிறகு விஞ்ஞான உலகையே அவனது தகவல்களால் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறான்.
 
யார் இந்த போரிஸ்கா: ரஷ்யாவில் சைரினொவிஸ்க் என்னும் நகரத்தில் ஜனவரி 11, 1996ல் பிறந்தவன் போரிஸ் கிப்ரியானோவிச், சுருக்கமாக போரிஸ்கா. மேலே கேட்கப்பட்ட அத்தனை கேள்விக்குறிகளையும் ஆச்சரியக்குறிகளாக மாற்றியவன். தற்போது 15 வயதாகிறது இந்தச் சிறுவனுக்கு. இவனது அசாத்தியமான ஆற்றல்களைக் கண்டு கவலைப்படுகின்றனர் பெற்றோர். புதிரான சில வழிகளின் மூலம் அவனுக்குள் தகவல்கள் ஊட்டப்படுவதாக எண்ணுகின்றனர். இரண்டு வயதிலேயே கிண்டர் கார்டனில் சேர்க்கப்பட்ட போரிஸ்காவின் மொழியாற்றல், நினைவுத் திறன், சுட்டித்தனம் போன்றவை அசாதாரணமாய் இருந்ததாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
 
யாரும் அவனுக்கு சொல்லிக் கொடுக்காமலே தானாக பல திறமைகள் அவனுக்கு வந்ததாகக் கூறுகின்றனர். சில நேரங்களில் சம்மணமிட்டு அமர்ந்து செவ்வாய் கிரகம், அங்கு நிலவிய வாழ்க்கை முறை, இதர கிரக அமைப்புகள் போன்றவற்றைப் பற்றி விவரிக்கிறானாம் போரிஸ். தான் செவ்வாய் கிரகத்திலிருந்து பிறப்பெடுத்து இங்கு வந்ததாகவும், இன்றும் செவ்வாய் கிரகத்தில் மக்கள் வசிப்பதாகவும், ஆனால் பயங்கரமான பேரழிவினால் தற்போது நிலத்தின் அடிப்பரப்பில் வாழ்ந்து வருவதாகவும் கூறுகிறான். மேலும் செவ்வாய் கிரக வாசியாக இருந்த போது பூமிக்கு ஆராய்ச்சிக்காக வந்து சென்றதாகவும் கூறுகிறான்.
 
லெமூரியக் கண்டத்தின் ஆய்வுப் புத்தகம் ஒன்றை அவனது தாய் அவனுக்குக் கொடுத்த போது ஆச்சரியத்துடன் பார்த்த போரிஸ் லெமூரியா கண்டத்தின் அழிவு பற்றி பரபரப்பாக விவரிக்க ஆரம்பித்தான். இதெல்லாம் எப்படித் தெரியும் என்று கேட்டால் எல்லாம் நினைவில் இருக்கிறது என்று பதிலளிக்கிறான். பெரிய பிரமிடுகளைப் பற்றிப் பேசும் போரிஸ் மனிதத் தலை, சிங்க உடம்பாக காட்சியளிக்கும் Sphinx பிரமிடுக்குள் மனித வாழ்க்கையின் ரகசியங்கள் இருக்கின்றன என்றும், அதைத் திறப்பதற்கான வழி அதன் காதுப் பகுதியில் உள்ளது போலத் தெரிவதாகவும் விவரிக்கிறான்.
 
போரிஸ்காவைப் போன்ற குழந்தைகள் பிறப்பது சமீப காலத்தில் சாத்தியமாகியுள்ளது என்றும் பொதுவாக 1980க்குப் பின்னர் பிறந்த குழந்தைகளில் சிலருக்கு இது போன்ற இயற்கையின் கொடை கிடைத்திருக்கிறது என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர். இத்தகைய தன்மையுடையோரை "இண்டிகா குழந்தைகள்" என்றும் அழைக்கின்றனர்.
 
மாறிவரும் பூமியின் காந்தப் புலனானது 2009 மற்றும் 2012 காலகட்டங்களில் மிகப் பெரும் இரண்டு அழிவுகளை ஏற்படுத்தும் என்று போரிஸ் கூறுகிறான். செவ்வாயில் ஏற்பட்ட பேரழிவிற்கு அணு ஆயுதப் போரே காரணமென்றும், கதிரியக்கங்களின் வீரியம் காரணமாக தப்பிப் பிழைத்தவர்கள் வெளியே வரமுடியவில்லை என்றும், பாதுகாப்பான கவச அறைகளில் அவர்கள் பாதாளத்தில் வாழ்வதாகவும் கூறும் போரிஸ் அவர்கள் கார்பன்-டை-ஆக்ஸைடை சுவாசித்து வாழ்பவர்கள் என்றும் கூறுகிறான்.
 
பூமியைப் பொறுத்த வரை ஆக்ஸிஜனை மட்டுமே சுவாசிக்க முடியும் என்றும், ஆனால் இந்த பிராணவாயு மனிதர்களின் வாழ்நாளைக் குறைப்பதாகவும் சொல்கிறான். விண்வெளியைப் பற்றி சகலமும் தெரிந்து வைத்திருக்கும் போரிஸ் UFOக்களைப் பற்றியும் நிறைய பேசுகிறான். செவ்வாயில் இருக்கும்போது ஸ்பேஸ்கிராப்டை இயக்கும் பயிற்சி பெற்றிருந்ததாகவும் கூறுகிறான். இவனை வியப்புடன் நோக்கும் விஞ்ஞான உலகம், விஞ்ஞான பேராசிரியர்களே சரளமாக உரையாடுவதில் உள்ள சிக்கல்கள் இவனுக்கு இல்லை எனத் தெரிவிக்கிறது.
 
போரிஸ்காவைப் பொறுத்தவரை,"கள்ளங்கபடமில்லாத அன்பும், எதையும் மன்னிக்கும் தயாள குணமுமே மக்களின் சந்தோஷமான வாழ்க்கைக்கு வழி என்றும், இதைத் தாண்டிய எந்தவொரு விஷயமும் மனித குல அழிவிற்கு வழிவகுக்கும்" என்கிறான்.
 
போரிஸ்காவின் கூற்றுகளின் படி நாம் வாழும் இப்பூமி தன்னைப் புதுப்பித்துக் கொள்ள ஆயத்தமாகி வருவது போலத் தெரிகிறது.