வியாழன், 14 ஜூலை, 2011

அமெரிக்கா எப்படி திவாலாகும் ....?


அமெரிக்க மக்களின் சேமிப்பு சதவீதம் கீழே தரப்பட்டுள்ளது:
1970 ஆம் ஆண்டில் 9.4%
1975 ஆம் ஆண்டில் 10.6%
1980 ஆம் ஆண்டில் 10.0%
1985 ஆம் ஆண்டில் 9.0%
1990 ஆம் ஆண்டில் 7.0%
1995 ஆம் ஆண்டில் 4.6%
2000 ஆம் ஆண்டில் 2.3%
2005 ஆம் ஆண்டில் -0.04%
2006 ஆம் ஆண்டில் -1.00%
2008 ஆம் ஆண்டில் -116.00%

அதாகப்பட்டது 30 கோடி அமெரிக்கர்களிடம் 120 கோடி கடன் அட்டைகள்(க்ரடிட் கார்டுகள்) புழக்கத்தில் இருக்கின்றன.சராசரியாக ஒரு அமெரிக்கனுக்கு 4 கடன் அட்டைகள் வைத்திருக்கிறான்.இந்த கடன் அட்டைகள் மூலமாக கி.பி.2011 முதல் கி.பி 2012 வரையிலான நிதி ஆண்டில் ஒரு அமெரிக்கன் எவ்வளவு சம்பாதிப்பானோ, அவ்வளவையும் இந்த 2010 ஆம் ஆண்டிலேயே செலவழித்து விட்டான்.இது அமெரிக்க சமுதாயத்தின் வண்டவாளம்.

அமெரிக்க அரசாங்கம் எப்படி செயல்படுகிறது? தினமும் 10,000 கோடி டாலர்கள் உலக நாடுகளிடம் கடன் வாங்கி ஒபாமா அரசாங்கம் செயல்பட்டுவருகிறது.இவ்வளவு பெருமை வாய்ந்த அமெரிக்கா நம்மை(இந்தியாவை)யும், நமது சேமிக்கும் பழக்கத்தையும் எப்படி புகழ்ந்தார்கள் தெரியுமா?

இந்தியர்கள் தலைவிதியில் நம்பிக்கை உள்ளவர்கள்.எனவே,அவர்களுக்கு சுயச்சார்பு,எதிர்காலம் இவற்றில் நம்பிக்கை கிடையாது.தன்னம்பிக்கையோடு செயல்படுவது கிடையாது.தலைமைப்பண்பு(லீடர்ஷிப்)அதனால் அவர்கள் சேமிக்கிறார்கள்.
ஆனால்,இன்று அமெரிக்காவின் பள்ளிகளில் சேமிப்பைப்பற்றி பாடத்திட்டமாக வைக்க கொள்கையளவில் முடிவெடுத்துள்ளனர்.ஆதாரம்:டிசம்பர் 2009 தினமலர்.

அமெரிக்க வங்கிகள் திவாலானது எப்படி? இதே பாணிதான்!
ஒரு வங்கியின் ரொக்க இருப்பு ரூ.1000 கோடிகள் என வைத்துக்கொள்வோம்.அந்த வங்கி வேறு வங்கி அல்லது தனிமனிதன் அல்லது அமெரிக்க அரசிடம் வாங்கும் கடன் ரூ.10,000 கோடிகள்தான்.ரூ.11,000 கோடிகளை வைத்து கடன்களைக் கொடுத்துக்கொண்டே இருந்தது.வராக்கடன் ரூ.7000 கோடிகள்.



இப்போது அந்த வங்கியை நமது ப.சிதம்பரத்தாலோ,மான் டேக்சிங் அலுவாலியாவாலேயோ,மன்மோகன்சிங்காலேயே காப்பாற்ற முடியுமா?
இந்தியாவின் சேமிப்பு சதவீதத்தைப் பார்ப்போம்:

கி.பி.1975 ஆம் ஆண்டில் 13.8%

கி.பி.1998 ஆம் ஆண்டில் 22.8%

கி.பி.2009 ஆம் ஆண்டில் 38.0%

அமெரிக்கா நினைத்தது;இந்தியாவில் தகவல் தொழில் நுட்பத்தை பரவச்செய்தால், இந்திய மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். பிளஸ் டூ அல்லது பட்டம் முடித்த இந்திய ஆண்,பெண்கள் கால் சென் டர்,பி.பீ.ஓ.,சாப்ட்வேர் நிறுவனங்களில் மாதம் ரூ10,000/-, மாதம் ரூ50,000/-, மாதம் ரூ.1,00,000/- வாங்கினால், நம்மைப்போலவே (அமெரிக்கர்களைப் போலவே) அவர்களும் வெட்டியாகச் செலவழிப்பார்கள்.நம்மைப்போலவே, இந்தியாவும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் என கற்பனை செய்தது.



இதில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வேலை பார்த்தால் அது பெரிய கவுரவம் என்ற பில்ட் அப் வேறு.ஏ யப்ப்ப்பா!
அமெரிக்காவிற்கு பறப்பது பெரிய்ய கவுரவம் என பி.ஈ., எம்.சி.ஏ., படிப்பவர்கள் கலர் கலராக கனவு கண்டுகொண்டு இருக்கிறார்கள்.


அமெரிக்காவின் இந்த சரிவை முன்கூட்டியே உணர்ந்துதான், இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி சொன்னார்:தற்போது இருப்பது போல, எதிர்காலத்தில் தகவல் தொழில் நுட்பத்துறையில் அபரித சம்பளம் கிடைப்பது சந்தேகமே!
அவர் சொன்னதன் உள்ளார்த்தம் இதுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

PLASE COMMEND IT.