செவ்வாய், 28 டிசம்பர், 2010

15 ஆண்டுகள் சோடி மாறாது வாழும் பறவைகள்

உயிரினக்காப்பாளர்களால் கடந்த 15ஆண்டுகளாக இனங்காணப்பட்டு வரும் 20 ஆண்டு கால வயதுடைய பெண் osprey (வல்லூறு வகைப் பறவைகள்) பறவை.கடந்த15 ஆண்டுகளாக சோடி மாற்றமின்றி,
ஆண்டு தோறும் கிட்டத்தட்ட 3000 மைல்கள் தாண்டி ஆபிரிக்காவில் இருந்து குடிபெயர்ந்து பிரித்தானிய ஸ்கொட்லாண்ட் பகுதிக்கு வந்து முட்டையிட்டு வரும் osprey வகை சோடிப் பறவைகள் இம்முறையும் அங்கு வந்து 53 வது முட்டையை 
வழமை போல ஈஸ்ரர் காலத்தில் இட்டு பெருமை சேர்த்துள்ளன.
இந்த முட்டை பொரிக்க ஆறு கிழமைகள் பிடிக்கும். இப்பறவைகள் இலை தளிர்காலத்தில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் வழக்கம் உடையவை.


ஒரு காலத்தில் சோடி காத்து வாழ்ந்த மனிதர்கள் இப்ப எல்லாம் சோடி மாற்றி மாற்றி வாழ்வதையே நாகரிகம் என்று கண்டுவிட்டுள்ள நிலையில் பறவைகள் இன்றும் அப்படியே..!
வாழ்த்துக்கள் பறவைகளே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

PLASE COMMEND IT.