செவ்வாய், 28 டிசம்பர், 2010

நீங்கள் பயன்படுத்த மறந்த மந்திர சாவி !!

        புராணங்களிலும்,இதிகாசங்களிளிலும் பல மந்திர சொல்கள்,வேண்டியதை பெற்றிட பயன்படுத்த பட்டதாக நாம் படித்திரிகிறோம் உண்மையில் அது உண்மையா? சுவராசியதிற்காக சேர்க்கப்பட்ட ஒன்றா? என நமக்கு தெரியாது !

ஆனால் நவின மனித வாழ்கையை புரட்டி போட்ட ஒரு மந்திர சொல் ஒன்று உண்டு..!யார் எல்லாம் இதனை உச்சரித்து உணர்கிறார்களோ அவர்கள் தாங்கள் வேண்டியதை பெற்று கொண்டார்கள்!பெற்று கொள்வார்கள் !நாளை பெறவும் செய்வார்கள்!.இது வரலாறு மட்டுமில்ல நிகழ்கால உண்மையும் கூட!

அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..!

மனிதன் தனக்கு முன் வரும் எல்லா நிகழ்வுகளையும் இதனை கொண்டு ஆராய்ந்து பார்க்கவே இந்த அற்புத மந்திர சொல் தருவிக்க பட்டது.
எங்கெல்லாமோ சுற்றிவிட்டு நம்முடைய வீட்டின் முன் வருகிறோம் ..ஆனால் வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருக்கிறது,மலைத்து நிற்கிறோம் ,நம்மிடையே அந்த பூட்டினை திறந்து உள் செல்ல சாவி இருக்கிறது எனினும் நாம் அதனை உபயோக படுத்துவதில்லை.

நம்மிடத்தில் சாவி இருக்கின்றது என்கின்ற விழிப்புணர்வு நம்மிடத்தில் இல்லை.அந்த சாவி போல் தான் 'ஏன் 'என்கின்ற மந்திர சொல்லும்.இதனை பயன் படுத்தியவர்கள் வாழ்கையை அர்த்தப்படுத்தி மற்றவர்களின் வாழ்கையையும் மாற்றி அமைத்தார்கள்

உலகில் தோன்றிய தத்துவ ஞானிகள்..

உலகை மாற்றி அமைத்த அறிவியல் vingnaanikal ..

செல்வத்தை வான் மழையென கொட்ட செய்த தொழில் மேதைகள்..

உடல் நோயை ஒழித்த மருத்துவ மேதைகள் ...

என பலரும் ஒவ்வொரு தருணத்திலும் ஏன் என கேட்டார்கள்...மலைக்கவில்லை..! மீண்டும் ..மீண்டும் ஏன் என கேட்டார்கள். மந்திர வார்த்தை போல் தாங்கள் எண்ணியதை கண்டு கொண்டார்கள்.!

நம்முடைய சாமான்ய வாழ்க்கையிலும் நமக்கு வேதனைகளும், சோதனைகளும் வரும் போது நம்மில் பெரும் பாலோர் இந்த வார்த்தையை பயன் படுத்துவதில்லை மாறாக பரிகாரம் தேடி ஜோதிடர்களையும்,கோவில்களையும் நோக்கி ஓடுகிறோம்!
உண்மையில் நாம் கலங்கும் போது "ஏன் "இந்த நிலை நாம் கேட்கிறோமா?

நாம் தோற்று நிற்கும் போது ஏன் இந்த நிலை என கேட்கிறோமா?
நம்மை மற்றவர்கள் ஏமாற்றி விட்டாதாக ,நம்பிக்கை துரோகம் செய்து விட்டாதாக நாம் புலம்பும் போது -ஏன் இந்த நிலை என கேட்பத்தில்லை !

நாளைய நமது பாதைகளின் இலக்குகளை நாம் தீர்மானிக்க தவறுகிறோம் ..பின் பூட்டிய வீட்டின் கதவின் நிற்பது போல் நாம் செய்வைதயாறியது மலைத்து நிற்கிறோம்
உண்மையில் வரலாற்றின் பக்கங்களிலும்,நிகழ் கால வெற்றிகளையும் கொண்டு வந்த ஒரே ஆதாரம் நிறைந்த மந்திர சொல் "ஏன்"- என்பதேயாகும்.

ஆப்பிள் பழம் மரத்திலிரிந்து விழும் போது நியூட்டன் " ஏன் "விழுகிறது என கேட்டார் அதனால் புவி ஈர்ப்பு குறித்தான சித்தாந்தை கண்டு பிடித்தார்.

ஜி.டி.நாய்டு முதல் ..இன்றைய பல மேதைகள் வரை உபயோகித்து கண்டறிந்த ஒரு மந்திர சொல் ஏன் என்பதேயாகும்.
மீண்டும் உங்கள் முன் எந்த கேள்விக்கும்,சோதனையான தருணத்திற்கும் மலைத்து போய் நின்று விடாதீர்கள் ...மாறாக உரக்க கேளுங்கள்

ஏன்....!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

PLASE COMMEND IT.