திங்கள், 27 டிசம்பர், 2010

40 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தாவரம் !!

         இது குறித்து பல்கலையின் தாவரவியல் துறை இணை பேராசிரியர் ராமச்சந்திரன் கூறியதாவது: பாரதியார் பல்கலை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால், இங்குள்ள தாவரங்களை ஆய்வு செய்து வருகிறோம். அப்படி ஆய்வு செய்ததில், இங்கு "சைலோட்டம் நூடம்' எனும் அரிய வகை தாவரம் இருந்தது. இந்த அரிய வகை தாவரம் 40 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் தோன்றிய முதல் சாற்றுக் குழாய்களைக் கொண்ட ஒரு தாவரம். "சைலோட்டாசியே' என்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்த இந்த தாவரம், "சைலோப்பிசைடா' என்ற கூட்டமைப்பில் காணப்படுகிறது. இதன் கிளைகள், இரு வேறு கிளைகளாகப் பிரிந்து காணப்படுவதும், வித்துக்களை உண்டாக்கும் தன்மை கொண்ட பகுதிகள் ஒன்றாக இணைந்து காணப்படுவதும் இந்த தாவரத்தின் சிறப்பு தன்மைகள். இதற்கு வேர்கள் இல்லை,வேர்களுக்குப் பதிலாக, இரு கிளைகளாகப் பிரியும் மட்ட நிலத்தண்டு மட்டுமே உண்டு. இலைகள் சிறியவை. வித்துக்களை உருவாக்கும் பகுதிகள், தாவரத்தின் தண்டின் நுனி அல்லது பக்கவாட்டில் நேரடியாக ஒட்டிக் கொண்டிருக்கின்றன. இந்த அரிய வகை தாவரயினத்தை அழிவில் இருந்து பாதுகாக்க ஆய்வு செய்து வருகிறோம் என்று பேராசிரியர் ராமச்சந்திரன் கூறினார். 
 பூமியில் 40 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய வேர்கள் இல்லாத அரிய வகை தாவரம், பாரதியார் பல்கலை வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலை வளாகத்தில் உள்ள தாவர வகைகளை கணக்கு எடுக்கும் பணி துவங்கியது. கணக்கு எடுப்பதோடு, அதன் வரலாறு, தனித்துவம் குறித்தும் பல்கலையின் தாவரவியல் பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர். இந்த ஆய்வில், "சைலோட்டம் நூடம்' எனும் அரிய தாவர வகை கண்டுபிடிக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

PLASE COMMEND IT.