உலகில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் தான் வசிக்கின்றனர் என உலக வங்கியின் ஆய்வு தெரிவிக்கிறது. ஒரு நாளைக்கு 1.25 டாலருக்குக் குறைவான வருமானத்தில் வசிப்போரை வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாக உலக வங்கி கருதுகிறது. அதன்படி இந்தியாவில் 42 சதவீதம் மக்கள், அதாவது சுமார் 46 கோடி பேர் வறுமையில் வாழ்வதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இது உலக அளவிலான ஏழை மக்களில் 33 சதவீதமாகும். அதே நேரத்தில் இந்தியாவில் வறுமை மெதுவாக ஆரம்பித்துள்ளதாகவும் உலக வங்கியின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
1981-1990ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தை விட 1990-2005ம் ஆண்டு காலத்தில் இந்தியாவில் வறுமையில் வாழ்வோரின் எண்ணிக்கை 0.7 சதவீதம் அதிகமாக குறைந்துள்ளது. அதிலும் 2002ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டுக்கள் வறுமையிலிருந்து மீண்ட மக்களின் எண்ணிக்கை சுமார் 4.7 கோடியாகும். அதே நேரத்தில் இந்தியாவில் தினமும் 2 டாலருக்குக் குறைவான வருமானம் கொண்டவர்கள் எண்ணிக்கை 96 கோடியாகும். அதாவது மக்கள் தொகையில் 75 சதவீதம் பேரின் வருமானம் தினமும் 2.5 டாலருக்கும் குறைவு தான்.
இது சில ஆப்பிரிக்க நாடுகளை விட மோசமான நிலையாகும். உலக வங்கியின் இந்த ஆய்வறிக்கை 2007ம் ஆண்டு வரையிலான கணக்கின் அடிப்படையிலேயே வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள், முன்னேற்றங்கள் அதில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 3 ஆண்டுகளில் அதிவேக பொருளாதார வளர்ச்சியை எட்டிப் பிடித்து இப்போது கொஞ்சம் மூச்சு வாங்கிக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
PLASE COMMEND IT.