இதில் ஒரு சிலது நம்ப முடியாதவையாகவும் இருக்கும். உங்களுக்காக தொகுத்துள்ளோம். படியுங்கள். ரசியுங்கள். சிந்தியுங்கள்
.1. தும்மலின் வேகம் ஒரு மணிநேரத்திற்கு 100 மைல்.
2. ராம்ஸெஸ் எனப்படும் எகிப்திய மன்னரின் (ஃபரோவா) சமாதியில் கிடைத்த சமையல் குறிப்பும் கோகோ கோலா தயாரிப்பும் ஒன்றாக இருக்கிறதாம்.
3. ஒரு மனிதன் இரண்டாயிரம் முறை முறைத்தான் என்றால் அவன் முகத்தில் ஒரு நிரந்தர சுருக்கம் உண்டாகிவிடுமாம். எதற்கு வம்பு எப்போதும் புன்னகைப்போம்.
4. நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்நாளில் அரை மணி நேரம் ஒரு அணுவாக வாழ்ந்துள்ளோம்-தாயின் கருவறையில்.
5. பறவைகளில் 90 விழுக்காடு ஏகபத்தினி விரதர்கள். மிருகங்களிலோ 3 விழுக்காடுதான்! மனிதன்?
6. சார்ளி சாப்ளினை ஒத்த உருவம் கொண்டவர்களை தேர்ந்தெடுக்கும் போட்டி நடத்தப்பட்டது. போட்டியின் சார்லி சாப்ளின் மூன்றாவது பரிசை வென்றார்.
7. இதயத்திற்கு இடம் கொடுக்கும் வகையில் இடது நுரையீரல் வலது நுரையீரலை விட சிறிதாக அமைக்கப்பட்டுள்ளது.
8. இறைச்சி உண்டதும் பால் குடித்தால், அதிலுள்ள கால்சியத்தை உடல் ஏற்றுக் கொள்ளாது. இரண்டு மணி நேரம் கழித்தே பால் குடிக்க வேண்டும்.
9. இசையில் சட்ஜமம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என ஏழு ஸ்வரங்கள் உள்ளன. அவற்றைதான் ச ரி க ம ப த நி என்கிறோம்.
10. மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது. இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது. மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
PLASE COMMEND IT.