புதன், 29 டிசம்பர், 2010

3 ஜி செல்போன் கோபுரங்களால் 1 கோடி பேருக்கு புற்றுநோய் ஆபத்து!


 3ஜி செல்போன் கோபுரங்களால் 1 கோடி பேருக்கு புற்றுநோய் ஆபத்து ஏற்படும்'' என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தற்போது செல்போன்களின் பயன்பாடு சர்வ சாதாரணமாகி விட்டது. அதே நேரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பயன் படத்தக்கதாக உள்ளது. செல் போன்களின் தேவை

அதிகரித்து வரும் வேளையில் அவற்றின் தொழில் நுட்பத்தின் தரம் உயர்ந்து வருகிறது. தொலைபேசி துறையில் 2ஜி (இரண்டாம் தலைமுறை) ஆக இருந்த செல்போன் தற்போது 3ஜி (மூன்றாம் தலைமுறை)க்கு வளர்ந்து விட்டது. இதையடுத்து தொழில்நுட்ப வளர்ச்சியின் தரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சக்தி வாய்ந்த செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
செல்போன் கோபுரங்கள் தற்போது நாடு முழுவதும் 4 லட்சத்து 40 ஆயிரம் செல் போன் கோபுரங்கள் உள்ளன. அவற்றில் 25 சதவீதம் செல்போன் கோபுரங்கள் மூலம் 3ஜி' தரம் வாய்ந்தவைகளாக உள்ளன.
இவை பல நகரங்களில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அவற்றில் உள்ள சிக்னல்கள் 2ஜி'ஐ விட 2 மடங்கு சக்தி வாய்ந்தவையாக இருக்கின்றன.

அவற்றில் இருந்து வெளியாகும் ஒலிக்கதிர் புற்றுநோய் மற்றும் நரம்பியல் சம்மந்தப்பட்ட நோய்களை உருவாக்க கூடியது என கருதப்படுகிறது. மூளை புற்றுநோய், தலைவலி, ஞாபகமறதி, புற்றுநோய்  கட்டி, தசை மற்றும் மூட்டு வலி, மன அழுத்தம், தூக்க மின்மை உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

_3ஜி' செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் ஒலிக்கதிர் குழந்தைகள் மற்றும் 16 வயதுக்குட்பட்டவர்களை மிகவும் அதிக அளவில் தாக்கக் கூடியது. இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 1 கோடி பேர் புற்றுநோய் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நோய்களால் பாதக்கப்படக்கூடிய அபாயம் உள்ளதாக கருதப்படுகிறது.

அவற்றின் பாதிப்பு இன்னும் 2 ஆண்டுகளில் வெளிப்படும். இந்த தகவலை மும்பையில் உள்ள ஐ.ஐ.டி. நிறுவனத்தின் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் துறை பேராசிரியர் கிரிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இவர் தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய் வறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3ஜி' செல்போன் கோபுரங்கள் அமைந்துள்ள பகுதியில் சில மீட்டர் தூரத்தில் வசிக்கும் மக்கள் இதன் விளைவை கட்டாயம் சந்தித்தே தீருவர் என்றும் அவர் கூறியுள்ளார்.


`3ஜி' செல்போன் கோபுரங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த தகவல் பெல்ஜியம், பிரான்ஸ், பின்லாந்து, ஜெர்மனி, ரஷியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அங்கு குழந்தைகள் செல்போன்களை உபயோகிப்பது குறைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

PLASE COMMEND IT.