வெள்ளி, 28 ஜனவரி, 2011

தமிழர்கள் என்ன இந்தியாவின் குடிமக்களா அல்லது சம்பாதித்து வரிப்பணம் செலுத்தும் அடிமைகளா?






இந்தியாவின் 62-ஆவது குடியரசுத் திருநாள். இன்றைக்கு சில  நாட்களுக்கு முன்புதான் இந்தியப் பெருங்கடலில் தமிழ் மீனவர் ஜெயக்குமார் இலங்கை ராணுவத்தால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.


மீனவர் வீரபாண்டியனின் குருதியால் சிவந்த கடல் நீர் நிறம் மாறுவதற்குள் இதோ மேலும் ஒரு கொலை! வீரபாண்டியன் கொலை பற்றிய செய்தியையே தமிழ்நாட்டின் முன்னணி நாளேடான தினத்தந்தி 10-ஆம் பக்கத்தில்தான் வெளியிட்டது.

ஒரு நாட்டின் குடிமக்கள் இன்னொரு நாட்டின் ராணுவத்தால் தாக்கப்படுவது என்பது எவ்வளவு பெரிய விஷயம்? ஆனால் உள்ளூர்ப் பத்திரிகையிலேயே 10-ஆம் பக்கத்தில் வெளியிடுகிற அளவுக்கு இங்கு இது ஒரு சர்வசாதாரண நிகழ்வாகி விட்டது. ஆனால் இதற்காக அந்த நாளேட்டின் மீது குறை கூற ஏதும் இல்லை. பங்குச் சந்தை நிலவரம், தங்க விலை ஏற்ற இறக்கம், வானிலை அறிக்கை போல தமிழன் மீதான தாக்குதலும் இன்று ஓர் அன்றாடச் செய்தியாக ஆகிவிட்டது!

வழக்கம் போல் இந்த முறையும் மாநில அரசும், நடுவணரசும் இதற்காகப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இழப்பீடாக ஐந்து லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்திருக்கிறது மாநில அரசு. வேண்டுமானால் உண்மைத் தமிழ் உணர்வாளர்களும், தமிழ் மீனவர்களும் ஒன்று சேர்ந்து, தங்களுக்குள் நிதி திரட்டி, இதை விட மேலும் ஐந்து லட்சம் சேர்த்துப் பத்து லட்சமாகவே தரலாம். அதை வாங்கிக் கொண்டு இறந்த மீனவர் ஜெயக்குமாரின் உயிரை மீட்டுத் தர முடியுமா என்று கூடக் கேட்கவில்லை; மாறாக இனி இப்படி ஒரு கொடுமை நடக்காது என்று உறுதி கூற முடியுமா இந்த மாநில, நடுவண் அரசுகளால்?

எத்தனை பேர் வேண்டுமானாலும் சாவுங்கள் நாங்கள் பணம் தந்து விடுகிறோம் எனச் சொல்வதா ஒரு நாட்டின் கடமை? ஒரு நாட்டின் வெகு அடிப்படையான கடமையே தன் குடிமக்களைக் காப்பாற்றுவதுதான். அதற்காகத்தான் தரைப்படை, கடற்படை, வான்படை எல்லாம். இதே இந்திய அரசுக்குத் தன் மீன்பிடித் திறனால் பல லட்சக்கணக்கான கோடிகளை அந்நியச் செலாவணியாய் ஈட்டித் தந்தவன், தந்து கொண்டிருப்பவன் தமிழ் மீனவன். இந்திய ராணுவம் வாங்குகிற ஒற்றைத் தோட்டாவிலிருந்து மாபெரும் விமானம் தாங்கிப் போர்க் கப்பல்கள் வரை அனைத்திலும் தமிழ் மீனவனுக்கும் ஆறு கோடித் தமிழர்களுக்கும் கணிசமான பங்கு உண்டு. ஆனால் இதுவரை தமிழ் மீனவனைக் காப்பாற்றுவதற்காக ஒரே ஒரு தோட்டாவையாவது இந்தியக் கடற்படை செலவிட்டது உண்டா?

இந்திய ராணுவம் பீரங்கி வாங்க, போர்க் கப்பல் வாங்க, புதிது புதிதாக அணுகுண்டு ஆராய்ச்சி செய்ய, விதம் விதமாக ஏவுகணைகள் தயாரிக்க என எல்லாவற்றுக்கும் தமிழ் மீனவன் ஈட்டித் தரும் அந்நியச் செலாவணிப் பணம் வேண்டும். ஆனால் அந்தத் தமிழ் மீனவனைக் காப்பாற்றுவதற்கு மட்டும் இந்தியக் கடற்படை ஒருமுறை கூட முன்வராது என்றால்… தமிழர்கள் என்ன இந்தியாவின் குடிமக்களா அல்லது வெறுமனே சம்பாதித்துத் தரவும் வரிப்பணம் கட்டவும் மட்டுமே கடமைப்பட்ட அடிமைகளா?

பத்து காசு சில்லறை பாக்கியைப் பேருந்து நடத்துநர் தராமல் விட்டு விட்டால் உடனே நீதிமன்றத்துக்குப் போய் வழக்குத் தொடுத்துப் பத்தாயிரம் ரூபாய் இழப்பீடு பெறுகிறோம். காலாவதியான ஒரு மிட்டாயை விற்றால் கூட அந்தக் கடைக்காரன் மீது வழக்குப் போட்டு அந்தக் கடையையே இழுத்து மூடச் செய்கிறோம். வெறும் நுகர்வோர் உரிமைகள் மறுக்கப்பட்டாலே இவ்வளவு குதிக்கும் நாம், ஒரு குடிமகனுக்கான அடிப்படை உரிமையையே மறுக்கிற இந்தப் பிரச்சினை பற்றி இதுவரை அரைக்காசுக்காவது கவலைப்பட்டிருப்போமா, சிந்தித்திருப்போமா?

அது சரி, பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மீனவர் வீரபாண்டியன் கொல்லப்பட்டார். அதற்காகப் பொங்கல் கொண்டாடாமலா இருந்துவிட்டோம்? தித்திக்கத் தித்திக்க நன்றாகத்தானே பொங்கிச் சாப்பிட்டோம்?

இதோ, குடியரசு நாளுக்கு இரண்டு நாட்கள் இருக்கும்பொழுது மறுபடியும் ஒரு மீனவர் கொலை! கலைஞர் தொலைக்காட்சியில் குடியரசு தினச் சிறப்பு நிகழ்ச்சிகளைக் கண்டு களிப்போம்! குடியரசைப் போற்றுவோம்!

வானத்தில் புதிய சூரியன் தோன்றும்: விஞ்ஞானிகளின் அதிர்ச்சித் தகவல்


தற்போதைய உலகில் விண்ணில் பல அதிசயங்கள் நிகழ்ந்து வருகின்றது. இந்நிலையில் வானில் மிகவும் சக்தி வாய்ந்த வெளிச்சம் ஒன்று ஏற்பட உள்ளது. பூமி தோன்றிய நாள் முதல் இது மாதிரியான நிகழ்வு ஏற்பட்டதில்லை.
 
இந்த வெளிச்சமானது இரவை பகல் போன்று மாற்றும். இந்த நிகழ்வானது ஒரு வாரம் முதல் 2 வாரங்கள் வரை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.அதிசக்தி வாய்ந்த விண் மீன் கூட்டமானது பூமியில் இருந்து 640 வெளிச்சம் ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இந்த விண் மீன் கூட்டங்கள் சிவப்பு நிறத்தில் ராட்சத வடிவிலானவை.
 
இவற்றின் ஆயுட்காலம் முடியும்போது அவை கூட்டம் கூட்டமாக வெடித்து சிதறும். இவ்வாறு வெடித்து சிதறும்போது வானில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் அதிசக்தி வாய்ந்த வெளிச்சம் தோன்றும். இது மற்றொரு சூரியன் புதிதாக தோன்றியதை போன்ற தோற்றத்தை உருவாக்கும். இச்சம்பவம் இந்த ஆண்டு இறுதியில் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
அப்படி இல்லாவிட்டால் அடுத்த 10 லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு தான் உண்டாகும். இந்த தகவலை ஆஸ்திரேலியாவின் தெற்கு குவின்ஸ்லாந்து பல்கலைக் கழகத்தின் இயற்பியல் துறை தலைவர் பேராசிரியர் "பிராட்கார்டர்" தெரிவித்துள்ளார்

புதன், 26 ஜனவரி, 2011

மனித ரத்தம் பயனுள்ள தகவல்கள்.........


ரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?

ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் (Anemia) ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு?
ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப்பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைக்கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் ரத்த சோகை வராது.
ரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?
ரத்த வெள்ளை அணுக்களை படை வீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.
ரத்தத்தில் உள்ள “பிளேட்லட்’ அணுக்களின் வேலை என்ன?
உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி “பிளேட்லட்’ அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி “கார்க்’ போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தம் கசிவதை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேயா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.
பிளாஸ்மா என்றால் என்ன?
ரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள் (Factors), புரதப் பொருள்கள் இருக்கும். தீக் காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.
ரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை?
ரத்த சிவப்பு அணுக்கள் (Red Blood Cells), ரத்த வெள்ளை அணுக்கள் (White Blood Cells), பிளேட்டலட்டுகள் (Platelets) என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் “பிளாஸ்மா’ என்ற பொருளும் உள்ளது.
ரத்த அழுத்தம் (Blood Pressure) என்றால் என்ன?
உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் “பம்ப்’ செய்யும்போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப் பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை.
உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா?
ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! – மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம்.
மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?
மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன?
எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.
ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?
நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் – டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.

நாம் ஒவ்வெருவரும் வாழ்வில் ஒரு முறையாவது ரத்த தானம்... செய்வோம்



June 14 உலகம் முழுவதும் ரத்த தான தினமாக உலக சுகாதார அமைப்பின் மூலம் கடைபிடிக்க படுகிறது . ரத்த பிரிவுகளான A, B,O கண்டுபிடித்த கார்ல் லண்டிச்டைனர் அவர்களின் பிறந்த நாளான அன்று ரத்த தான தினமாக கடைபிடிக்கப்படுகிறது .

ரத்த தானம் என்பது நம்மால் இன்னொருவருக்கு ரத்தம் கொடுப்பதாகும் விபத்தில் அடிபட்டவர்களுக்கும் அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கும் ரத்தம் வெளியேறும் போது அவர்கள் உயிர்வாழ ரத்தம் தேவை படும் . ரத்த தானம் செய்பவர்களை கவுரவிக்கும் விதமாக இந்த நாள் கடை பிடிக்கப்படுகிறது . நாம் ஆபத்தில் இருப்பவர்களுக்கு ரத்தம் கொடுக்கும் போது நம்மால் ஒரு உயிர் வாழ்கிறது .
பெற்றோர்கள் மத்தியில் பிள்ளைகள் ரத்தம் கொடுக்கும் போது ரத்தம் கொடுப்பவர்களின் உடல் நிலை பலவீனம் அடையும் என்ற ஒரு தவறான எண்ணங்கள் காணப்படும் . ஆனால் ஒரு மனிதனின் உடலில் ஐந்து முதல் ஆறு லிட்டர் ரத்தம் வரை காணப்படும் அதில் முன்னூறு முதல் முன்னூற்று ஐம்பத்து மில்லி லிட்டர் ரத்தம் கொடுப்பதால் உடல் நிலை பலவீனம் அடையாது . மனித உடலில் ரத்தம் சுரந்து கொண்டே இருக்கும் . ஒரு முறை ரத்தம் கொடுத்தால் அந்த ரத்த குறுகிய காலத்தில் நமது உடல் சமன் செய்து விடும் .
மருத்துவர்கள் ஆலோசனை படி ஒரு திடகாத்திரமான மனிதன் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ரத்தம் கொடுக்கலாம் . ரத்தம் கொடுக்கும் போது நம்முடைய ரத்தம் பரிசோதனை செய்யப்படும் . இப்படி பரிசோதனை செய்வதால் நமக்கு ரத்தத்தில் நோய்கள் இருந்தால் கூட கண்டு பிடித்து சரி செய்து விடலாம் . ரத்த தானம் செய்வதால் ரத்தம் கொடுத்த நமக்கு மனதளவில் ஒரு மகிழ்ச்சி ஏற்படும் . ரத்தம் பெற்று கொண்டு ஆபத்து நிலையிலிருந்து மீண்ட அவர்களின் சந்தோஷமும் நம் வாழ்க்கையில் மிக பெரிய அனுக்கிரகமாகவும் இருக்கும் .
பல தொண்டு நிறுவனங்கள் ரத்த தானம் கொடுப்பவர்களை ஊக்குவிப்பதோடு ரத்தம் தேவை படுவோருக்கும் ரத்தம் ஏற்பாடு செய்யும் மிக பெரிய மனிதாபி மான பணியை செய்கின்றன . நாம் ஒவ்வெருவரும் வாழ்வில் ஒரு முறையாவது ரத்த தானம் செய்வோம் அனைவரின் வாழ்வையும் வசந்தமாக்குவோம் . இந்த ரத்த தான தினத்தில் நாம் ரத்த தானம் செய்வதை உறுதியெடுத்து கொள்வோம் .

செயற்கை ரத்த‌ம், தோல் உருவா‌க்க முய‌ற்‌சி‌யி‌ல் விஞ்ஞானிகள்........



விப‌த்து ம‌ற்று‌ம் ப‌ல்வேறு நோ‌ய்க‌ளினா‌ல் தா‌க்க‌ப்ப‌ட்ட ம‌னிதனு‌க்கு ‌மிகவு‌ம் அவ‌சியமாகு‌ம் ம‌னித உறு‌ப்‌புகளான தோ‌ல்‌, ர‌த்த‌ம், எலு‌ம்பு ஆ‌கியவ‌ற்‌றை, உடல் பாகங்களை அமைக்க உதவும் திசுக்களை‌க் கொ‌ண்டு செயற்கையாக உருவாக்கு‌ம் முய‌ற்‌சி‌யி‌ல் இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.பெரு‌ம்பாலான ‌விப‌த்துக‌ளினாலு‌ம், ப‌ல்வேறு நோ‌ய்களாலு‌ம் ம‌னித உட‌லி‌ல் பா‌தி‌க்க‌ப்படுவது பெரு‌ம்பாலு‌ம் எலு‌ம்பு, ர‌த்த‌ம், தோ‌ல் போ‌ன்ற பகு‌திகளாக உ‌ள்ளன.
இவ‌ற்றை ச‌ரி செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல் மா‌ற்று எலு‌ம்பு, ர‌த்த‌ம், தோ‌ல் இவை‌த் தேவை‌ப்படு‌கிறது. இவ‌ற்றை தானமாக‌ப் பெ‌ற்று ச‌ரி செ‌ய்ய‌ப்ப‌ட்டாலு‌ம், இத‌ன் தேவை ‌மிக அ‌திகமாக உ‌ள்ளது. தேவையை‌ப் பூ‌ர்‌த்‌தி செ‌ய்ய வே‌ண்டுமானா‌ல், செய‌ற்கையாக உ‌‌ற்ப‌த்‌தி செ‌ய்ய வே‌ண்டியது அவ‌சியமா‌‌கிறது.எனவே இப்படி உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ரத்தம், தோல், எலும்பு ஆகியவற்றை செயற்கையாக உருவாக்குவதற்கான முயற்சியில் இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.லண்டனில் உள்ள பல்கலைக்கழக கல்லூரியில் ராபர்ட் பிரவுன் தலைமையிலான விஞ்ஞானிகள் இது தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்டு இருக்கிறார்கள். மனித உடல் எடையில் 25 சதவீதம் கல்லகன் என்ற புரதச்சத்து நிறைந்து உள்ளது. இதில் இருந்து தண்ணீரை எடுத்து அதன் மூலம் மனித உடல் திசுக்களை உற்பத்தி செய்யும் வழிமுறையை அந்த விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கிறார்கள்.இந்த திசுக்களில் ஒரு பகுதியை கொண்டு தான் தோல், எலும்பு, விழி வெண் படலம் ஆகியவை உருவாகின்றன.தோல், ரத்தம், எலும்பு விழி வெண்படலம் ஆகியவற்றை உருவாக்குவதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி அடைந்து வருகிறார்கள். இந்த பாகங்கள் இன்னும் ஒரு ஆண்டு காலத்தில் மருத்துவரீதியான பரிசோதனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.திசுக்களை தயாரிப்பதற்கான கருவி சிறிய அளவில் மேஜையில் வைத்து கொள்ளக்கூடிய அள‌விலேயே இருக்கும். இதன் மூலம் உடல் உதிரிப்பாகங்களை சில நிமிடங்களில் தயாரிக்க முடியும். இந்த உற்பத்தியில் கேம்பிரிட்ஜ்ஜில் உள்ள ஆட்டோமேஷன் பார்ட்னர்ஷிப் என்ற நிறுவனம் ஈடுபட்டு உள்ளது.

தேனீர் பழக்கம் இருதயத்துக்கு பலம் ....................


பால் விடாமலோ குறைவாக பால் விட்டோ டீ குடிப்பதில் கூடுதல் நன்மை இருக்கலாம் என்று தெரிகிறது


அடிக்கடி டீ காஃபி குடிப்பவர்களுக்கு இருதய நோய்கள் வருவதற்கான ஆபத்து குறைகிறது என்று குறிப்புணர்த்தும் புதிய அறிவியல் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
கிட்டத்தட்ட நாற்பதாயிரம் பேரை பதிமூன்று ஆண்டுகளாக கண்காணித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக நெதர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்கன் ஹார்ட் அஸ்ஸொஸியேஷன் என்ற அமைப்பின் சஞ்சிகையில் இந்த ஆய்வு வெளியாகியுள்ளது.
டீ குடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுடன் ஒப்பிடுகையில் ஒரு நாளில் ஆறு தடவை டீ அருந்துபவர்களுக்கு இருதயக் கோளாறுகள் வருவதற்கான ஆபத்து மூன்றில் ஒரு பங்கு குறைவு என்று இந்த ஆராய்ச்சி கூறுகிறது.
காஃபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் நன்மை ஓரளவுக்கு இருக்கிறது. ஆனால் டீ குடிப்பவர்களுக்கு கிடைக்கும் அளவுக்கு நன்மை காஃபியில் இல்லை.
ஒரு நாளில் இரண்டு முதல் நான்கு கோப்பைகள் டீ அருந்துபவர்களுக்கு அதனை விட குறைவாக டீ அருந்துபவர்களைக் காட்டிலும் இருதய நோய் வருவதற்கான ஆபத்து இருபது சதவீதம் குறைவாக உள்ளது என்றும் இந்த ஆராய்ச்சி கூறுகிறது.
ஆனால் குடிக்கும் டீயின் அளவை அதிகரித்துக்கொண்டே போனால், ஆபத்தின் அளவு மென்மேலும் குறைகிறது என்றில்லை. ஒரு கட்டத்தில் இந்தப் பலன் நின்று போய்விடுகிறது.
நெதர்லாந்தில் மக்கள் டீ குடிக்கும்போது அதில் சில துளிகள்தான் பால் விடுவார்கள், ஆனால் இந்தியர்கள் இலங்கையர்கள் எல்லாம் மொத்தமாக பாலிலோ அல்லது தண்ணீருக்கு சமமான பாலிலோ டீ அருந்துபவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. அந்த அளவுக்கு பால் விட்டு டீ குடிக்கும்போது இப்படியான மருத்துவ பலன் கிடைக்குமா என்பது தெரியவில்லை.
டீயில் இருக்கும் ப்லவனாய்ட்ஸ் என்ற வஸ்துதான் இருதயக் கோளாறு ஏற்படுவதிலிருந்து பாதுகாப்பு தருகிறது என்று சொல்லப்படுகிறது.
டீயில் பால் சேர்க்கும்போது பலன் கிடைக்காமல் போய்விடுகிறதா என்பதை இனிமேல்தான் ஆராய்ச்சிகள் உறுதிசெய்ய வேண்டும்.... 

திங்கள், 24 ஜனவரி, 2011

பத்துக்கு ஒரு பூஜ்யம் . மகாயுகத்திற்கு எத்தனை பூஜ்யம் ?

1 = ஒன்று ONDRU - one
10 = பத்து PATTU - ten
100 = நூறு NOORU - hundred
1000 = ஆயிரம் AAYIRAM - thousand
10000 = பத்தாயிரம் PATTAYIRAM - ten thousand
100000 = நூறாயிரம் NOORAYIRAM - hundred thousand
1000000 = பத்து நூறாயிரம் PATTU NOORAYIRAM - one million
10000000 = கோடி KODI - ten million
100000000 = அற்புதம் ARPUTHAM - hundred million
1000000000 = நிகற்புதம் NIGARPUTAM - one billion
10000000000 = கும்பம் KUMBAM - ten billion
100000000000 = கணம் KANAM - hundred billion
1000000000000 = கற்பம் KARPAM -one trillion
10000000000000 = நிகற்பம் NIKARPAM - ten trillion
100000000000000 = பதுமம் PATHUMAM - hundred trillion
1000000000000000 = சங்கம் SANGGAM - one zillion
10000000000000000 = வெள்ளம் VELLAM - ten zillion
100000000000000000 = அந்நியம் ANNIYAM - hundred zillion
100000000000000000000 = ARTTAM - வேறு மொழியில்? 
1000000000000000000000 = PARARTTAM - வேறு மொழியில்?10000000000000000000000 = பூரியம் POORIYAM - வேறு மொழியில்?100000000000000000000000 = முக்கோடி MUKKODI - வேறு மொழியில்?
1000000000000000000000000 = மகாயுகம் MAHAYUGAM - வேறு மொழியில்?

மாறுவேட போட்டி .....

2003 ஆம் வருடம்   
vajpayee karunanidhi
----------------------------------------------------------------------------
2007 ஆம்  வருடம் 



----------------------------------------------------------------------------------------------------------------------------------


























வேதங்கள் 4...............

ரிக்வேதம்
     
    இந்து சமயத்தின் அடிப்படையாகக் கொள்ளப்படும் நான்கு வேதங்களுள் ஒன்று. இந்நான்கு வேதங்களில் மிகப் பழமையானதும் இதுவே. சமஸ்கிருத மொழியில் அமைந்த சுலோகங்களின் தொகுப்பான இது, எந்தவொரு இந்தோ ஐரோப்பிய மொழியிலும் எழுதப்பட்டு இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய நூலாகவும் திகழ்கிறது. இது ஆக்கப்பட்ட காலம் சரியாக நிறுவப்பட முடியாவிட்டாலும், பொதுவாக கி.மு 1500 க்கும், கி.மு 1200 க்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.இருக்கு வேதம், வேதகால சமஸ்கிருதத்தில் ஆக்கப்பட்ட 1,017 சுலோகங்களால் ஆனது. இச் சுலோகங்களுப் பல வேள்விக் கிரியைகளில் பயன்படுத்துவதற்காக உருவானவை. இவ்வேதம் பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் அடங்கியுள்ள பெரும்பான்மையான சுலோகங்கள் கடவுள்களைப் போற்றும் நோக்கிலே அமைந்தவை. சில வரலாற்றுக் குறிப்புகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன. முக்கியமாக ஆரியர்களுக்கும், அவர்களது எதிரிகளான தாசர் எனபடும் இனத்தாருக்கும் இடையிலான போர்கள் பற்றிய குறிப்புக்கள் குறிப்பிடத்தக்கவை. இவ்வேதத்தில் முதன்மையாகக் குறிப்பிடப்படும் கடவுள்கள், தீக்கடவுளான அக்கினி, தேவர்கள் தலைவனும், வீரனுமான இந்திரன், சோமன் என்போராவர். இவர்களைவிட மித்திரன், வருணன், உஷாக்கள், அஸ்வின்கள் என்போரும், சவிதர், விஷ்ணு, உருத்திரன், பூஷண், பிருஹஸ்பதி, பிரமனஸ்பதி, தியாயுஸ் பிதா, பிரிதிவி, சூரியன், வாயு, பர்ஜான்யன், வசுக்கள், மாருத்கள், ஆதித்தர்கள், விஸ்வதேவர்கள் போன்ற கடவுளர்களும், இந்நூலில் போற்றப்படுகிறார்கள்.இவ்வேதத்தில் காணப்படும் கடவுள்களின் பெயர்கள் சில, வேறு இந்தோ-ஆரிய மக்களினங்கள் மத்தியிலும் புழக்கத்தில் இருந்து வந்திருப்பதைக் காணலாம். கிரேக்கர்களின் ஸேயுஸ் (Zeus), லத்தீன் மொழியிலுள்ள ஜுபிட்டார் (Jupiter) (தேயுஸ் பேட்டர் (deus-pater)என்னும் சொல்லிலிருந்து பெறப்பட்டத) என்பவை இருக்கு வேதக் கடவுள் பெயரான தியாயுஸ் பிதா என்பதுடன் பொருந்தி வருவதைக் காணலாம்.

யசுர் வேதம்



    இந்துக்களினால் புனிதமாகக் கருதப்படும் நான்கு வேதங்களுள் ஒன்று. இவ்வேதம், பொது வழிபாடு, கிரியைகள், வேள்விகள் என்பவை பற்றியும் அவற்றை நிகழ்த்தும் முறைகள் பற்றியும் எடுத்துக் கூறுகின்றது. இது கி.மு 1500 க்கும், 500 க்கும் இடையில் எழுத்து வடிவில் உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. யசுர் வேதம் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை சுக்கில யசுர்வேதம், கிருஷ்ண யசுர்வேதம் எனப்படுகின்றன. இரண்டு பகுதிகளுமே கிரியைகளுக்கு வேண்டிய சுலோகங்களைத் தம்முள் கொண்டுள்ளன. கிருஷ்ண யசுர்வேதம், மேலதிகமாக உரைநடை விளக்கங்களையும், விரிவான அறிவுறுத்தல்களையும் தன்னுள் அடக்கியுள்ளது.
கிருஷ்ண யசுர்வேதம் கிருஷ்ண யசுர்வேதத்துக்கு நான்கு உட்பிரிவுகள் (சாகைகள்) உள்ளன. அவை: தைத்திரீய சம்ஹிதைமைத்திராயனீ சம்ஹிதைசரக-கதா சம்ஹிதைகபிஸ்தல-கதா சம்ஹிதைஎன்பனவாகும். இவற்றுள் பிரபலமானது தைத்திரீய சம்ஹிதை ஆகும். இது ஏழு காண்டங்களாகப் (பிரிவுகள்) பிரிக்கப்பட்டுள்ளது. மேற்படி உட்பிரிவுகள் ஒவ்வொன்றும், அவற்றுடன் இணைந்த ஒரு பிராமணத்தையும் (வேதவிளக்கம்) கொண்டுள்ளன. சில உட்பிரிவுகள், அவற்றுடன் இணைந்த சிரௌதசூத்திரங்கள், கிருஹ்யசூத்திரங்கள், ஆரண்யகங்கள், உபநிடதங்கள், பிரதிசாக்கியங்கள் என அழைக்கப்படும் துணை நூல்களையும் கொண்டு விளங்குகின்றன.
சுக்கில யசுர்வேதம் சுக்கில யசுர்வேதம் முனிவர் ஸ்ரீ யோகீசுவர யாக்கியவல்கியரால் தோற்றுவிக்கப்பட்டது எனவும் இதை யாக்கியவல்கியர் சூரிய பகவானிடமிருந்து, அவர் சுற்றி வரும் வேகத்திலேயே சென்று நேரடியாகப் பெற்றார் எனவும் கூறப்படுகிறது. சுக்கில யசுர்வேதம் பதினைந்து சாகைகள் (உட்பிரிவு) கொண்டது எனவும் தற்போது இரண்டு உட்பிரிவுகள் மட்டுமே உள்ளன எனவும் நம்பப்படுகிறது. அவை: வஜசனேயி மாத்தியந்தினியம்வஜசனேயி கான்வம்என்பனவாகும். முன்னையது வட இந்தியாவிலும் குசராத்திலும் நாசிக்குக்கு வடக்கேயுள்ள மகாராட்டிரத்திலும் பிரபலமானது. பின்பற்றும் மக்கள்தொகையின் அடிப்படையில், இந்தியாவில் மிகப்பெரிய வேத மரபுகளுள் ஒன்றாகும். கான்வ சாகை (கான்வ உட்பிரிவு)நாசிக்குக்கு தெற்கேயுள்ள மகாராட்டிரம், ஒரிசா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ,கேரளா ஆகிய மாநிலங்களில் பின்பற்றப்படுகின்றது. ஜகத்குரு என அழைக்கப்படும் ஆதி சங்கரர் கான்வ சாகையைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகின்றது. தமிழ்நாட்டிலுள்ள இந்தியாவின் மிகப்பெரிய இந்துக்கோயிலான ஸ்ரீரங்கம், ரங்கநாதசுவாமி கோயில் கிரியைகளும் இம்மரபின்படியே நடைபெறுவதாகக் கூறப்படுகின்றது. மிகவும் சிறப்புப் பெற்ற உபநிடதங்களான ஈசாவாஸ்யம், பிருஹதாரணியம் ஆகியவை சுக்கில யசுர்வேதத்துக்கு உரியவை. பிருஹதாரணியமே எல்லா உபநிடதங்களிலும் பெரியது என்பதுடன் மிகவும் செம்மையானதும் அதுவே என்று கூறப்படுகின்றது.
பிராமணம்மாத்தியந்தினியம், கான்வம் இரண்டு உட்பிரிவுகளிலுமே சதபத பிராமணம் என்ற வேத யாகத்தொகுப்பு உள்ளது.

சாம வேதம் 



           கிரியைகளுக்கான மந்திரங்கள். சாம வேதம் என்பது இந்துசமயத்தின் அடிப்படையாகக் கருதப்படுகின்ற நான்கு வேதங்களில், பொது வழக்கில் மூன்றாவதாகக் குறிப்பிடப்படும் வேதமாகும். ஆனால், புனிதத் தன்மையில் ரிக் வேதத்துக்கு அடுத்ததாக இது இரண்டாவது நிலையில் இருப்பதாகக் கருதப்படுகின்றது. அளவில் இது ரிக்வேதத்தில் ஏறக்குறைய பாதியளவு இருக்கும்.

அதர்வண வேதம்



    இது பிரம்மவேதம் எனப்படும். இது 731 பாடல்களைக் கொண்டு 20 பகுதிகளாக உள்ளது. இது உச்சாடனம் மாந்த்ரீகம் போன்றவற்றால் தீயசக்திகளையும் எதிரிகளையும் வென்று உலகத்தில் வெற்றி பெறும் வழிகளைக் கூறுவது எனலாம்.சில்ப வேதம் அதர்வண வேதத்தின் உபவேதமாகும் . இது கட்டடக் கலையை விவரிக்கின்றது.
அதர்வண வேதத்தில் பில்லி சூன்யங்கள்(black magic) முதலியன பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.

ஐ. ஏ. எஸ். தேர்வு . !!


2002 ஐ. ஏ. எஸ் . தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று . ' நீங்கள் கலெக்டர் ஆகிவிட்டீர்கள் . ஒரு படத்தைச் சுவரில் மாட்ட வேண்டும் . ஆனால் , சுவரில் பூசப்பட்டு இருக்கும் சிமென்டோ ஆணி அடிக்க முடியாதது . நீங்கள் என்ன செய்வீர்கள் ?'
கேள்விக்கான பதில் ....' ஸ்டிக்கர் மூலம் ஒட்டலாம் ; அந்த இடத்தில் மட்டும் சுவரைப் பெயர்த்து எடுத்து மரத்தால் ஆன சட்டத்தைப் பொருத்தலாம் ' என்றெல்லாம் பதிலுக்குச் சுவரில் முட்டிக்கொண்டீர்களா ?


 அப்படியெல்லாம் யோசித்தால் நீங்கள் எப்படி ஐ. ஏ. எஸ். ஆக முடியும் ? 


 நீங்கள் கலெக்டர் . 


சுவரில் படம் மாட்டுவது உங்கள் வேலை இல்லை . அலுவலக உதவியாளரிடம் அந்த வேலையை ஒப்படைத்து விடுங்கள் . தனக்கான தகுதி என்னவென்று தெரியாமல் இருப்பதுதான் நம்முடைய பல தோல்விகளுக்குக் காரணம் .

இருகை எழுத்தாளர் !!


பொதுவாக எழுதுவது என்பது ஒரு கலைதான். நாம் அனைவரும் மிகவும் விரும்பி செய்யும் செயல்களில் ஒன்று அதிலும் பலருக்கு இடது கைகளால் எழுதுவது என்பது மிகவும் விருப்பமான செயல் என்று சொல்லலாம் .
ப்படி நம் ஒவ்வொருவருக்கும் எழுதுவதில் பல வேறுபாடுகள் இருக்கின்றன . நம்மில் சிலர் இடது கை கொண்டு எழுதுவோம் ,பலர் வலது கொண்டு எழுதுவோம் .இதில் இன்னும் சிலர் இரண்டு கைகள் கொண்டும் எழுதுவார்கள். ஆனால் இரண்டு கைகளினாலும் எழுதுவது என்பது எளிதில் இயலாத ஒன்று. 
ம் நண்பர்களே இந்த இயலாத ஒன்றை மிகவும் சிறப்பாக செய்து அனைவரையும் ஒரு காலத்தில் வியக்க செய்த நாம் அனைவரும் அறிந்த ஒருவர் இருந்திருக்கிறார். யார் அந்த அவர் என்ற கேள்வி உங்களின் அனைவருக்கும் மனதிலும் எழும்பி இருக்கும் . சொல்கிறேன் .அவர்தான் மகாத்மா காந்தி ஆம் இவர் இரண்டு கைகளால் எழுதும் திறமை உள்ளவராம் . இதில் என்ன வியப்பு என்றால் நம்மில் பலரும் இரண்டு கைகளால் எழுதுவது உண்டு ஆனால் அதிகமாக போனால் நமது பெயர் அல்லது சில வரிகள்தான் எழுதுவோம் ஆனால் இவர் ஒரே நேரத்தில் தொடங்கி அறுபது பக்கம் கொண்ட ஒரு மிகப்பெரியக் கட்டுரையை ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் எழுதும் அளவிற்கு திறமை கொண்டிருந்தாராம் . அவர் எழுதியக் கட்டுரையை சரி பார்த்த பலர் எந்த மாற்றமும் இன்றி ஒரே கை கொண்டு எழுதிய கட்டுரைபோல் இரண்டும் இருப்பதுக் கண்டு வியந்து போனார்களாம் .

தில் இன்னும் சிறப்பு என்னவென்றால் அவர் இந்த திறமையை அங்கிலம் எழுதுவதில் காட்டவில்லையாம் . தமிழில் எழுதிதான் அனைவரையும் வியக்க வைத்தாராம் . இவருக்கு எப்படி தமிழ் தெரியும் என்று சந்தேகமும் பலருக்கு ஏற்ப்படலாம் சொல்கிறேன் இவர் முழுமையாக தமிழை தில்லையாடி கன்னியப்பச் செட்டியார் என்பவரிடம் கற்று இருக்கிறார் .

டிஸ்கி : ஒரு காலத்தில் இப்படியும் தலைவர்கள் எந்த துண்டுதலும் இன்றி விரும்பிப் படிக்கும் மொழியாக நம் தமிழ் இருந்திருக்கிறது . ஆனால் இன்றோ தமிழை வளர்ப்போம் என்று செம்மொழி மாநாடு அமைத்து தமிழின் பெருமைகளை ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டு இருகிறார்கள் இன்றைய தலைவர்கள் .

தினமணி நாளிதழில் -வெளியாகியுள்ளது நன்றி தினமணி

ஆறறிவா இல்லை ஐந்தறிவா !!..................


உலகத்தில் எந்த உயிரினம் தங்களின் குழந்தைகளை மிகவும் அக்கறையுடன் கவனித்துக் கொள்கிறது என்று ஒரு ஆய்வு நடத்தி இருக்கிறார்களாம் .அந்த ஆய்வின் முடிவில் உலகத்திலையே மனிதனைவிட விலங்குகள்தான் தங்களின் குழந்தைகளை அதிக அக்கறையுடன் கவனித்துக்கொள்வதாக அந்த அறிக்கையின் முடிவு தெரிவித்து இருக்கிறது . அதேபோல் உலகத்தில் தங்களின் குழந்தைகளை மிகவும் மோசமான முறையில் கவனித்துக் கொள்வதில் மனிதர்கள்தான் முதல் இடத்தில் இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவித்து இருக்கிறதாம் .

துமட்டும் இல்லை விலங்குகள் தங்கள் வாழ் நாட்களில் ஒருமுறை கூட தங்களின் குழந்தைகளை துன்புறுத்துவது இல்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறதாம்  சில தினங்களுக்கு முன்பு எனக்கு ஒரு மடலில் சில புகைப்படங்கள் வந்தது . 

அதைப் பார்த்த பொழுதுதான் புரிந்துகொண்டேன் .ஆறறிவு கொண்ட மனிதர்களின் பகுத்தறிவுக்கும் , ஐந்தே அறிவு கொண்ட விலங்குகளின் பகுத்தறிவின்மைகும் உள்ள வேறுபாடு என்னவென்று .அதை உங்களுடனும் பகிர்ந்துகொள்ளத்தான் இந்தப் பதிவு .கீழ் இருக்கும் புகைப்படங்களைப் பாருங்கள் உங்களுக்கு தெளிவாக புரிந்துவிடும் .இதைப் பற்றிய உங்களின் கருத்துகளையும் பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் .


 SCROLL UNTIL LAST!!
Who is the better mother?








And our final contestant is ????
                                                      .
.
.
.
 .
.
.

.
.

.

.

.

.

.

.



டிஸ்கி :  மிருகங்கள் மனிதனை மனிதனாகத்தான் பார்கின்றன . ஆனால் மனிதன் மனிதனயே மிருகமாகத்தான் பார்கிறான் . இதுதான் மனிதன் பெற்ற பகுத்தறிவின் தனி சிறப்போ !!!