புதன், 5 ஜனவரி, 2011

பிரமிப்பூட்டும் உலகின் மிகப்பெரும் குகை


பல காலங்களாக வியட்நாமை மனம் கொள்ளை கொள்ளும் வனப்புடன் கூடிய குகைகளின் நாடாகத்தான் புவியியல் ஆய்வாளர்கள் அறிந்து வைத்துள்ளார்கள். அவற்றில் பல குகைகளுக்குள் மனிதன் இதுவரை உள் சென்றதே இல்லை. தற்போது அங்கே உலகின் மிகப்பெரும் குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. ஹேங் சன் தூங் எனப்படும் அக்குகை, ஒப்பீட்டளவில் மொத்த நியூயார்க் நகர மக்கள் தொகையினையும் கொள்ளளவாக கொள்ளகூடியது ஆகும்.

அன்னாமைட் மலைகளில் உள்ள அந்த பிரம்மாண்ட குகையினுள் பெரிய காடும் அதனூடே ஒரு ஆறும் ஓடுகிறது. இதற்கென அங்கேயே சுற்றி சுழலும் சிறு மேகக்கூட்டங்களும் உள்ளன. இந்தக் குகையின் முடிவு இன்னும் அறியப்படவில்லை. இதற்கு மலைநதி குகை என்று தற்போது பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பிரம்மாண்ட குகை வியட்நாமின் மத்தியில் லாவோஸ் எல்லையினையும் சேர்ந்த நில அமைப்பில் உள்ள சுமார் 150 குகைகளின் பெரும் தொடரின் ஒரு அங்கம் என்று கருதப்படுகிறது.
கடந்த 2009 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ஹோவர்ட் மற்றும் லிம்பர்ட் ஆகியோர் இந்த ஹேங் சன் தூங் குகைக்கு வந்த போது அதனுடைய மிகப்பெரும் பக்கசுவர் அவர்களால் தாண்ட இயலாததாக இருக்கவே, மீண்டும் இந்தக் குகையின் எல்லைகளை அளந்து கண்டுபிடிக்க தற்போது இதற்கு திரும்பி வந்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

PLASE COMMEND IT.