வெள்ளி, 7 ஜனவரி, 2011

வானியல் அபூர்வத்தைக் கண்டுபிடித்து 10 வயது சிறுமி சாதனை..

கனடாவைச் சேர்ந்த 10 வயது சிறுமியொருவர் வெடித்துச் சிதறும் நட்சத்திரம் (Super Nova) ஒன்றை கண்டறிந்ததன் மூலம் குறைந்த வயதில் இத்தகைய கண்டுபிடிப்பை மேற்கொண்ட வானியலாளர் என்ற பெருமையினை பெற்றுள்ளார். 

கத்ரின் அவுரோரா கிரே என்ற அச்சிறுமி கடந்த 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையே இதனைக் கண்டறிந்துள்ளார். 

தற்போது 5 ஆம் வகுப்பில் பயின்றுவரும் அவர் தனது எதிர்கால இலட்சியம் வானியலாளர் ஆவதே எனத் தெரிவிக்கின்றார். 

இந்த வெடித்துச் சிதறும் நட்சத்திரமானது சுமார் 24 மில்லியன் ஒளி வருட தூரத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இவரது கண்டுபிடிப்பானது ரோயல் கனேடிய வானியல் சமூகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

வெடித்துச்சிதறும் நட்சத்திரம் (Super Nova ) எனப்படுவது பிரமாண்டமான நட்சத்திரங்கள் தமது எரிபொருட்கள் நிறைவடைந்ததன் பின்னர் மாபெரும் ஒளியாற்றலை வீசிக்கொண்டும் பாரிய சத்தத்துடனும் வெடித்துச்சிதறுதலாகும். 

இதன்போது வெளியிடப்படும் ஓளிர்வானது, சூரியன் தன் வாழ்நாள் முழுவதும் வெளியிடக்கூடிய ஆற்றலை விட அதிகமானதாகும்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

PLASE COMMEND IT.