வெள்ளி, 7 ஜனவரி, 2011

உலகிலேயே மிகவும் காரமான மிளகாய்!

இங்கிலாந்தின் வடமேற்கு மாநிலமான கம்ப்ரியாவில் உலகிலேயே மிகவும் காரமான மிளகாய் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாண்டுகளாக முழுநேர மிளகாய்ச் செய்கையாளராகப் பணியாற்றும் ஜெரால்ட் போளர் என்ற விவசாயி இந்த மிளகாய் வகையை உருவாக்கியுள்ளார்.

உலகிலேயே இதுவரை மிகவும் காரமான மிளகாய் என்ற பெயர் மெக்ஸிகோவின் ஜலபேனோ வகைக்கும், இந்தியாவின் புட்ஜொலோகியா வகைக்கும் உரியதாகவே இருந்தது. ஜெரால்ட் போளர் தனது புதிய வகை மிளகாய்க்கு நாகாவைபர் என்று பெயரிட்டுள்ளார்.

உலகில் மிகவும் காரமான மிளகாய் என்று இது கின்னஸ் புத்தகத்திலும் பதியப்படவுள்ளது. காரத்தை அல்லது உறைப்பை அளவிடுவதற்கான சர்வதேச அளவீட்டைப் பயன்படுத்தி நாகாவைபர் தான் உலகின் மிகவும் காரமான மிளகாய் என்பது வோர்விக் பல்கலைக்கழகத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
 52 வயதான போளர் இப்போது சொந்தமாக மிளகாய்க் கம்பனியொன்றையும் தொடங்கியுள்ளார். இந்த மிளகாயை உண்பது மிகவும் வேதனையானது, உங்கள் நாக்கில் பட்டதும் நாக்கு எரிய ஆரம்பித்து அந்த எரிச்சல் உடல் எங்கும் பரவ ஆரம்பிக்கும்.


சுமார் ஒருமணி  நேரத்துக்கு இது நீடிக்கும், அந்த நேரத்தில் யாருடனும் பேசவோ அல்லது வேறு எதுவுமே செய்யமுடியாது. இருந்தாலும் இது ஒரு வினோதமான அனுபவம் என்று தனது உற்பத்திபற்றி வித்தியாசமான அறிமுகத்தை போளர் வழங்கியுள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

PLASE COMMEND IT.