வியாழன், 20 ஜனவரி, 2011

ஒரே DVD ல் 2000 திரைப்படங்கள்


 
ஒரே DVD ல் 2 அல்லது 3 திரைப்படங்களை பதிந்து விற்பனைக்கு வருவதை நாம் அறிவோம். DIVX fomrat ஆக இருந்தால் அதிகபட்சமாக 6 திரைப்படங்களை கூட பதிக்கலாம் என்பது எல்லோரும் அறிந்ததே.  ஒரே DVD ல் 2000 படங்களை அல்லது 2 லட்சம் பாடல்களை  பதிக்க கூடிய ஒரு தொழில்நுட்பம் தயாராகி கொண்டிருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இது இப்போதிருக்கும் DVD யை போன்று 10,000  மடங்கு திறன் கொண்டது. ஆஸ்திரேலியாவில் உள்ள SWIRNBURNE என்ற தொழில்நுட்ப பல்கலை கழகத்தில் இதற்கான ஆராய்ச்சிகள் வெகு ஜரூராய் நடந்து கொண்டிருகின்றன.  குறுந்தகட்டின் அளவை அதிகரிக்காமலும் கோப்புகளின் bytes அளவை குறைக்காமலும் இந்த தொழில் நுட்பம் மூலம் பதிவு செய்ய முடியும்.  இது நானோ ஸ்ட்ரக்சர்ட் பொலரைசேஷன்(Nano Structured Polarisation) தொழில்நுட்பத்தில்   5 பரிமாணத்தில்  தயாராகிறது. இந்த ஆராய்ச்சி இன்னும் முடியவில்லை இது வியாபாரத்திற்கு வர 5 வருடம் ஆகும்,  இந்த ஆராய்ச்சியாளர்கள் சாம்சங் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளதாக  தகவல்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

PLASE COMMEND IT.