வியாழன், 20 ஜனவரி, 2011

இந்தியாவின் நிலை என்ன தெரியுமா?


 
உலகின் முதல் தர  ஜனநாயக நாடு  டென்மார்க், சமிபத்தில் நான் கேள்விப்பட்ட ஒரு துணுக்கு செய்தி இது. இது உண்மையா? பொய்யா? உலகின் மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தரம் என்ன? இப்படி கேள்வி மேல் கேள்வி எழவே வலைத்தளத்தில் தேடி WORLDAUDIT.ORG என்ற வலைதளத்தின் இந்த புள்ளிவிவரங்களை கண்டறிந்தேன். உண்மையில் வியப்பாக தான் இருந்தது.
 
ஜனநாயக தரத்தில் டென்மார்க் முதலிடத்தில் இருந்தது
 
பத்திரிகை சுதந்தரத்தில் பின்லாந்த் முதலிடம்.
 
லஞ்சமில்லா நாடுகளில் நியூஷிலாந்து முதலிடம்.
 
ஜனநாயக தரவரிசையில் முதல் 20 இடங்களில் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளே இருந்தன. ஆசியாவில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் நிலை என்ன தெரியுமா?
ஜனநாயக தரவரிசையில் 47 வது இடத்திலும்,
 பத்திரிகை சுதந்தரத்தில் 45 வது இடத்திலும் ,
லஞ்ச லாவண்யங்களை கட்டுபடுத்துவதில் 64 வது இடத்திலும் இருக்கிறது.
கொஞ்ச நேரத்திற்கு பின் தான் உறைத்தது, கைபுண்ணுக்கு ஏன் கண்ணாடி.  இங்கே கேள்வி கேட்டாலே தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் போது இவர்களின் ஜனநாயக லட்சணத்தை ஒரு வலைதளத்தை போய் பார்த்து தான் தெரிந்து கொள்ளணுமா என்ன? மேற்படி இது நவம்பர் 2009 இல் வெளியிடப்பட்ட தரப்பட்டியல்.

 இப்போது இன்னும் தரங்கெட்டு போய் இருக்கும் இந்தியா…
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

PLASE COMMEND IT.