வெள்ளி, 7 ஜனவரி, 2011

முற்றிலும் மாறுபட்ட மனித இனம் : பெரு நாட்டில் கண்டுபிடிப்பு..

மனித இனமானது சுமார் 200,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியாதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.

ஆரம்பத்தில் தனித்து வாழத்தொடங்கிய மனித இனம் பின்னர் சமூக குழுக்களானது. இதனைத்தொடர்ந்து வெளியுலக தொடர்புகள் மூலம் தன்னை மேம்பட்ட , வளர்ச்சியடைந்த இனமாக மாற்றிக்கொண்டது.

மனித சமூகமொன்றின் வளர்ச்சிக்குக் காரணம் அதன் வெளியுலகத்தொடர்புகள் மற்றும் உறவுகள் என்றால் அது மிகையாகாது.

எனினும் அவ்வகையான வெளித்தொடர்புகள் அற்ற, முற்றிலும் வேறுபட்ட , நாகரீக வளர்ச்சியடையாத மனித இனக்குழுக்களும் இருக்கவே செய்கின்றன.

அவ்வகையான இனக்குழுவொன்று அண்மையில் பெரு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெசானிய பழங்குடிகள் என இவ்வினம் இனங்காணப்பட்டுள்ளது.

இப்பழங்குடியினமானது இதுவரை நாகரிக வளர்ச்சி என்பதை அறியவில்லையென அவர்களைக் கண்டறிந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பெரு நாட்டின் தென்கிழக்கில் அமைந்துள்ள ' குகாபாகொரி நாவுஹா நான்டி என்ற இடத்தில் நிறுவப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கெமராக்களில் மேற்படி இனத்தின் நடமாட்டங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடந்தே அதிகாரிகள் இவர்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

இவர்கள் பனை ஓலை முதலான இலைவகைகளைக்கொண்டு தங்களது குடிசைகளை அமைத்துள்ளனர்.

அதிகாரிகளுக்கு இவர்கள் பேசும் மொழி புரியவில்லை. இவர்கள் இடுப்பைச்சுற்றி ஆடையையும் அணிந்துள்ளனர்.

தற்போது பெரு நாட்டின் அரசு அவ்வினம் தொடர்பான காணொளிக்காட்சிகள் மற்றும் புகைப்படங்களை வெளியிட அனுமதித்துள்ளது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

PLASE COMMEND IT.