புதன், 5 ஜனவரி, 2011

ஒரு பெரும் பொருளாதார விடுதலைக்கான போராட்டம்............

சுவிஸ் வங்கி… 90 இலட்சம் கோடி… மலைக்க வைக்கும் கள்ளப் பணம்!



உலகின் கள்ளப் பணத்தைப் பதுக்கி வைக்கும் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் மட்டுமே ரூ 70 லட்சம் கோடி, அதாவது 1.40 ட்ரில்லியன் டாலர் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது நினைவிருக்கலாம். இதுகுறித்து டிஎன்ஏ நாளிதழ் ஒரு கட்டுரையைக் கூட வெளியிட்டிருந்தது. அது வெளியாகி சில மாதங்கள் உருண்டோடிவிட்டன. இன்றைக்கு அந்தப் பணத்தின் அளவு ரூ 90 லட்சம் கோடிக்கு மேல் என்கிறார்கள். விரைவில் செஞ்சுரி அடித்துவிடும்!
இந்தப் பணத்தைத்தான் இந்தியாவுக்குக் கொண்டு வருவோம் என்று முன்பு பிஜேபிக்காரர்களும், காங்கிரஸாரும் முழங்கினார்கள். கட்டாயம் கொண்டு வர முடியாது என்று ஒருவரையொருவர் பலமாக நம்பியதாலேயே இந்த முழக்கம்!

இவ்வளவு பணத்தை சும்மா வைத்துக் கொண்டு, மாதச் சம்பளக்காரர்களையும் நடுத்தர வருமானம் கொண்டவர்களுக்கும் வரிமான வரி வரம்பை ரூ 2 லட்சம் வரை ஏற்றுவதற்கே வருடக்கணக்கில் யோசித்துக் கொண்டிருக்கிறது இந்திய அரசு… என்ன தேசமோ!

இருக்கட்டும்…

70 லட்சம் கோடின்னா… எவ்வளவு? அதை வைத்து என்னென்ன செய்ய முடியும் என்றெல்லாம் ஜஸ்ட் ஒரு கணக்குப் போட்டுப்பார்த்தால்… பிரமிப்பில் தலை கிர்ரடித்துவிடும்.

இதோ… அந்த விவரமும்…

1. உலகில் உள்ள 180 நாடுகளில் நமது நாட்டினரின் பணம்தான் சுவிஸ் வங்கியில் உள்ள மிக உச்ச அளவு தொகையாகும். கருப்புப் பணத்தின் பிறப்பிடமாக இந்தியா உள்ளது. சற்றே எண்ணிப் பாருங்கள்… சுவிஸ் வங்கியில் உள்ள 70 லட்சம் கோடி ரூபாய் இந்தியர்களுக்கு சொந்தமானது என்றால் நமது இந்திய நாடு எவ்வளவு பெரிய பணக்கார நாடாகும்.

2. தங்கள் வங்கிகளில் உள்ள 70 லட்சம் கோடி ரூபாய்க்கு சொந்தமானவர்களின் பெயர்களை வெளியிடக் கோரி இந்திய அரசாங்கம் கேட்டால் அப் பெயர்களை வெளியிட சித்தமாக இருப்பதாக சுவிஸ் அரசாங்கம் இந்திய அரசாங்கத்திற்கு அதிகாரபூர்வ கடிதம் எழுதியுள்ளது.

3. சுவிஸ் அரசு நமது இந்திய அரசுக்கு எழுதிய அதிகாரபூர்வ கடிதத்தின் அடிப்படையில் இச்செய்தி ஏற்கனவே கடந்த 22-5-2008-இல் டைம்ஸ் ஆப் இந்தியா உள்ளிட்ட நாளிதழ்களில் வெளியாகி உள்ளது.

4. ஆனால் இதற்கு நமது இந்திய அரசு எந்த பதிலையும் அனுப்பவில்லை. அதாவது 1947 முதல் 2008 வரை சுவிஸ் வங்கியில் வைப்பீடு செய்யப்பட்டுள்ள பணத்தின் விவரங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்கும்படி இந்திய அரசானது சுவிஸ் அரசுக்கு பதில் கடிதம் எழுதவே இல்லை. மேலும் இது குறித்து எதிர்க்கட்சியினரும் அப்போது எந்த ஆர்வமும் கட்டவில்லை.




காரணம், சுவிஸ் வங்கியில் உள்ள பணத்தில் ஒரு பெரிய சதவிதம் நமது இந்திய அரசியல்வாதிகளுக்கு சொந்தமானது. அப்பணம் நமது இந்தியர்கள் ஒவ்வொவருக்கும் சொந்தமானது என்றுதான் சொல்வதுதான் பொருத்தமானதாகும். தேர்தலின்போது மட்டும் கூப்பாடு போட்டார்கள்.






5. இந்தப் பணம் நமது நாட்டுக்குச் சொந்தமானது. இவ்வளவு பெரிய தொகையில் என்னென்ன செய்யலாம் தெரியுமா? இந்தியா தனது அயல்நாட்டுக் கடனை 13 தடவை திருப்பிச் செலுத்தலாம். இத்தொகையில் இருந்து வரும் வட்டியை கொண்டு நமது மைய அரசின் ஓராண்டு பட்ஜெட் செலவை பற்றாக்குறை இல்லாமலேயே சமாளிக்கலாம். மக்கள் எந்த வரியையும் அரசுக்கு செலுத்த வேண்டியிருக்காது. மேலும் 45 கோடி ஏழை குடும்பங்கள் ஒவொன்றுக்கும் தலா 1 இலட்சம் ரூபாய்வழங்கலாம்.

6. சுவிஸ் வங்கியில் மட்டும் 70 இலட்சம் கோடி ரூபாய் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று கணக்கெடுத்துக் கொண்டால், மற்ற வங்கிகளில் எவ்வளவு பணம் வைப்பீடு செய்யப்பட்டிருக்கும் ? சற்றே கற்பனை செய்து பாருங்கள். இந்தியர்கள் தங்கள் பணத்தை எவ்வளவு இழந்துள்ளார்கள்? நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது! இங்கு இன்னொரு இடர்பாடு உள்ளதும் கவனிக்கத்தக்கது. அதாவது சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் இறந்து விட்டால், அவரது கணக்கில் உள்ள பணத்திற்கு சுவிஸ் வங்கியே உரிமையாளராகிவிடும்.

7. சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்திய பண முதலைகள் ‘கர்ம வினை’ என்ற சித்தாந்தை சுத்தமாக மறந்து விட்டார்களா? ஊழல், சுரண்டுதல் ஆகிய முறையற்ற வழிகளில் கிடைத்த அப்பணத்தை அவர்கள் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ள நினைத்தாலோ/பயன்படுத்த முனைந்தாலோ அப்பணம் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எத்தகு கேடுகளை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் சிந்திக்க மறந்து விட்டார்கள்.

8. இந்த உண்மை அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் தங்கள் பங்குக்காக காத்திருக்கிறார்கள்.

அன்றாடங்காய்ச்சிகள் இதையெல்லாம் படித்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் அன்றைய நாள் கழிந்தால் போதும் என ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.

எனினும் இதுவும் ஒரு விடுதலை போராட்டமே”. ஒரு பெரும் பொரளாதார விடுதலைக்கான போராட்டம். யார் எப்படி முன்னெடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

9. சுவிஸ் வங்கியில் உள்ள மேற்படி பணம் இந்திய மக்களின் ரத்தத்திலும், வியர்வையிலும் விளைந்தது. அது மீண்டும் இந்திய நாட்டிற்க்கு கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோஷத்துக்கு இன்னும் கூட வலு சேரவில்லை என்பதுதான் இதில் மகா சோகம்.

10. இந்திய ஆட்சியாளர்கள் சரியான முயற்சிகளை மேற்கொண்டு ஜி 20, ஐஎம்எப், எக்மண்ட் குழு போன்றவர்களிடம் இந்தப் பிரச்சினையை முன்வைத்து வலியுறுத்தல்களைத் தொடங்க வேண்டும். அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி இந்த வேலையை எப்போதோ ஆரம்பித்துவிட்டன.




இந்தியா ஆரம்பிக்குமா ???????????


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

PLASE COMMEND IT.