பொதுவாக எழுதுவது என்பது ஒரு கலைதான். நாம் அனைவரும் மிகவும் விரும்பி செய்யும் செயல்களில் ஒன்று அதிலும் பலருக்கு இடது கைகளால் எழுதுவது என்பது மிகவும் விருப்பமான செயல் என்று சொல்லலாம் .
இப்படி நம் ஒவ்வொருவருக்கும் எழுதுவதில் பல வேறுபாடுகள் இருக்கின்றன . நம்மில் சிலர் இடது கை கொண்டு எழுதுவோம் ,பலர் வலது கொண்டு எழுதுவோம் .இதில் இன்னும் சிலர் இரண்டு கைகள் கொண்டும் எழுதுவார்கள். ஆனால் இரண்டு கைகளினாலும் எழுதுவது என்பது எளிதில் இயலாத ஒன்று.
ஆம் நண்பர்களே இந்த இயலாத ஒன்றை மிகவும் சிறப்பாக செய்து அனைவரையும் ஒரு காலத்தில் வியக்க செய்த நாம் அனைவரும் அறிந்த ஒருவர் இருந்திருக்கிறார். யார் அந்த அவர் என்ற கேள்வி உங்களின் அனைவருக்கும் மனதிலும் எழும்பி இருக்கும் . சொல்கிறேன் .அவர்தான் மகாத்மா காந்தி ஆம் இவர் இரண்டு கைகளால் எழுதும் திறமை உள்ளவராம் . இதில் என்ன வியப்பு என்றால் நம்மில் பலரும் இரண்டு கைகளால் எழுதுவது உண்டு ஆனால் அதிகமாக போனால் நமது பெயர் அல்லது சில வரிகள்தான் எழுதுவோம் ஆனால் இவர் ஒரே நேரத்தில் தொடங்கி அறுபது பக்கம் கொண்ட ஒரு மிகப்பெரியக் கட்டுரையை ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் எழுதும் அளவிற்கு திறமை கொண்டிருந்தாராம் . அவர் எழுதியக் கட்டுரையை சரி பார்த்த பலர் எந்த மாற்றமும் இன்றி ஒரே கை கொண்டு எழுதிய கட்டுரைபோல் இரண்டும் இருப்பதுக் கண்டு வியந்து போனார்களாம் .
இதில் இன்னும் சிறப்பு என்னவென்றால் அவர் இந்த திறமையை அங்கிலம் எழுதுவதில் காட்டவில்லையாம் . தமிழில் எழுதிதான் அனைவரையும் வியக்க வைத்தாராம் . இவருக்கு எப்படி தமிழ் தெரியும் என்று சந்தேகமும் பலருக்கு ஏற்ப்படலாம் சொல்கிறேன் இவர் முழுமையாக தமிழை தில்லையாடி கன்னியப்பச் செட்டியார் என்பவரிடம் கற்று இருக்கிறார் .
டிஸ்கி : ஒரு காலத்தில் இப்படியும் தலைவர்கள் எந்த துண்டுதலும் இன்றி விரும்பிப் படிக்கும் மொழியாக நம் தமிழ் இருந்திருக்கிறது . ஆனால் இன்றோ தமிழை வளர்ப்போம் என்று செம்மொழி மாநாடு அமைத்து தமிழின் பெருமைகளை ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டு இருகிறார்கள் இன்றைய தலைவர்கள் .
தினமணி நாளிதழில் -வெளியாகியுள்ளது நன்றி தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
PLASE COMMEND IT.