வியாழன், 20 ஜனவரி, 2011

ஒரு மணிக்கு 25 ஆயிரம் மைல் வேகம்......


ஒரு மணிக்கு 25 ஆயிரம் மைல் வேகம், என்ன விந்தையாக இருக்கிறதா, இது கண்டிப்பாக இரு சக்கர 
வண்டிக்கோ, மகிழுந்துக்கோ, விமானத்துக்கோ இல்லை. விண்வெளிக்கு போகும் ராக்கெட்  திரும்பி பூமிக்கே வராமலிருக்க தேவையான வேகம் தான் இது. 
 இந்த இடுகை ராக்கெட் புவியின் ஈர்ப்பு விசையை தாண்டி மேலே போவதை பற்றிய தகவல்.

 

இந்த அண்டத்தில் எல்லா பொருள்களுக்கும் ஒரு ஈர்ப்பு விசை இருக்கிறது, பூமியில் இருக்கும் விசை புவியீர்ப்பு விசை, அது தான் பொருள்களை சமநிலையில் வைத்திருக்க  உதவுகிறது என்பது நமக்கு எல்லாம் தெரியும். நியூட்டன் ஆப்பிள் பழத்தை மேலே எரிந்து கீழே திரும்பி வருவதை கொண்டு புவியீர்ப்பு விசையை குறித்து தனது ஆராய்சியை மேற்கொண்டார் என நமக்கு தெரியும், ஆனால் ஆப்பிள் ஈர்ப்பு விசையை மீறி எப்படி மேலே போகும், அப்படி போகவேண்டுமானால் அதற்கு எவ்வளவு சக்தி தேவை, எவ்வளவு வேகம் தேவை. இதையெல்லாம் ஆராயும் போது தான் விடுபடு திசைவேகம் என்ற ஒரு விஷயம் கண்டறியப்பட்டது. விடுபடு திசைவேகம்(escape velocity) எனப்படுவது ஒரு பொருளானது கோளின் ஈர்ப்பு  விசையினின்றும் விடுபட்டுச் செல்வதற்குக் கோளின் பரப்பில் அப்பொருளுக்கு அளிக்கப்படவேண்டிய மேல் நோக்கிய சிறுமத் திசைவேகம் ஆகும். 
ஒரு செகண்டுக்கு 11 கிலோமீட்டர் முதல் 11.3 கிலோமீட்டர் வேகத்தில் ராக்கெட் மேல்நோக்கி போனால் அது புவியை விட்டு விடுபடும் அதாவது கிழே விழாமல் புவியை தாண்டி செல்லும்.  இது சுமாராக ஒரு மணிக்கு 25 ஆயிரம் மைல் வேகம். …

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

PLASE COMMEND IT.