தான் சொன்னதை நிரூபித்தும் காட்டினார். வார்ட்டன் டான் பதக்கத்தை 1998இல் பெறும்போது, திருபாய் அம்பானி, 'பிறப்பு என்பது இன்றைய ஜனநாயக இந்தியாவில் ஒரு முக்கியமான விஷயம் இல்லை.
திறமையும் உழைப்பும்தான் முக்கியமான விஷயம் ' என்று சொன்னார். ஒரு பள்ளிக்கூட வாத்தியாரின் மகனாக குஜராத்தில் சோர்வாத் நகரத்தைச் சார்ந்த ஒரு குக்கிராமத்தில் பிறந்த அம்பானி, இன்றைக்கு லட்சக்கணக்கான தலித்துகள் செய்வது போல, காய்கறி விற்க ஆரம்பித்துத்தான் தன் வாழ்க்கையைத் தொடங்கினார்.
ஆனால் அவர் அதிலேயே உழலவில்லை. பிறகு வளைகுடாவில் ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் ஊற்றும் பணியாளராக ஆனார். பிறகு குமாஸ்தா ஆனார். அந்த பாதுகாப்பான வேலையை விட்டு, மீண்டும் இந்தியாவுக்கு வந்து தன்னுடைய எல்லா சேமிப்பையும் போட்டு ஒரு வியாபாரத்தை ஆரம்பித்தார். அவர் இறக்கும்போது, ரிலயன்ஸ் குரூப், மத்திய அரசாங்கத்தின் வருட வருமானத்தில் சுமார் 5 சதவீதத்தை கொடுத்துக்கொண்டிருந்தது. நிச்சயமாக, பிறப்பு மட்டுமே நமது முன்னேற்றத்தை நிர்ணயிக்குமென்றால், இப்படியெல்லாம் நடந்திருக்கவே நடந்திருக்காது.
ஆகவே, பிறப்பு முக்கியமில்லை ஆனால் முக்கிய்மானதும்தான். ஒருவர் பள்ளிவாத்தியாருக்குப் பிள்ளையாகப் பிறக்கலாம். ஆனால் அவரே பெரும் தொழிலதிபராகவும் அரசியல்வாதியாகவும் ஆகலாம். இருப்பினும், ஒருவர் ஒரு சுழலுக்குள்தான் பிறக்கிறார். ஒருவரின் வாழ்க்கைப் பயணம், ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டது என்று சொல்லலாம். திருபாய் பிறக்கும்போதே பெரும் தொழிலதிபராக ஆகும் கனவுடன் பிறந்தவர். அவர் தன்னுடைய கனவை தொடர்ந்து துரத்திக்கொண்டே இருந்தார். மனத்தில் பிறக்கும் நோக்கம், உள்மன பரம்பரைச் சொத்து, குழந்தையின் எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. சிறுபிள்ளைப் பிராயத்திலிருந்தே, ஏன் கருப்பப்பையிலிருந்தே, பெரும் தொழிலதிபராகும் கனவு அவர் மனத்தில் விதைக்கப்பட்டுவிட்டது. எகானமிக் டைம்ஸ் இதழின் பரிசை பெற்றுக்கொள்ளும்போது, 'இந்த பரிசை, ஒரு கிராமத்து பள்ளிக்கூட வாத்தியாரின் மகனாக ஏற்றுக்கொள்கிறேன். என்னைப்பொறுத்த மட்டில் இந்த பரிசுக்கு ஒரு எளிய அர்த்தம்தான் இருக்கிறது. கனவு காண்பவர்கள், உலகத்தையே வெற்றிபெறலாம் என்பதுதான் அது ' கத்தியவாடிப் பகுதிக்காரர்களுக்கே எதையும் துணிந்து கனவு காணும் உணர்வு இருக்கிறதோ என்னவோ. அது தான் திருபாய்க்கும் தொத்திக் கொண்டதோ என்னவோ ? இந்தக் கனவைத்தான் அவர் தன் வாழ்நாள் முழுவதும் துரத்திக்கொண்டே இருந்தார். இந்தக் கனவு, ஒரு மாட்டின் கழுத்தில் கட்டப்பட்ட கட்டையைப்போல, அவரது சுழலில் சுற்றவைத்தது.
பரம்பரைச் சொத்து என்பது இரண்டு பரிமாணம் கொண்டது. சமூகப்பரிமாணம், உள்மனப் பரிமாணம். திருபாயின் தந்தை பள்ளிக்கூட வாத்தியார். அந்த சமூக பரிமாணத்தை தாண்டிவிடலாம். ஆனால் உள்மனப் பரிமாணத்தை தாண்டவியலாது. இந்த பிரிவு இன்றைய தலித்துகளுக்கு பெரும் முக்கியமான விஷயம். அவர்கள் சமூகம் சொல்லும் பிறப்பால் வரும் பாரபட்சத்தைப் பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சில இடங்களில், டாக்கடைகளில் தனி டம்ளரில் டா குடிக்க வேண்டும். இந்த பழக்கத்தை நிறுத்த வேண்டும், இது போன்ற தீய பழக்கங்களை தீய பழக்கங்கள் என்று ஒத்துக்கொண்டு அதனை நீக்க முயலும் இந்திய சமூகத்தைப் பாராட்டவேண்டும். ஆனால், உள்மனப் பரம்பரைச் சொத்து என்னவாயிற்று ? எந்த விதமான மேல்ஜாதி ஆட்களும், தலித்துக்களை திருபாய் போலக் கனவு காணக்கூடாது என்று தடுக்கவில்லையே ?
தமிழ்நாட்டில், தலித் அறிவு ஜீவிகள் நடத்திய கூட்டம் ஒன்றில், ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. ஏன் இந்தியாவில் தலித் கோடாஸ்வரர்கள் இல்லை ? கார்களில் பெட்ரோல் போடும், எண்ணெய் டாங்கர்கள் சாரி சாரியாகச் செல்வதை பார்க்கும் லட்சக்கணக்கான தலித்துகள் இருக்கிறார்கள். ஏன் அவர்களில் யாரும், திருபாய் போல பெட்ரோலிய எண்ணெய் தொழிலதிபர்களாக ஆகக் கனவு காணவில்லை ? காரணம், உள்மனப் பரம்பரைச் சொத்து. அவர்களது பெற்றோர்கள் இப்படிக் கனவு காண தங்கள் குழந்தைகளை உந்தவில்லை.
கனவுகளே ஒருவரது வர்ணத்தை நிர்ணயிக்கிறது. மறைகளில் இருக்கும் சரியான வார்த்தை வாஸனா அல்லது, ஆழமான ஆசைகள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கனவுகளுடனும் ஆசைகளுடனும் பிறக்கிறார்கள். இவை பிறப்பின் போது கூட வந்தவையா, அல்லது சென்ற பிறப்பில் பெற்றதா, சிறுவராக இருக்கும்போது பெற்றதா என்பதெல்லாம் முக்கியமில்லாதது. திருபாய் சொல்வது போல, இப்படிப்பட்ட ஆசைகளே, ஒருவரது சுழலை நிர்ணயிக்கின்றன. அவரது வாஸனா, பெரும் தொழிலதிபராக ஆவது. அதுவே அவர் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதை நிர்ணயித்தது.
அரசாங்க வேலைகளில் கிடைக்கும் ரிசர்வேஷன் என்பது இருபக்கமும் கூர்மையான கத்தி. ஒரு புறம், தலித்துகள் சுயமரியாதை பெற உதவுகின்றன. ஒரு தலித் ஐ.ஏ.எஸ் ஆபீஸர் பல மேல்ஜாதி குமாஸ்தாக்களை மேலாண்மை செய்வது ஒரு தெளிவான செய்தியைச் சொல்கிறது. ஆனால், ஒரு ஐஏஎஸ் ஆபீஸரும் ஒரு தலித் தான். அவரால் சொந்தமாக ஒரு கொள்கையை வரையறுக்க முடியாது. பெருமை படைத்த வேலையாள் அவ்வளவே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
PLASE COMMEND IT.