புதன், 26 ஜனவரி, 2011

நாம் ஒவ்வெருவரும் வாழ்வில் ஒரு முறையாவது ரத்த தானம்... செய்வோம்



June 14 உலகம் முழுவதும் ரத்த தான தினமாக உலக சுகாதார அமைப்பின் மூலம் கடைபிடிக்க படுகிறது . ரத்த பிரிவுகளான A, B,O கண்டுபிடித்த கார்ல் லண்டிச்டைனர் அவர்களின் பிறந்த நாளான அன்று ரத்த தான தினமாக கடைபிடிக்கப்படுகிறது .

ரத்த தானம் என்பது நம்மால் இன்னொருவருக்கு ரத்தம் கொடுப்பதாகும் விபத்தில் அடிபட்டவர்களுக்கும் அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கும் ரத்தம் வெளியேறும் போது அவர்கள் உயிர்வாழ ரத்தம் தேவை படும் . ரத்த தானம் செய்பவர்களை கவுரவிக்கும் விதமாக இந்த நாள் கடை பிடிக்கப்படுகிறது . நாம் ஆபத்தில் இருப்பவர்களுக்கு ரத்தம் கொடுக்கும் போது நம்மால் ஒரு உயிர் வாழ்கிறது .
பெற்றோர்கள் மத்தியில் பிள்ளைகள் ரத்தம் கொடுக்கும் போது ரத்தம் கொடுப்பவர்களின் உடல் நிலை பலவீனம் அடையும் என்ற ஒரு தவறான எண்ணங்கள் காணப்படும் . ஆனால் ஒரு மனிதனின் உடலில் ஐந்து முதல் ஆறு லிட்டர் ரத்தம் வரை காணப்படும் அதில் முன்னூறு முதல் முன்னூற்று ஐம்பத்து மில்லி லிட்டர் ரத்தம் கொடுப்பதால் உடல் நிலை பலவீனம் அடையாது . மனித உடலில் ரத்தம் சுரந்து கொண்டே இருக்கும் . ஒரு முறை ரத்தம் கொடுத்தால் அந்த ரத்த குறுகிய காலத்தில் நமது உடல் சமன் செய்து விடும் .
மருத்துவர்கள் ஆலோசனை படி ஒரு திடகாத்திரமான மனிதன் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ரத்தம் கொடுக்கலாம் . ரத்தம் கொடுக்கும் போது நம்முடைய ரத்தம் பரிசோதனை செய்யப்படும் . இப்படி பரிசோதனை செய்வதால் நமக்கு ரத்தத்தில் நோய்கள் இருந்தால் கூட கண்டு பிடித்து சரி செய்து விடலாம் . ரத்த தானம் செய்வதால் ரத்தம் கொடுத்த நமக்கு மனதளவில் ஒரு மகிழ்ச்சி ஏற்படும் . ரத்தம் பெற்று கொண்டு ஆபத்து நிலையிலிருந்து மீண்ட அவர்களின் சந்தோஷமும் நம் வாழ்க்கையில் மிக பெரிய அனுக்கிரகமாகவும் இருக்கும் .
பல தொண்டு நிறுவனங்கள் ரத்த தானம் கொடுப்பவர்களை ஊக்குவிப்பதோடு ரத்தம் தேவை படுவோருக்கும் ரத்தம் ஏற்பாடு செய்யும் மிக பெரிய மனிதாபி மான பணியை செய்கின்றன . நாம் ஒவ்வெருவரும் வாழ்வில் ஒரு முறையாவது ரத்த தானம் செய்வோம் அனைவரின் வாழ்வையும் வசந்தமாக்குவோம் . இந்த ரத்த தான தினத்தில் நாம் ரத்த தானம் செய்வதை உறுதியெடுத்து கொள்வோம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

PLASE COMMEND IT.