வியாழன், 20 ஜனவரி, 2011

தெரியுமா? பாகிஸ்தானியால் எழுதப்பட்டது “சாரே ஜகான் சே அச்சா''


சர் அலாமா முகமது இக்பால்,  உருது, அரபு, மற்றும் பாரசீக மொழிகளில் இவர் எழுதிய கவிதைகள் தற்காலத்தின் பெருமைமிக்க இலக்கியப் படைப்புகள் என்று சொன்னால் மிகையாகாது.
ஆங்கிலேயர் ஆண்ட பிரிவினைக்கு உட்படாத இந்தியாவில், தற்போதைய பாகிஸ்தானில்  பிறந்தவர் இவர். மாணவப் பருவத்திலேயே மிகவும் திறமையாகத் திகழ்ந்த இக்பால் இங்கிலாந்தில் சட்டம் பயிலும் மாணவராக இருந்தபோதும் கூட தனது எழுத்துப்பணியினைத் தொடர்ந்தார்.  இக்பால் சட்டத்துறையில் தொழிலை ஆரம்பித்தார். ஆனாலும் அரசியல், பொருளாதாரம், வரலாறு, மெய்யியல், மற்றும் சமயம் ஆகிய துறைகளிலேயே அவர் நிறைய எழுதினார்.
நம்மில் நிறைய பேருக்கு முகமது அலி ஜின்னா தான் பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கையை முதலில் கோரியவர் என்று அறிந்திருப்போம். ஆனால்  அது உண்மை இல்லை 1930 இல் அலஹாபாத்தில் ஒரு கூட்டத்தில் இக்பால் அவர்களே இரு நாடு கோரிக்கையை வைத்து இஸ்லாமியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற தனது அவாவை வெளிப்படுத்தியவர். இந்த சிறு பொறியே பின்னாளில் பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவாக காரணம் ஆனது.
இவரைப் பற்றிய மற்றுமொரு முக்கிய தகவல், பிரசித்தி பெற்ற “சாரே ஜகான் சே அச்சா“  பாடலை இயற்றியவர் இவரே. ஜவஹர்லால் நேருவுக்கு மிகவும் பிடித்த இப்பாடல் அதிகம் அவரால் கையாளப் பட்டதை நாம் அறிவோம். இந்தப் பாடல் சுதந்திர இந்தியாவின் முதல்  நாடாளுமன்றக் கூட்டத்தில் பாடப்பட்டது.  அதிகார பூர்வமற்ற தேசியகீதம் என்று சொல்லும் அளவிற்கு எழுச்சி மிக்கப் பாடல். இந்திய  ராணுவ அணிவகுப்பின் போது பாடப்பெரும் அளவிற்கு புகழ் வாய்ந்தது. ராகேஷ் ஷர்மா விண்வெளியிலிருந்து அன்றைய பிரதமர் இந்திராகாந்தியுடன் உரையாடும் போது இப்பாடலைப் பாடி இந்தியர் என்பதில் பெருமிதம் கொண்டார். தற்போதைய இந்தியப் பிரதமரான மன்மோகன்  சிங்  அவர்களும் தனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பின் போது இந்தப் பாடலை ஒரு கேள்விக்கு மேற்கோளாகக் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

PLASE COMMEND IT.